நேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue


பாரபட்சத்துக்கு எதிராகவும், வீட்டுக்குள் ஆண்களிடம் அடிவாங்குவதை எதிர்த்தும், சித்திரவதைப்படுவதை எதிர்த்தும், நேபாளியப் பெண்கள் சென்ற செவ்வாயன்று, கருத்தடையை சட்டரீதியாக ஆக்குவதை கோரியும், பெற்றோர்களின் சொத்தில் சமபங்கு பெண்களுக்கும் கொடுக்க கோரியும் போராட்டத்தைத் துவங்கி உள்ளார்கள்.

ஆண்கள் பெண்கள் சமத்துவத்துக்கான தேசீய மாநாட்டில், ஸப்னா மல்லா அவர்களும், துர்கா கிமைரே அவர்களும் இந்த கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.

சென்ற வருடம் நேபாள பாராளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பெண்கள் சம உரிமை சட்டம், பெண்கள் கருத்தடை செய்வது கொள்வதையும், பெண்களுக்கு பெற்றோரின் சொத்துக்களில் சம உரிமை வழங்கப்படுவதையும் சட்டரீதியாக ஆக்கியது. ஆயினும், மேலவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் தோற்கடிக்கப்பட்டது.

பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் கருத்தடையை, பாலுறவு பலாத்காரம், தானாக கரு தங்காமல் போதல் போன்ற சில வருத்தமான சூழ்நிலைகளிலேயே செய்வதற்கு உரிமை வேண்டும் எனக் கோரி வருகிறார்கள்.

பெண்கள், குழந்தைகள் , சமூகநலத்துக்கான அமைச்சரான ராஜேந்திர காரேல் அவர்கள், இந்த மாநாட்டில் குழுமி இருந்த பெண்களுக்கு, அவர்களது கோரிக்கைகள் சட்டமாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். பெண்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் சம உரிமைகள் வழங்கப்படும் என்றும், சட்டங்கள் அவர்களுக்கான சுதந்திரத்தை உறுதியாக கொடுக்கும் எனவும் உறுதி மொழி தந்திருக்கிறார்.

இந்த மாநாட்டின் அமைப்பாளர்களின் அறிக்கைப்படி, நேபாளத்தில் சுமார் 80 பெண்கள், கருத்தடை செய்ததற்காகவும், ‘குழந்தைகளை கொன்றதற்காகவும் ‘ சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

**

Series Navigation

செய்தி

செய்தி