தீயாய் நீ!

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

கீதா ஷங்கர்


ஒவ்வொரு முறையும்
கை குலுக்கி போய் விடுகிறாய்.
உனக்கெங்கே தெரியும்
உள்ளமும் குலுக்கியது?
உடலையும் குலுக்கியது?

தீயாய் நீ-
ப்ற்றி எரிகிறேன்,
அணை!

நீ
எல்லை தாண்டிய
தீவிரவாதி!
என்னை ஆட்டிப்படைக்கும்
பயங்கரவாதி!

எல்லைக் கோடுகளைக்
கடக்க முயலுகையில்
காமப்போர்!
முடிவு எப்போதும்
ச(ம)ரசம்!

கீதா ஷங்கர்geethashanker67@hotmail.com

Series Navigation