திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue


திருச்சி கார்முகில் புத்தகநிலையமும் உயிர்மைபதிப்பகமும் இணைந்து 14.3.04 மாலை திருச்சியில் நெடுங்குருதி நாவல் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ராஜாஹாலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் டாக்டர் பூரணசந்திரன். பா.வெங்கடேசன் இருவரும் நெடுங்குருதி பற்றிய தனது பார்வைகளை முன்வைத்தனர். விழாவில் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வாசகர்களுடன் கலந்துரையாடினார். நெடுங்குருதி நாவல் பற்றி பா.வெங்கடேசன் குறிப்பிடும்போது இந்த நாவல் யதார்த்த மரபை மீறும் என்று தான் மிகவும் எதிர்பார்த்தாகவும் ஆனால் ராமகிரூஷ்ணனே கூட மீற முடியாதபடி தமிழில் யதார்த்தம் இறுகிகிடப்பதாக தெரிவித்தார். மேலும் நாவல் இரண்டு வேம்பலைகளை பற்றியதாக இருப்பதாக உள்ள அத்தியாயமே மொத்த நாவலுக்கும் ஒரு இணைப்புசங்கிலியாக உள்ளது அதைபின்தொடரும் வாசகன் நாவலின் புதிய சாத்தியங்களை காண்பான் ஆனால் நாவலில் ஒருமையில்லை, தனித்தனியாக இணைவற்றுகிடக்கிறது. மொழியில் விளையாட்டு நடந்திருக்கிறது.இதன் பேண்டசி தான் நாவலை புதியதாக்கியுள்ளது. அவ்வகையில் இது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று என்றார். பூரணசந்திரன் இந்த நாவல் தமிழில் வெளிவந்துள்ள முதல் மேஜிக்கல்ரியலிச நாவல். ஆரோக்கியமான முறையில் இந்த எழுத்து பயன்படுத்த பட்டுள்ளது. நாவலின் கதை சொல்லும் முறை வாசிப்பில் நல்ல அனுபவம் தருகிறது. இதன் மாயப்படைப்பாக்கம் மரபானமுறையில் சங்கஇலக்கியபாரம்பரியத்தை போல பெயர்களை விலக்கி நிகழ்வுகளை முன்வைக்கிறது. புறநிகழ்வுகள் அதிகம் பதிவு செய்யப்படவில்லைஇ நாவலில் உள்ளோடிய துக்கம் போதுமானதாகயில்லை. நாவல் தன்அளவில் ஒரு மயக்கத்தை தருகிறது மனதிற்கு பிடித்தமானதாகயிருக்கிறது என்றார் இதை தொடர்ந்து ராமகிஷ்ணன் தனது உரையில் யதார்த்தவாதம் பற்றிய நம் கவனம் மேற்கத்திய தாக்கத்தால் தான் பெரிதும் உருவாகியிருக்கிறது. மரபாக நாம் யதார்த்தத்தையே இன்றுள்ள வரம்பில் புரிந்து கொண்டிருக்கவில்லை நமது யதார்த்தமே மிகைப்படுத்தபட்டது தான். நாட்டார்கதைமரபுகள் அதை தான் வெளிப்படுத்துகின்றன மேலும் நாம் ரியலிசகதை சொல்லலை பெரிதும் விரும்பகாரணம் அது காண் உலகை மட்டுமே வெளிப்படுத்துவது. நமது ஆழ்ந்த நம்பிக்கைகளோ, காண்உலகிற்கு வெளியாக அறிதலோ உள்ள படைப்புகள் நமக்கு உடனடியாக நுகரமுடியாமல் போனதால் அதை துண்டிக்கவும் விலக்கவும் முயற்சிக்கிறோம். இந்த நாவல் தன்னளவில் கதை சொல்லலின் புதிய சாத்தியங்களை முயன்றிருக்கிறது என்றார் . யதார்த்தவாதம் பற்றியும் நாவலின் வரும் வேம்பர்கள் பற்றியும் எழுத்தாளனின் பார்வையில் சமகாலம் என்பது என்ன என்பதை பற்றியும் கேள்விகள் எழுந்தன. நான்குமணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் இருநுாறு பேர்கலந்து கொண்டார்கள்.

—-

Series Navigation