நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

பாரதிதேவராஜ்


சென்ற நூற்றாண்டின் இருணட பகுதியில் தமிழ்மொழி நசிந்து நலிவுற்ற காலத்தில் ஒளிவிளக்காய்க் கொங்கு நாட்டு சேலம் நகரில் உதித்தவர் பகடாலு நரசிம்மலு நாயுடு. தமிழால் எதுவும் கூடும் எனச் செயல்படுத்திக் காட்டியவர். அன்னியராட்சி காகிதத்தட்டுப்பாடு அசசக வசதியின்மை கொள்ளை நோய்களால் ஆட்களின்மை என எத்தனையோ இடர்பாடுகள் இருந்தபோதிலும் தன்னுடைய தலையாய கடமையெனத் தமிழுக்குச்சேவை செய்யும் முகத்தான் தொண்ணூற்று நான்கு நூல்களை நல்ல தமிழில் எழுதிப் பதிப்பித்த பெருமை இவரையே சாரும்

1884-ம் ஆண்டு ஏப்ரல் 12ம் நாள் அரஙகசாமி நாயுவுக்கும் இலக்குமி அம்மையாருக்கும் திருமகனாய் அவதரித்த நரசிம்மலு நாயுடு சேலம் கல்லூரி என்னும் அரசுப்பள்ளியில் பயின்றார். பள்ளிப்படிப்புக்குப் பின்னர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றார்.

படிக்கும் பருவத்திலேயே தமிழ் மொழியில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார்.யாப்பிலக்கணத்திலுள்ள ஐயங்களை நிவர்த்திக்கும் பொருட்டு “யாப்பிலக்கண வினா விடை“ என்ற

2
நூலை எழுதி,தமது தமிழாசிரியர் அமிர்தம் பிள்ளை உதவியோடு வெளியிட்டார். இதுவே இவரது முதல் நூல் என்பர்.

இவர் முதலில் ஆசிரியர் தொழிலை மேற்கொண்டார். ஆசிரியராய் இருந்த காலத்திலே மாணவர்கள் பயன்பெறும் வகையில் ”சிறந்த கணிதம்” என்ற ஒரு நூலை எழுதி வெளி யிட்டார்
ஆங்கிலேயர் பாரத நாட்டின் கலைச்செல்வங்களையும்
பல்துறை பற்றிய சிறந்த ஏட்டுச்சுவடிகளை கவர்ந்து அதன் பெருமை யறியாது செய்ய லண்டன் அரண்மனையிலும் அருங் காட்சியகத்திலும் சிறை வைத்தனர். இருப்பினும் ஒருசில நல்ல ஆங்கில மக்கள் அந்த ஏட்டுச் சுவடிகளின் துணை கொண்டு ஆங் கிலத்தில் இந்திய வரலாற்றை ஏதோ பெயரளவுக்கு எழுதிவைத் தனர். இதுகூட ஆங்கில அரசுக்குப் பயன்பட்டதே அன்றி மற்றவர்க்கு பயன்பெற முடியாமலிருந்தது.

இந்நிலையிலிருந்து நாளுடு தென்னகத்தின் பல இடங்க ளுக்குப் பயணம் மேற்கொண்டார் அஙகஙகு கோவில்கள் மடங் கள் கோட்டைகள் என அலைந்து பல சுவடிகளையும் கல்வெட்டுகளையும் ஆயந்து பல பெரிய மகான்களை ச் சந்தித்து

