தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

லிண்டோஸ்/லின்ஸ்பைர், டிம் பெர்னெர்ஸ் லீ, எக்ஸ்பி ஓட்டைகள், நவீன ஒயின், வை ராஜா ஃபை


**

லிண்டோஸ் இயங்குதளத்தை விற்பனை செய்யும் லிண்டோஸ் நிறுவனம், லிண்டோஸ் இயங்குதளத்தின் பெயரை மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறது.

விண்டோஸ் இயங்குதளத்தை விற்பனை செய்யும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம், லிண்டோஸ் என்ற பெயர் விண்டோஸ் பெயருக்கு அருகாமையில் அதனைக் காப்பி அடிப்பது போல உள்ளது என்று வழக்குத் தொடுத்திருந்தது. இதனை லிண்டோஸ் நிறுவனம் மறுத்திருந்தது. பின்னர் ஒப்புக்கொண்டுவிட்டது. அமெரிக்க நீதிமன்றம் ஐரோப்பாவில் இதன் மீதும் வழக்குத் தொடுக்க அனுமதியும் அளித்தது.

இதனால் வம்பு வேண்டாம் என்று லிண்டோஸ் நிறுவனம் தன் இயங்குதளத்தின் பெயரை லிண்ஸ்பைர் Linspire

என்று மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறது.

***

டிம் பெர்னெர்ஸ் லீ அவர்களுக்கு முதலாவது மில்லனியம் தொழில்நுட்ப பரிசு வழங்கப்படுகிறது. யார் இந்த டிம் பெர்னெர்ஸ் லீ ?

எம் ஐ டி அறிவியலாளரான டிம் பெர்னெர்ஸ் லீ அவர்களே முதன் முதலில் இணையத்தைக் கண்டுபிடித்தவர்.

செர்ன் பரிசோதனைச்சாலையில் 1990இல் வேலை செய்துகொண்டிருந்தபோது உலகளாவிய வலை WorldWideWeb என்ற ஒன்றை வடிவமைத்தார். இதுவே பின்னர் நெட்ஸ்கேப், மொஜில்லா, ஓப்பரா இண்டெர்நெட் எக்ஸ்புபோரர் ஆகிய அனைத்து நிரலிகளுக்கும் முதல்.

(செர்ன் பரிசோதனைச்சாலையில் உருவான தவறு எண்களே இன்றும் உபயோகப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக 404 என்பது அந்த பக்கம் இல்லை என்பதை சொல்ல உபயோகப்படுத்தப்படுகிறது)

மேலும், லீ இவ்வாறு கண்டுபிடித்த பின்னாலும் அதனை பேடண்ட் செய்யவோ காப்புரிமை வைத்துக்கொள்ளவோ அதனை வைத்து பணம் செய்யவோ முயற்சிக்கவில்லை. (மைக்ரோஸாஃப் முதலிய நிறுவனங்கள் கோடி கோடியாக அள்ளின)

அவரது முதலாம் கண்டுபிடிப்பை மாட்சிமைப்படுத்தும் வகையில் யூரோ 1 மில்லியன் வழங்கப்படுகிறது. இந்த பரிசு ஃபின்னிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

***

மைக்ரோசாஃப் விற்பனை செய்யும் எக்ஸ்பி இயங்குதளத்தில் மேலும் மூன்று அதி முக்கியமான ஆபத்தான் ஓட்டைகள் இருப்பதை அறிவித்திருக்கிறது.

இந்த ஓட்டைகள் மூலம் இணையம் வழியே வெளியார் ஒரு கணிணிக்குள் புகுந்து அங்கிருக்கும் முக்கிய தகவல்களை பெற முடியும் என்றும் அறிவித்திருக்கிறது.

***

ஒருகாலத்தில் ஒயின் தயாரிப்பாளர்கள் குதிரை இழுக்கும் வண்டிகளையும் மரப்பீப்பாய்களையும் கொண்டும் பாரம்பரிய அறிவைக்கொண்டும், பழக்கத்தைக்கொண்டும் ஒயின் தயாரித்து வந்தார்கள், ஒரு குறிப்பிட்ட வருடத்தின் ஒயின் ஏன் பல வருடங்களுக்குப் பின்னர் மிக முக்கியமடைகிறது என்பதும் பலர் அறியாததாக இருந்தது.

இன்று கலிபோர்னியாவின் ஒயின் தயாரிப்பாளர்கள் கணினி துணையையும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்பத்தினையும் நாடுகிறார்கள்.

நல்ல ஒயினைத் தயாரிக்க திராட்சைகள் மிகுந்த ருசியுடன் இருப்பது முக்கியம், ஆகவே எங்கு எவ்வளது தண்ணீரை ஊற்றவேண்டும் ஆகியவை முதல் இன்று கணினிகளே நிர்ணயிக்கின்றன.

வெகுவிரைவில் தமிழ்நாட்டிலும் ஒயின் தயாரிப்பிலிருந்து, முந்திரி தயாரிப்பு வரை, வாழைப்பழ பயிரிலிருந்து சர்க்கரை தயாரிப்பு வரை கணினியே நிர்ணயிக்கும் காலம் வெகு விரைவில் இல்லை.

***

வை ராஜா வை என்று வைஃபை wifi பரவிக்கொண்டிருக்கிறது. இதனை லிங்க்ஸிஸ் நிறுவனமும் போயிங்கோ நிறுவனமும் இணைந்து ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றன.

இதன் படி, சிறு தொழில்முனைவோர்கள் லிங்க்ஸிஸ் நிறுவனத்திடம் வைஃபை கருவிகளை வாங்கி தங்கள் இடத்தில் பொறுத்திக்கொள்ளலாம். லிங்க்ஸிஸ் போயிங்கோ நிறுவனத்திடம் பணம் கட்டி வைஃபை சந்தாதாரர்களாக பொதுமக்கள் ஆகிக்கொள்ளலாம். ஏதாவது ஒரு சந்தாதாரர் ஒரு வைஃபை இடத்தை பயன்படுத்திக்கொண்டால், லிங்க்ஸிஸ் நிறுவனம் அந்த தொழில்முனைவோருக்கு பணம் தரும்.

நல்ல திட்டம். வெகுவிரைவில் சென்னையிலும் இதுபோன்ற சூடான இடங்கள் தோன்றினால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அப்படி இல்லையென்றால் பெருந்தொழில்முனைவோர்கள் இன்றே யோசிக்க ஆரம்பிக்கலாம். (அதற்கு செல்லத் தமிழ்நாட்டில் மடிக்கணினிகள் அதிகம் ஆவது வேண்டும்)

***

Series Navigation

author

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

Similar Posts