பாண்டித்துரை
வணக்கம் நண்பர்களே, நான் தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன் என்று சொன்னது பிரபஞ்சன் அவர்களுடன் நெருங்கி பழகமுடிந்ததைதான். வாசிப்போம் சிங்கப்பூர்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தியா நாவலின் ஆசிரியர் பிரபஞ்சனுடன் 5 நாட்களுக்கான கலந்துரையாடலை சிங்கப்பூர் தேசிய நூலகவாரியம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி 07.07.2007 முதல் 09.07.2007 வரை ஜீராங் கிழக்கு நூலகப்பிரிவு அமோக்கியோ நூலகம் கவிச்சோலை மற்றும் யுனிசெம் யனிவெர்சிட்டி என்று நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் என் நினைவின் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் இங்கு நிறைய பேசவிரும்பவில்லை நான் பேசவேண்டும் என்றிருப்பின் அரசியல்வாதியாகியிருப்பேன். நான் எழுத்தாளன் உங்களை நிறைய பேசவைத்து நான் கேட்கவே ஆசை என்று வாசகர்களை மிகவும் நெருங்கி வந்து சந்தியா நாவல் பற்றி பின் எழுத்துலக ஆரம்பம் அதன் தொடர்சியான பயணம் என்று வாசகர்களின் பலதரபட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார், அதனுடன் தனது புன்னகையையும் சேர்த்து. இந்த கட்டுரை திண்ணை இணையத்தில் வெளிவரும் தருணத்தில் சிங்கையை மையம் கொண்டிருந்த புதுச்சேரி புயல் சென்னையை சென்றடைந்திருக்க கூடும் ஆனால் புயலின் தாக்கம்�
சந்தியா நாவல் எழுதிய தருணத்தில் அதற்காக கடுமையான வரவேற்பு கடுமையான எதிர்ப்பு இரண்டையும் பெற்றதாக கூறி மேலை நாட்டு இலக்கியங்களையும் பகிர்ந்து கொண்டார். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து பள்ளி முடிந்ததும் தினமும் கட்டாய திணிப்பாக நூலகம் செல்லநேர்ந்து பின் விசேச நாட்களில் தங்தையிடமிருந்து பெறும் புத்தகத்தை படித்து முடிந்ததுடன் அப்புத்கம் பற்றி தந்தையிடம் பகிர்ந்துகொண்டதே பிரபஞ்சனை எழுத்துலகினுள் இழுத்துவந்த பேரலையாம். இவரது ஆரம்பம் கவிதை பின் சிறுகதை என்று மாறி ஒரு கட்டத்தில் இவரது கவிதைகள் பிற கவிஞர்களின் கவிதையின் சாயலாக இருப்பதாக கருதி கவிதையெழுதுவதை நிறுத்திவிட்டு கவிஞர் மீரா அவர்கள் இவரது கவிதையை தொகுப்பாக கொண்டுவருவதையும் தடுத்து சிறுகதை உலகினுக்குள் முழுவதுமாக பயணப்படதொடங்கியது இன்று பல நாவல்கள் 300 சிறுகதைக்கும் மேல் எழுதியிருப்பினும் இதில் 10 சிறுகதைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றாலே எனக்கு போதுமான மனநிறைவு என்று வெளிப்படையாக பேசியது அனைவரையும் பிரபஞ்சன்பால் ஈர்க்கத்தொடங்கியிருக்கும். வானம்பாடி இயக்கம் ஆரம்பித்த தருணத்தில் அதில் தானும் ஒருவன் என்றும் அத்தருணத்தில் தான் மற்றும் அல்லாது உடனிருந்த எழுத்தாள நண்பர்களும் தங்களின் பெயரை மாற்றிவைத்துக்கொண்டது அப்படித்தான் பிரபஞ்சன் சிற்பி ஞாநி தோன்றிய கதையை மீட்டெடுத்தார் .மரபை அறிந்து மரபை நாம் மீறவேண்டும் மேலும் மொழியில் மாற்றங்கள் வேண்டும் என்றார். 