திருக்குரானில் மனுதர்மமா…

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

சூபிமுகமது


வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை, திருக்குரான் பன்றியை அவமதிப்பதற்கு ஈடுசெய்வதாக குறிப்பிடுகிறார். மனுதர்மம் பிராமண ,சத்திரிய,வைசிய,சூத்திர பஞ்சம பிரிவினயையும் கொடுந்தீண்டாமையையும் பிறப்பின் அடிப்படையில் நிறுவுகிறது.திருக்குரான் இந்த மனுதர்ம கொடுஞ்கோன்மையை வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில் உருவாக்குகிறதுஎன்பதை வகாபி மறைமுகமாக நிறுவுகிறார். அல்லாவின் வார்த்தைகளில் மனுதர்ம கொடுஞ்கோன்மையா…

ஹமீதுஜாபர், இபுனுபசீர் போன்றோர் திருகுரான் அல்லாவின் வார்த்தைகள் என்பதற்கு எந்தவித ஆதாரத்தையும் அளிக்கவில்லை. ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைப்படி அணுகினால் நபிமுகமதின் வாழ்வியல் சூழல் பதிவுகள்தான் திருகுரான் என்பது உறுதிபடுகிறது. உள்மனம் வெளிமனம் என்பதை இவ்வாறாகவும் புரிந்து கொள்ளலாம்

நபிமுகமதுவின் நனவுமனம்(அறிவுரைகள்,கொள்கைவிளக்கங்கள்) நனவிலிமனம்(ஆழ்மனதில் பதிந்த புனைவுமொழிகதையாடல்கள், விசித்திர சம்பவங்கள்)கனவுமனம்(எதிர்காலம்,மறுமை,கியாமத்நாள்) என்பதாகவே திருக்குரானிய வசனங்கள் அனைத்தும் அமைந்துள்ளன.மேலும் நபிமுகமதுவின் அந்நியப்பட்டமனம்,பிளவுண்ட மனம்,அபத்தமனம்,சமூகமனம் சார்ந்த கூறுகளும் ஒன்றிணைந்துள்ளன.

ஜாபர் திருக்குரானில் அறிவியல் பற்றி மாரிஸ்புகைல் வழி புளகாங்கிதம் கொள்கிறார். ஏழாம் நூற்றாண்டில் திருக்குரான் உருவாகிறது. அதற்கு முன்பான அண்டங்கள்,பிரபஞ்சம்,சூழலியல் மருத்துவவியல்,கருவியல் உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்த அறிவியல் வளர்ச்சியை கணக்கில் எடுத்தபிறகுதான் இதனை பேச முடியும்…

திருக்குரானின் விஞ்ஞானம் இயற்கை விஞ்ஞானமாகும்.பார்த்ததை அறிந்ததை உட்கிரகித்ததை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையானது. ஆனால் நவீன விஞ்ஞானம் நிரூபணத்தன்மைகொண்டது. மேலும் திருக்குரானின் பலப்பலக்கூறுகள் நவீன விஞ்ஞானத்துக்கு எதிராகவே உள்ளது.இது பற்றி விவாதிப்பது தனிவிசயம்.

ஜாபர் போன்றவர்கள் நவீன விஞ்ஞானம் கண்டடைந்த உண்மைகளை எடுத்துக்கொண்டுபோய் திருக்குரான் வசனத்தில் ஒட்ட வைத்துக் கொள்கிறார்கள்.இது சூடோ சயிந்ஸ்-போலி அறிவியல் வகைப்பட்டாதாகும்.இந்துமதத்தில் விஞ்ஞானம் என்றும் ஏகப்பட்டபேர் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹெச்.ஜி.ரசூலின் விவாதங்களின் வழியாக கண்டடையப்பட்ட 1)வெட்டிப் போடப்பட்ட பறவையின் உடல் துண்டுகள் ஒன்றாக சேர்தல் 2) ஆண்துணையிண்றி அன்னைமர்யத்தின் கர்ப்பம் 3) மனிதர்களை குரங்குகளாகயும்,பன்றிகளாகவும் ஆக்கப்பட்ட மந்திரவாதம் வகாபி குழும அறிவுஜாம்பவான்களின் பதில் என்ன…

அல்லாவின் மொழியாடல்…4

லஹப் அத்யாயம் 111

அழியட்டும் அபுலஹபின் இரு கரங்கள்….. அவனும் அழியட்டுமே..
விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான்.. (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்துவிடுவாள்)

1)கருணையாளன் அல்லா தெருச்சண்டை போடும் ஒரு மனிதனப் போல் சாபமிடுகிறானே..
இது அல்லாவின் வார்த்தையா…இதுதானே தொழுகையிலும் பயபக்தியோடு அரபியில் ஒதப்படுகிறது…

2)ஒரு பெண்ணின் மீது கழுத்தில் ஈச்சங்கயிறை முறுக்கேற்றி கொலைக்கு வழிவகுப்பதா..
இந்திய கிரிமினல் சட்டப்படி நடவடிக்கைக்குரியதல்லவா…

எனவே இது அல்லாவின் வார்த்தையா… தவறு எங்கு நடந்துள்ளது…

Series Navigation