திண்ணை. காம்

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

மதியழகன் சுப்பையா


இலக்கிய உலகம் ஒரு மாறு பட்ட உலகம். இங்கு பதிவுகள் என்பது அத்துனை அவசியமான ஒன்று. கலை இலக்கியங்கள் அனைத்துக்கும் மேடையும் அங்கிகாரமும் அவசியமாகிறது. இதில் சுதந்திரம் பறிக்கப் படாமல் இருக்கும் இடங்களைத்தான் பலரும் விறும்புவது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், இன்னும் இலக்கியவாதிகள் என அனைவருக்கும் ஒரு தளம் தேவைப்படுகிறது. இவர்களை பாராட்ட விமர்சிக்க வாசகர்களும் இந்த தளத்தின் அங்கத்தினரே. அச்சு பத்திரிக்கைகள் தோன்றிய வரலாறு குறித்தும் எது முந்தி, எவை முன்னோடி, அதன் வடிவம் யாது என பலவகைத் தகவல்களையும் ஆவண மையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மின் பதிவுகள், மின் பத்திரிக்கைகள் இந்தியாவுக்கு அறிமுகமாகி சுமார் இறுபது ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் பரவலும் பிரபல்யமும் ஆனது கடந்த பத்தாண்டுகளில்தான். கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ புதிய இணைய தளங்கள் தமிழ் இலக்கியதிற்கென அறிமுகப் படுத்தப் பட்டு விட்டது.

இவை அனைத்திற்கும் முன்னோடியாக இருப்பதும் இன்றளவும் தோய்வில்லாமல் தடையில்லாமல் இயங்கி வருவது ‘திண்ணை’ என்றும் இலக்கிய இணைய தளம்தான். தமிழகத்தின் மிகப் பெரும் படைப்பாளிகள் மற்றும் உலகின் அனைத்து மூளைகளில் இருக்கும் படைப்பாளிகள் வந்து குவியும் ஒரு தளம் திண்ணை என்றால் மிகையாகாது.

திண்ணையில் கவிதைகள் பகுதியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பலராலும் அனுப்பப் பட்ட கவிதைகள் குவிந்து கிடக்கின்றன. முக்கிய கவிஞர்கள் பலரின் படைப்புகளை படித்து மகிழலாம். கதைகள் பகுதியில் தொடர் கதைகள் மற்றும் சிறுகதைகள் மொழி பெயர்ப்புகள் படிக்கக் கிடைக்கிறது. அரசியலும் சமூகமும் பகுதியில் நிகழ் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்து பலரது கருத்துகளும் விமர்சனங்களும் முன் வைக்கப் படுகிறது. அறிவியலும் தொழில் நுட்பமும் பகுதி மிகவும் வியக்கத்தக்கப் பகுதியாகும். திரைப்படத் துறையினர் பற்றிய அந்தரங்களை அம்பலப் படுத்தி ஒருவித அரிப்பு சுகத்தில் இருக்கும் இதழ்கள் மத்தியில் முகமெங்கும் கேள்விக்குறி மின்ன வைக்கும் கட்டுரைகளை வழங்குவதும் அனு ஆயுதங்கள், இயற்பியல் ஆய்வுகள் குறித்தும் என அள்ள அள்ள குறையாமல் கிடக்கிறது அறிவியல் சுரங்கமாக இந்தப் பக்கம். கலைகள் மற்றும் சமையல் பகுதியில் அவ்வப்போது சமையல் குறிப்புகளும் கலை வேலைப்பாடுகள் குறித்த விபரங்களும் படிக்கக் கிடக்கிறது. இலக்கியக் கட்டுரைகள் பகுதியில் நூல் விமர்சனங்கள், புத்தக அறிமுகங்கள், கருத்துகள், விவாதங்கள் பல மடிப்புகளைக் கொண்டுள்ளது. நகைச்சுவையும் வித்தியாசமானவையும் பகுதி தலைப்பிற்கேற்பவே உள்ளது. ஆனால் இந்தப் பகுதியில் மிகச் சிலரே பங்கீடு செய்வது தமிழ் மக்களின் நகைச்சுவை உணர்வு பஞ்சத்திற்கு உதாரணமாக இருக்கிறது. கடிதங்கள் அறிவுப்புகள் பகுதியில் திண்ணை படைப்புகள் குறித்த கருத்துக் கடிதங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் இலக்கிய மற்றும் இன்னபிற நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப் படுகிறது.

திண்ணையில் காணும் படைப்பாளிகளைப் பார்க்கையில் கொஞ்சம் மிரட்சியாகவும் உள்ளது. மிகத் தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கி வரும் அனைவரது படைப்புகளையும் இங்கு காண முடிகிறது. சமீபமாக திண்ணை தளம் புதுப் பொழிவு பெற்றுள்ளது. மேலும் புத்தக விற்பனை மற்றும் இலக்கிய இணைய தளங்கள் சிலவற்றிற்கான இணைப்புகளையும் தன்னுடன் இணைத்து உள்ளது. வாராவாரம் வியாழன் கிழமைகளில் இந்த தளம் புதுப்பிக்கப் பட்டு ஏற்றப் படுகிறது. மின்னஞ்சலில் பெறப்படும் படைப்புகள் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே தளத்தில் ஏற்றப் படுகிறது. ஆனால் படைப்புகளுக்கு தடையில்லை. விவாதம் என்ற பெயரில் சிலர் தங்கள் சுய பகைகளை தீர்த்துக் கொள்வதையும் அநாகரீகமான வார்த்தைகள் கொண்டும் எவ்வகையிலும் பயன் தராத படைப்புகளை வெளியிடாமல் இருக்கவுமே இந்த தணிக்கை.

திண்ணை இணைய தளத்தின் வெற்றிக்கு காரணம் படைப்பாளிகளின் தரமான பங்களிப்புகள் ஒரு காரணம் என்று சொல்லலாம். வாசிக்க சிரமம் இல்லாமல் இணைப்புகள் கொடுக்கப் பட்டிருப்பதும் சினிமா நட்சித்திரங்களின் புகைப்படைகளையும் அனாவசிய விளம்பரங்களையும் தவிர்த்து இருப்பது பாராட்டிற்குறியது.

இலக்கியம் பயிலவும் உலக இலக்கிய வாதிகளுடன் கைகுளுக்கவும் ஓர் இடமாக திண்ணை விளங்குகிறது என்பதே அதற்கான அடையாளம்.
இணைய முகவரி: www. thinnai.com
மின்னஞ்சல்: editor@thinnai.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா