நிகழ்வெளியின் காட்சிகள்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பா.தேவேந்திர பூபதி


கரைந்து கொண்டே இருக்கிறது
பொழுது
அனைத்தையும் தனதாக்கி
கேள்வி எழுப்பிய படியே
மெளனத்தோடே அழிந்தொழிகிறது
நினைவுகள்
ஒவ்வொரு வினாடியும்
எதையாவது இயம்ப வேண்டுமென்று
எத்தனித்தபடியே.. .. .. ..

வெளியின் இயக்கத்தில்
அனைத்தும் இழந்த வண்ணம்
எதையும் அறியாமலேயே
ஓடித் திரியும் கால்கள்
இயக்கத்தின் குறிக்கோளறியாமலே
ஒவ்வொன்றாய்
விளக்கம் கோரி விடை காணும் முன்னரே
அடுத்த காட்சியின் யுத்தம் நோக்கீ
மூடிக் களையும் திரைகள்
உன்னையும் என்னையும்
நமக்கு யார்
அறிமுகம் செய்து வைக்கப் போகிறார்கள்
காலத்தை தவிர.

—-
kousick2002@yahoo.com

Series Navigation

பா .தேவேந்திர பூபதி

பா .தேவேந்திர பூபதி