நடை முறை

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

– வேதா மஹாலக்ஷ்மி


வீட்டில் நிறையும் ஜாதகக் குவியல்…
பத்தில் பத்தும் பழுதாகிட ஏங்கும்,
உன்னோடு பொருந்திப் போன மனது!
இளையவள் நான், எனக்கும்கூட இது புதிது!

அதிகாலை புன்னை தீபமும்
அவ்வப்போது அடிப் பிரதட்சணமும்
ஆசையாய் பார்த்திருக்கும்
உன் நேசக்கரம் மீள்வதற்காய்!

நீயோ
நடைமுறை வாழ்வோடு
நடந்து போகிறாய்… என்னைக்
கடந்தும் போகிறாய்!!!!

நின்று நிதானிக்க நேரமில்லை – என்னை
நினைத்திருக்க காலமில்லை….
நீ நடக்கும் முறைமைக்கு
நடைமுறை ஒரு தூண்டிலாய்!

இயங்கும் இயக்கம்
இல்லை என்று ஆவதற்குள்
சுழலும் சக்கரம்
சுற்று தீர்ந்து போவதற்குள்..
சும்மாவேனும் ஒரு பார்வை,
திரும்பித் தான் பார்த்துவிடேன்,
நானும் கொஞ்சம் சுகப்பட்டுப் பார்க்கிறேன்….
என் உயிரை
கொஞ்சம் உடலுக்குள் கோர்க்கிறேன்!!

veda
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலக்ஷ்மி

வேதா மஹாலக்ஷ்மி