திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

செல்வி


திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

கடிதம் பகுதிக்கு.

திரு பி.கே.சிவக்குமார் அவர்கள் மலர்மன்னன் பற்றி எழுதிய கடிதத்தில் வாஸந்தி போன்றோர்கள் எழுதாமல் போய்விடுவார்கள் என்பது பற்றி கவலையுடன் கூறும் அளவுக்கு ஏதும் நடந்துவிட்டதாக தெரியவில்லை. திண்ணை மதசார்பின்றி பல்வேறு மத வாதங்களை அறிமுகப்படுத்தி திரு நாகூர் ரூமி திரு நேசகுமார், திரு.வக்காபி திரு.சூபிமுஹம்மது போன்றோர்களின் கடுமையான விவாதங்களை பாகுபாடின்றி வெளியிட்டிருக்கிறது. அதன் மூலம் என்போன்றோர் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளமுடிந்தது.

இப்படி இருக்கையில் மதம் சார்ந்த அடையாளத்தை திண்ணை மீது சுமத்துவது மிகவும் தவறு என்றே நான் நினைக்கிறேன்.

வாஸந்தியின் கட்டுரை ஏன் ஸீரி தேவியை தாண்டி சென்றது என்பதையும், மலர்மன்னனின் கட்டுரைக்கு அவர் இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்பதையும் பார்க்கவேண்டும். மதசார்பின்மைபற்றி தெளிவான கருத்து இன்னமும் புரிந்தபாடில்லை என்றே எண்ணுகிறேன்.

மதசார்பின்மை தற்போதைய தமிழக அரசியல் வாதிகளின் இப்தார் நொன்பு நிகழ்ச்சி போல் அல்லாமல்.(இந்துக்களின் எதாவது ஒரு மதநிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளுகிறார்களா? வட இந்திய தலைவர்கள் பரவாயில்லை திருமதி சோனியா காந்தியும் பிரதமரும் துர்கா பூஜா நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்) ஓட்டு அரசியல் அல்லாததாக இருக்கவேண்டும். அது மகாத்மா காந்தியோடு பொய்விட்டது.

எந்த தனி மனிதனும் மதம்சார்ந்து மட்டும் நடந்து கொண்டிருந்தால் பிழைப்புக்கு உதவாது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். எந்த இயக்கமும் மதம் சாரமல் நடந்து கொண்டிருந்தால் பிழைப்புக்கு உதவாது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். இதுதான் பிரச்சினை.

இரண்டு விதமான சிந்தனைகளையும் அனுமதிக்கிற திண்ணையின் பணிதொடரவேண்டும் என்றே விரும்புகிறேன்.

அன்புடன்
செல்வி


rm_slv@yahoo.com

Series Navigation