தெரிக்கும் உவமைகள்…

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

ராம்ப்ரசாத்அடைமழைக்குப் பிறகு
தேங்கி நிற்கும் மழை நீரில்
தலை நனைக்கும்
சிட்டுக்குருவிகளின் தலையுதறலில்
தெரிக்கிறது ஒரு கவிதைக்கான‌
உவமை…
உன் குளியல்களில் நனைந்து
தோட்டத்து கொடிகளில்
காயும் துணிகளை
நீ உதறுகையில்
அவ்வுவமைகள் பயன்படலாம்
என்றே சேகரிக்கிறேன்
அவைகளை…

– ராம்ப்ரசாத்

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்