திசை தொலைத்த நாட்களின் நினைவாக …

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

கார்த்திக் வேலு


வசனங்கள் பேசி முடித்து
கதாநாயகன் ஏறத்தொடங்கும் அலங்காரமான
வளைந்த படிக்கட்டுகளும்…
வேலை முடிந்து விசைப்பலகையில் அதிரும்
கடைசித் தட்டும் ….
கனவு கலைந்து , கலைந்ததென
உணரும் நிமிடங்கள்.

ஜகமே ஒரு பூதாகரமான பயம்
அது மறைக்கும் சிறிய சந்தோஷங்கள்
சவரம் செய்கையில் கன்னத்தைக் கிழிக்கும்
பிளேடு போல ..
வாழ்க்கையை குறுக்கும் நெடுக்குமாக
கிழித்துச் சிவக்கும்.

சூாியனைப் பற்றி அக்கறையில்லையெனில் ..
திசைகளைப் பற்றி என்ன அக்கறை ?
திசைகள் தான் எவ்வளவு …நான்கா ? எட்டா ? பதினாயிரமா ?
அல்லது …
எவ்வளவானால் என்ன ?
எவ்வளவு திசைகள் உண்டோ
அவ்வளவு கேள்விகள் கேட்பேன்
பதில்கள் புதிதாக இல்லையென்றாலும்
கேள்விகளில் எனக்குச் சம்மதமே …

அதன் கடைசியில் போடும் கொக்கியே எனக்குப் பலம்.

Series Navigation

கார்த்திக் வேலு

கார்த்திக் வேலு