3
அளாவி முதன்முதலில் நல்ல தமிழில் ”தட்சண இந்திய சரித்திரம்” என்னும் நூலை வெளியிட்டார்.சுமார் ஆயிரம் பக்கங்க ளை கொண்ட இந்நூலை பல காலம் முயன்று எழுதிப் பதிப்பித்தார்.
”தட்சண இந்திய சரிதம்” என்கிற இந்தநூலில் “விசயசூசி கை“ என்ற தலைப்பில் அவர் தந்துள்ள பொருளடக்கமே முப்பத்திநான்கு பக்கங்களுக்குமேல் விரிகிறது. இந்த பொருள டக் கத்தோடு சிறந்த ஆய்வு நூல்களின் “பொருள்களஞசி யம்“ போல விவரமாக அமைந்துள்ளது.
தென் இநதியாவை பத்துபகுதிகளாகப்பிரித்துஅங்கேயுள்ள ஊர்கள் தெய்வங்கள் பக்தி ஆறுகள் நகரங்கள் அரசர்கள புலவர்கள் இலக்கியங்கள்புரவலர்கள் என அத்தனை விவரங்க ளையும் ஆதாரத்தோடு பேசுகிறார்.தென்னிந்திய வரலாற்றைச் சொல்லும் முதல்நூலென்றே இதைச்சொல்லலாம்.
இதுபோன்றே ”ஆர்ய சத்திய வேதம்” என்ற நூலும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது. இந்து சமய தத்துவம் சமயத் தலைவர்களின் வரலாறு இறைவன் இலக்கணம் ஆன்ம இலக் கணம் பக்தியியல்பு வேதம் புராணம் ஆகமம் இதிகாசம் ஆகிய வைபற்றி விரிவாக கூறும் அற்புத அரியநூல்

4
பெண்விடுதலை,பெண்கல்வி,பெண்மை,குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம் ஆகியவற்றுக்காக முதன்முதலாகக் குரல் கொடுத்தவர் “வங்க வேதியர் ராஜாராம் மோகன்ராய்“ இவர் தோற்றுவித்த பிரம்ம சமாஜத்தில் நரசிம்மலு நாயுடு பெரிதும் பங் கேற்று அதனுடைய எல்லாச் செயல்களுக்கும் துணை நின்றார்.
பெண்விடுதலைக்காக இவர் பெண்களுக்கு எனத்தனிப் பள்ளியை நிறுவினார்.இதன் கொள்கைகளை வலியுறுத்தி“நீதிக் கும்மி“ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
புத்தகங்களை எழுதிப் பதிப்பித்தது போலவே பத்திரிக்கைத் தொழிலிலும் நல்ல ஆர்வம் கொண்டிிருந்தார் சுதேசாபிமானி, கோவைஅபிமானி, கோவை கலாநிதி ஆகிய பதிதிரிக்கைகளை இருபதாண்டுகளுக்குமேல் நட்த்தியுள்ளார்.
பம்பாயில் நூற்பாலைகள் உள்ளதுபோன்றே கோவையி லும் நூற்பாலைகள் தோன்ற இவர் காரணமாக இருந்ததுமட்டுமல் லாது. முதல் நூற்பாலை தோன்ற இவரே தன் நிலத்தின் ஒரு பகுதியை தந்தார்.
இன்று கோவை மாநகராட்சி மன்றம் நடைபெறுகின்ற விக் டோரிய ஹால் விக்டோரிய மகாராணியின் 50 ம் ஆண்டு பொன்விழா நினைவாக இவர் கட்டியதே ஆகும்

5

ஆங்கில அரசு இவரது பொதுப்பணியை பாரட்டி இவருக்கு “ராவ்பகதூர்“ பட்டம அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மறுத்துவிட்டார்.
இத்தகு பெருமைகளுக்கு சொந்தக்காரரான நம் நாயுடு அவர்கள் 1922ம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் இயற்கை எய்தினார்.
தம் இறுதி முறியில் (உயில்) கூட ”எழைபால்ய விதவைப் பெண் களுக்கு கல்வியளித்து தையல் முதலானவற்றை கற்கச் செய்து அவர்களுக்கு புனர்விவாகம் செய்விக்கவும் அவர் ஏற்படுத்திய அறக்கட்டளை உதவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்
அந்த அறக்கட்டளை அவரதுவிருப்பத்தை இன்றளவும் நிறைவேற்றுகிறதாகத் தெரிகிறது.
——000——
கட்டுரை ஆக்கம்
பாரதிதேவராஜ் எம். ஏ 219 மணியகாரர் நகர் கோவை641025

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

பாரதிதேவராஜ்

பாரதிதேவராஜ்