நறுக் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

ஓட்டைவாயன்


* பல்லவன் பஸ்கள் புதுசாய் புரட்சியாய் ஆச்சு….
பாவிமக்க பர்செல்லாம் கடும் வறட்சியாய் ஆச்சு….
——————-
* தலைவலிக்கு ஒரு களிம்பு
முதுகுவலிக்கு ஒரு களிம்பு
மூட்டுவலிக்கு ஒரு களிம்பு
என்னே களி(ம்)ப்பான வாழ்க்கை
——————-
* இந்தியா ஒளிர்கிறது..
அது குண்டு வெடிப்பில் தெரியுது……
——————-
*இனி இப்படி வெடிக்குமோ..
அணுகுண்டு சோதனை…
1-2-3
——————-
* சுவாமிக்கு அலங்காரம்..
கால் கடுக்க காத்திருக்கும் பெருங்கூட்டம்..
போதுமடா சாமி..
——————-
* கலர் கலராய்ப்
கூடையில் எத்தனை பூ
எனக்குப் பிடித்தது..
பூக்காரியின் வெள்ளைப் பல் சிரிப்பூ..
——————-
*லஞ்ச அதிகாரியின் அறைக்கதவு….
திறக்க மறுக்கிறதே….
அதுவும் லஞ்சம் கேட்கிறதோ..
——————-
* மின்கட்டணத்தை ஏன் உயர்த்தினாய் கேட்டார் மக்கள்..
நிவாரணம் மின் வெட்டு என்றார் மந்திரி..

pbn1961@gmail.com

Series Navigation

ஓட்டைவாயன்

ஓட்டைவாயன்