2000 ம் ஆண்டுகால இலக்கிய உலகில் நன்னூலுக்குப்பின் இலக்கணம் மாற்றியமைக்கபடவில்லை இதுவும் தமிழ் இலக்கிய வளர்சிக்கு ஒரு தடை என்றார். மொழியை அறிஞர்கள் யாரும் தோற்றிவிக்க வில்லை சாதராணமான மக்கள் தோற்றிவித்தது. ஒரு இலக்கியத்தின் முக்கிய நோக்கம் மனிதனை மேலும் மனிதமாக மாற்றுவதாகும் இலக்கியத்தால் என்ன சாதிக்கமுடியும் என்றால் மனிதனை மேன்மைப்படுத்த முடியும் என்றதுடன் எழுத்தாளனுக்கு வாசிப்பு அவசியம் என்றும் எழுத்து என்பது ஒரு கலை அதை பழக்கப்படுத்தவேண்டும் எழுத்தாளன் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் விளையாட செல்வது போல் தன்னை குறிப்பிட்ட நேரத்தில் அமர்ந்து எழுத பழக்கிக்கொள்ள வேண்டும். மேலும் கவிஞர்கள் கவிதையோடு நின்று விடாமல் சிறுகதைகளையும் படிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். நேற்று நான் எழுதிய எனது கதைகளை நான் திரும்பவும் படிப்பதில்லை என்றார். அதற்கு காரணம் அடுத்த புதியகதை அவரை வந்து ஆக்ரமிப்பதுதானாம். கோணங்கி போற்றவர்களின் எழுத்துகள் புரியவில்லை என்றபோது எழுத்தாளன் என்பவன் புரியாத எதையும் எழுதுவதில்லை . வாசகரிடம் தான் புரிதல் தேவைப்படுகிறது. எழுத்தாளன் அடுத்தகட்ட நகர்வை தேடி சில மாற்றங்களை எதிர்பார்ப்பதால், வாசகன் வாசிக்க வாசிக்க புரிபடும், ஆக புரியவில்லை என்பது வாசகனின் தவறேயன்றி எழுத்தாளனின் தவறு இல்லை என்றும், மேலை நாட்டு இலக்கியம் போல் ஏன் தமிழில் தாக்கங்கள் நிறைந்த இலக்கியம் தோன்றவில்லை என்றபோது ஜரோப்பிய கண்டங்கள் சுக்கு நூறாக சிதறியபோது அங்கு ஒவ்வொரு வீடுகளிலும் துயரம் இருந்ததே காரணம் அத்தகு துயரத்தை நாம் காணததும் நம்முடைய எழுத்துகளில் பல மேலை நாட்டு இலக்கிய சாயலை பிரதிபளிப்பதும் காரணம் என்றார்.
கவிதை பற்றிபேசும் போது எழுத்தாளர் நகுலன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நகுலனை முதலில் படியுங்கள் என்றார். நவினத்துவம் பின் நவினத்துவம் பற்றி கேட்டபோது கவிதைககள் எப்படிவேண்டும் என்றாலும் இலக்கியத்தை சிதைத்து செல்லட்டும், ஆனால் அதனை இலக்கியத்திற்குள் அடக்கமுடியும் என்று எழுத்தாளர்கள் ஞானகூத்தனையும் மனுஸ்யபுத்திரனையும் உதாரணப்படுத்தி பின் பெண்ணிய எமுத்தாளர்கள் குட்டிரேவதி சுகிர்தாராணியின் கவிதைகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். பின் நண்பர் ஒருவர் குஸ்பு மூலமாக எழுந்த கற்பு பற்றிய கருத்தையும் சில்பாசெட்டியின் முத்தவிவகாரத்தை எழுத்தாளன் என்ற முறையில் ஆதரிக்கிரீர்களா என்ற போது நான் ஆதரிக்கிறேன் என்றார். அதனை தொடர்ந்து சிரிப்பலை எழுந்து அடங்கியது. குஸ்புவை உங்களின் சகோதரி ஸ்தானத்தில் வைத்து பாருங்கள். உடனே நீங்கள் நீதி தராசை தூக்க வேண்டாம். குஸ்புவை சினமா நடிகையாக அங்கிகரித்தீர்கள் குஸ்பு நடித்த திரைப்படங்களை ஓடிப்போய் பார்க்கிறீர்கள் அப்படி இருக்கையில் குஸ்பு கற்பு பற்றி மட்டும் பேசக்கூடாதா? குஸ்புவுக்கு