நிர்வாணம்

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

வ.ந.கிரிதரன் –


நாங்கள் உங்களை
இரட்சிக்க
வந்திருக்கிறோம்.
நாங்கள் உங்களைப்
பயங்கரவாதிகளின்
கொடூரமான கரங்களிலிருந்து
பாதுகாத்திட வந்திருக்கின்றோம்.
எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி
ஆணையின்பேரில்
நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள்.
ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள்.

அபயம் தரக் கண்ணபிரான்களற்ற
பாஞ்சாலிகளின்
நிர்வாணத்தில்
சிரிக்கிறது
புத்தரின் நிர்வாணம்.

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்