தெருவிளக்கு
முதுகிலோ மூடை அழுக்கு
மூக்கை பொத்தி
முகஞ்சுளிப்பதோ
முன்னிருப்பவனை நோக்கி
நின்ற இடத்திலிருந்து
நிமிர்ந்து பார்
ஊரெல்லாம் ஒளியூட்டியும்
காலடியில் கிடந்த
கருமைக்காக
தலைகவிழ்ந்த
தெருவிளக்கை.
——————————————————————–
மேகத்தின் காதல்
மேகமாக தனை மறந்து திரிந்து
மகிழ்ந்திருந்தவளை
தென்றலென வந்து
தெவிட்டாத ஆசையூட்டி
மறந்து சென்றவனே
மழையெனக் கண்ணீர் வடிக்கும்
மங்கையைக்காண மாட்டாயோ ?