கற்பு பற்றி பேச உரிமையில்லை என்றால் அந்த உரிமை பிரபஞ்சனுக்கும் கிடையாது என்றார். குஸ்பு கற்பு பற்றி பேசியது ஒரு பத்திரிக்கை கணக்கெடுப்பின் அடிப்படையில் என்றார். தனிப்பட்ட ஒருவரை எப்படி நீங்கள் மற்றும் பத்திரிக்கைகள் தலையிடலாம் அந்த உரிமையை யார் உங்களுக்கு யார் குடுத்தது . ஆனால் குஸ்பு கற்பு பற்றி மட்டும் பேச உரிமையில்லை. மனுஸ்ய புத்திரன் சிங்கப்பூர் வந்தபோது சுந்தாராமசாமி நகுலன் போன்றவரை கவிஞராக ஏற்றுக்கொள்வதாகவும் வைரமுத்துவை கவிஞராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். அது பற்றி உங்களின் கருத்து என்ன என்ற போது நானும் அவரை கவிஞராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். பிறரை படிப்பதால் அதன் பாதிப்பு எங்களின் எழுத்திலும் இருக்குமா என்றபோது ஆமாம் ஆரம்பகாலகட்டத்தில் இருக்கும் பின் செல்ல செல்ல ஒருகட்டத்தில் உங்களில் இருந்து உங்களின் சுயம் வெளிப்படும் என்றார். அவர் எழுதிய அகழியை நாடகத்தைப்பற்றி கூறி அந்நாடகம் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் அரங்கேற்றியதையும் அதானல் அவருக்கு கிடைத்த வரவேற்ப்பையும் அழகியலுடன் பகிர்ந்து கொண்டார். பின் இனி அவரது எழுத்தில் வெளிவர இருக்கும் நாவல் பற்றியும் சிறுகதை தொகுப்பற்றியும் பகிர்ந்து கொண்டார். வாசகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பது அவரது தாத்தவிற்கு பேரன் சொன்ன கதை எனும் சிறுகதைதொகுப்பைத்தான். டிசம்பர் மாதத்தில் வெளிவரும் வாய்ப்பு உள்ளதாக உறுதியளித்தார். மக்கள் தொலைக்காட்சியில் சிறந்த புத்தகங்கள் பற்றி அறிமுகபடுத்திவருவதாகவும் அப்படி சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் பின்சீட் சிறுகதை தொகுப்பை அறிமுகபடுத்தியவிபரத்தை தெரிவித்ததுடன் சிங்கப்பூரின் சிறுகதை பற்றியும் சிறுகதை எழுத்தாளர் பற்றியும் ஆர்வமாக கேட்டு அறிந்து கொண்டார். மொழியை ஒரு கருவியாக உபயோகிக்ககூடாதா என்றபோது மொழி உணர்வுப்பூர்வமானது என்று உணர்வுப்பூர்வமாக உணர்தியதோடுமில்லால் இப்படி நான் கூறுவதால் என்னை தமிழ் வெறியன் என்று அழைத்தாலும் நான் அதற்கு மகிழ்ச்சிஅடைவேன் என்று புன்னகைத்தார். இலக்கியம் சார்ந்த உலக திரைப்படங்களை பகிர்ந்து கொண்டதுடன் நம்மால் பாரதியை முண்டாசு மற்றும் கோட் ஆகியவற்றை கழட்டிவைத்து உறங்காமல் திரையில் காட்டமுடியவில்லை என்று தமிழ் சினிமா போக்கு பற்றியும் பகிர்ந்து கொண்டார். எழுத்தாளன் அவனது எண்ணங்களை எங்களின் மேல் திணிப்பதாகவே உணர்கிறோம் என்றபோது எழுத்தாளன் அவன் பார்ப்பதைதான் உங்களுக்கு தருகிறான். உங்களை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற யாரும் கட்டாயபடுத்தவில்லை என்றார். உங்களுக்கு வேண்டியது என்னிடமிருந்நதால் எடுத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் என்னை தூக்கி எறிந்துவிடுங்கள் அதற்காக நான் வருந்துவது கிடையாது என்றார்.
