திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

நேசகுமார்


திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து
நேசகுமார்

அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

கடந்த சில வாரங்களாக திண்ணை புதிய வடிவில் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இப்புதிய வடிவமைப்பு குறித்து சில கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்:

1. யூனிகோடுக்கு மாறியமைக்கு வாழ்த்துக்கள். எவ்வளவோ அரிய, பலருக்கும் தெரியாத கருத்துக்கள், விவாதங்கள் திண்ணையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன. இந்நிலையில் யூனிகோடுக்கு மாறியதன் மூலம் திண்ணை படைப்புகளில் தேடும் பணியை யாரும் எளிதாய்ச் செய்ய முடியும். மிகவும் சந்தோஷத்தைத் தருகிறது இந்த மாற்றம்.

2. இதைச் சொல்லுகிற போதே, இன்னொரு குறைபாட்டையும் சொல்லிவிடுகிறேன். இந்த யூனிகோட் எழுத்துக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன. பிரிண்டர் ஃப்ரெண்ட்லி வியூவில் தான் என்னால் முழுமையான தமிழ் எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது. என்னால் மற்ற யூனிகோட் தளங்களைப் பார்க்க முடிகின்ற நிலையில் திண்ணை மட்டுமே இப்படித் தெரிவதால் பிரச்சினை திண்ணை எழுத்துக்களிலோ அல்லது தொழில் நுட்பத்திலோ இருக்கிறதென்று யூகிக்கின்றேன். பார்த்து சரி செய்யுங்கள்.

3. இமெயில் செய்யும் வசதி, பிரிண்ட் செய்யும் வசதி ஆகியவற்றைச் சேர்த்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷம். முன்பு நான் எழுதிய படைப்புகளை நிறைய நேரம் செலவழித்து அலைன் செய்து பிரிண்ட் எடுப்பேன். இப்போது அதெல்லாம் மிகவும் எளிதாகிவிட்டது. மற்ற பத்திரிகைகள் போன்றில்லாமல் மிகவும் பயனுள்ள, கருத்துச் செறிவு நிறைந்த அல்லது காரசாரமான கட்டுரைகள் திண்ணையில் வெளியாவதால் பலரும் இப்படி பிரிண்ட் எடுப்பார்கள் என்று யூகிக்கின்றேன் – நன்றி.

4. நான் ரொம்ப நாட்களாக உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தது இது – பின்னூட்ட வசதியை படைப்புகளின் கீழே ஏற்படுத்திக் கொடுங்கள். போக்கிரிகளால் தொந்தரவு, மாடரேஷன் செய்ய வேண்டிய அவசியம், அதற்கென ஆள்பலம் போன்ற பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், இணையத்தின் வசதியே இந்த உடனடி ஃபீட்பேக் தான். வேண்டுமென்றால், அந்தந்தப் படைப்புகளுக்கென மாடரேஷன் செய்வதை அந்த படைப்பாளிகளின் கையிலேயே தரலாம். ஓவர் ரைடிங் ஆதரைசேஷன் திண்ணைக் குழுவினரிடம் இருக்கலாம். இதன் மூலம், சில படைப்பாளிகள் தவறாக எதையாவது தடுத்து நிறுத்தினாலோ அல்லது அநாகரிக பின்னூட்டம் எதையாவது அனுமதித்தாலோ, திண்ணைக் குழுவினர் தலையிட்டு அதை சரி செய்யலாம். இது ஒரு சஜஷன் தான். இது போன்றோ அல்லது வேறெதாவது முறையிலோ மட்டுறுத்தப்பட்ட ஒரு பின்னூட்ட முறையை அனுமதித்தால் நல்லது. ஏற்கெனவே திண்ணை விவாதக்களத்தில் நிகழ்ந்தவைகள், பங்கு பெற்றவர்களின் முதிர்ச்சியின்மையினால் அம்முயற்சி கைவிடப் பட்டதை அறிவேன். ஆயினும், இதை சற்றே யோசித்துப் பாருங்கள்.

5.கடைசியாக, இது ஒரு பெரிய விஷயமில்லையென்றாலும் இதையும் சொல்லிவிட விழைகின்றேன் – முகப்பில் கலர் காம்பினேஷன் கண்ணை உறுத்துகின்றது. மிக மெல்லிய மாற்றங்கள் மட்டுமே இருக்கிறார்போன்றோ,வெண்மையோடு சம்பந்தப்பட்ட ஷேடுகளோ அல்லது அல்லது வெண்மையிலேயே இருந்தாலோ நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். முகப்பிலேயே சிறு சிறு படங்கள் வருவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

அன்புடன்,

நேசகுமார்
nesakumar@gmail.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்