நாகாிக மானுடமே!

This entry is part [part not set] of 16 in the series 20011029_Issue

வ.ந.கிாிதரன்


அந்திவானத்தினிச்
செம்மை
மறுபுறத்தே
மடையுடைத்த குருதியாற்றின்
வெள்ளமோ ?
இறுமாப்பில் வெ(ற்)றி மிதப்பில் துள்ளும்
மானுடத்தின்
யுத்தத் தாண்டவத்தின்
கோர விளைவோ ?
சிதறி வெடிக்கும் குண்டுகள்
அணு பிளந்து வெடிக்கும் குண்டுகள்
நீாின் ஆழத்திலிருந்து
சீறிப்பாயும் அத்திரங்கள்
விளைவித்த
பேரதிர்வின் வெளிப்பாடோ ?
ஆதி மானுடத்தின்
அறியாமையை எள்ளி
நகையாடும்
நாகாிகத்து
நவமானுடத்தின்
ஆர்ப்பாிப்போ ?
தாக்கத்திற்கும்
எதிர்த்தாக்கமுண்டு.
இது இயற்கை விதி.
சமனற்ற எதிர்த்தாக்கங்கள்
இது மனித விதியோ ?
கால வெள்ளத்தின்
துளிக்குள் இவ்விதமொரு
துள்ளிக் குதிப்பா ?
புறத்தை விடுவிக்க
முடியும் அகம்
புாிந்துணர்ந்தால்.
புாியாத அகத்தால்
பெருவெடிப்பில்
எாியும் என் அன்னை
பூமி.
நியூட்ரன் குண்டுகளில்
நாட்டியமாடியென்ன,
பாிசோதனைக் குழாய்களில்
பாப்பாக்களைப்
பிரசவித்தென்ன,
அன்றோமீடாக்களை
சுற்றி வந்தென்ன,
அணுவைப் பிளந்தென்ன,
அண்டத்தை அறிந்தென்ன,
அட மானுடமே! உன்
சக மானுடத்தை
அறிய முடிந்ததா ?
கையில் நெய்யை
வைத்துக் கொண்டு
வெண்ணெய்க்கலையும்
மானுடமே!கை
விளக்கிருக்க
வெளிச்சம் தேடும்
மானுடமே!
நாகாிக மானுடமே!
நீ கடந்து வந்த பாதையினை
ஒருமுறை
திரும்பிப் பார்!
நீ
செல்லவேண்டிய
பாதை இன்னும்
தொலைவிலிருப்பதைப்
புாிந்து கொள்.

Series Navigation