மேலும் பிரபஞ்சனுடன் அமோக்கியோ நூலகப்பிரிவில் இருந்து கவிச்சோலை அமைப்புக்கு நண்பர்களுடன் 20 நிமிடபயணமாக வாகனத்தில் சென்ற தருணதில் அவரை அதிகமாக பேசவைத்து நாங்கள் மௌனமாக கேட்டுக்கொண்டு வந்தது மிகவும் மகிழ்வைதந்தது. பெரும்பாலானவை அவரது பால்யகாலத்து நினைவுகள்.
பிரபஞ்சனுக்கு ஒரு வெள்ளைப்பேப்பர் ஒரு வெளிநாட்டுப்பேனா சர்கரை இல்லாத காப்பி இந்த மூன்றுமிருந்தால் அவரது வாழ்க்கைக்கு போதுமானதாம். மேலும் மரணத்திற்கு பயப்படுகிறார். இனி அவர் வெல்லவேண்டியது மரணத்தைதானாம்! பிரபஞ்சனின் வருகையில் பெண்ணியம் சார்ந்த பேச்சுகள் அதிகமாக பதியபட்டதால் பல்வேறு அலைகளை ஏற்படுத்தியுருக்க கூடும். பெண்ணியம் என்று தனித்துப்பார்க்காமல் மனிதமாக பார்க்க முயிற்சித்து புரிந்துணர்வு பாதையில் பயணப்பட்டால் பிரபஞ்சன் தொட்டுவிடும் தூரம்தான்.
இந்நேரத்தில் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கும் சிறப்பான முறையில் நிகழ்வுகளை நட்த்திச்சென்ற அதன் அதிகாரிகளான திரு.மணியம் திருமதி புஷ்பலதா மற்றும் சக நூலக அதிகாரிகளுக்கும் வந்திருந்து நிகழ்வை சிறப்பித்த எழுத்தாளர்கள் வாசகர்களுக்கும் எல்லாவற்றின் மேலாக எழுத்தாளர் திரு பிரபஞ்சனுக்கும் என் சார்பிலும் எனது நண்பர்கள் சார்பிலும் திண்ணை வாயிலாக என் நன்றியை பதிவுசெய்கிறேன்.
நன்றி நண்பர்களே : பாண்டித்துரை
படங்கள் : பிரவீன் குமார்
http://pandiidurai.wordpress.com
http://begiinning.page.tl
pandiidurai@yahoo.com
- தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன்
- அ.ரெங்கசாமியின் “லங்காட் நதிக்கரை” நாவல் : கொஞ்சமாய்க் கற்பனை கலந்த வரலாற்று ஆவணம்
- சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை
- சூட்டு யுகப் பிரளயம் ! உலகலாவிய காலநிலை மாறுதல்கள் -4
- கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
- பெண்கள் படைத்த இலக்கணநூல்களின் அழிப்பும் தொடர் வாசிப்பத் தள மறுப்பும்
- நட்சத்திரத் திருவிழா – 2007
- கோகுலக் கண்ணன் கவிதை நூல் வெளியீடு
- யூலை 83 இனப்படுகொலை -கலந்துரையாடல்
- மறைந்த கவிஞர் மாலதியின் மொழிபெயர்ப்பு நாடகம் “மாதவி” அரங்கேற்றம்
- வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை
- கடிதம்
- படிக்காசு
- அந்த நாள் ஞாபகம் புத்தம் புதிய புத்தகமே…
- கவிதை மொழி – ஒரு கருத்தாடல்
- கால நதிக்கரையில்…….(நாவல்) அத்தியாயம் – 14
- இராசலிங்கத்தின் “தொலைதூர கனவுகள்”
- சிவாஜியை வரவேற்போம்
- அன்புடன்…..
- ‘ ஒரு தேவதை பூதமாகிறாள்……’
- காதல் நாற்பது – 29 எந்நேரமும் உன் நினைவு !
- வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்
- ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)
- இணக்கம்
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 9 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- மாத்தா-ஹரி அத்தியாயம் 18