நாகரத்தினம் கிருஷ்ணா
உலகின் பிடியினை உதறிச் செல்வது
தியானமென்று தேர்ந்திட வேண்டாம்!
இயற்கை ஏட்டின் எல்லாப்பக்கமும்
உள்ளம் வருடும் உருத்திராட்சமே!
ஈரக்காற்று இதயம் சீண்ட
கடற்கரை மணலில்
கால்களைப் புதையுங்கள்!
ஆடைகட்டிய பாலென ஒளிரும்
அழகு நிலாவை
மேகக் கரைசலில் மெதுவாய்த் தேடுங்கள்!
புல்லின் நுனிகளிற் தபசுகள் செய்யும்
மெல்லிய பனியின்
எல்ைலையைத் தொடுங்கள்!
மழைக்குப் பின்னே மரத்தடி ஒதுங்கி
வீசும் காற்றில் விசிறும் துளிகளில்
உள்ளம் சிரிப்பதை உணர்ந்து பாருங்கள்!
நீரின் பரப்பினை நெருங்கிய கிளைகளின்
இருக்கையில் அமர்ந்து
நீரைக் கால்களால் நீவிப்பாருங்கள்!
உலகின் பிடியினை உதறிச்செல்வது
தியானமென்று தெளிந்திட வேண்டாம்
மானிட வாழ்வின் மகத்துவ மெல்லாம்
வேதமோதிடும் போதி மரங்களே!
கனவும் நனவும், விடிவும் முடிவும்
விழிப்பும் உறக்கமும், சிரிப்பும் அழுகையும்
பார்க்கும் பார்வையும், வேர்க்கும் உறவும்
ஆர்த்திடும் சுகமும் நீர்த்திடும் சோகமும்
தியானப் பாதையின் தெளிந்த சுவடுகள்!
Na.Krishna@wanadoo.fr
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு
- வாழ்க்கை
- நினைவுகள்.
- மறக்கப்பட்டவை!
- எண்ணங்களின் வண்ணங்கள்
- எவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது ?
- ஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்! (Anti-Nuclear Power Activists & A
- அறிவியல் துளிகள்-25
- ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு
- தனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து
- மண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.
- பால்யம்
- விடியல் எங்கே ?
- ‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘
- நீயும் மகனும்
- பறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு
- சுகம்
- ஜனனம்
- உங்களுடனும் சில கணங்கள்
- புழுக்கம்.
- இரண்டு கன்னடர்களும் நானும்:::
- நிஜமற்ற நிழல்
- வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு
- கடிதங்கள்
- இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4
- 98413-11286
- உனக்காக
- தியானத்தைத் தேடி…