தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

மலர்மன்னன்


சுயமான சிந்தனையைச் சிறிது துணிவுடன் வெளியிடச் சிலரே முன்வருகிறபோது சடுதியில் அவர்களின் வாயை அடைக்க முன்வரும் அவசரம் காண்கையில் வருத்தமாக உள்ளது. பதிநான்காம் நூற்றாண்டு காண்டுமிரண்டிகளுக்கான நற்செய்தி நாகரிகமடைந்த சமுதாயங் களிடம் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்றுதான் யோசித்தேனேயன்றி, பதிநான்காம் நூற்றாண்டு காட்டுமிராண்டிகள் பற்றி அமீன் சொல்லித்தான் தெரிந்து கொண்டது போல நான் எதுவும் தெரிவிக்கவில்லையே?

நாங்களும் பதிநான்காம் நூற்றாண்டு காட்டுமிராண்டிகள்தான், எங்களுக்கும் அது தேவைதான் என்று யாராவது வற்புறுத்தி ஏற்றுக் கொண்டால் ரொம்ப சரி என்று போக வேண்டியதுதான்; மறு பேச்சுக்கு இடம் ஏது?

இஸ்லாம் வன்முறையின் மூலம் பரவவில்லை என்று கண்களை இறுக மூடிக் கொண்டு கூசாமல் பேசினால் அப்புறம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

யூடியூபில் எவ்ரி வுமன் என்று ஒரு வீடியோ பக்கம் உள்ளது. அருகே உள்ள மலேசியா தொடங்கி, சவூதி வரை, பாலஸ்தீனம் வரை இஸ்லாம் வன்முறை தவிர வேறு எதையும் பிரயோகிப்பதில்லை என்பதற்குப் பல சாட்சியங்களை அது பதிவு செய்து வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்.

மலேசியாவில் ஒரு முகமதியப் பெண் ஹிந்து இளைஞனை மணந்து ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்ட பிறகு விஷயம் வெளிப்பட்டு அவள் பலவந்தமாகக் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கைக் குழந்தையும் பிடுங்கப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் பட்டிருக்கிறாள். சீர்திருத்தப் பள்ளி என்ற பெயரால் சிறைக் கூடம்! ரஷ்யாவிலும் ஹிட்லரின் ஜெர்மனியிலும் இருந்த, சீனாவில் இன்றும் இருக்கும் சீர்திருத்த முகாம் தான் இஸ்லாமியக் குடியரசு என அறியப்படும் மலேசியாவிலும்! இதை ஆவணப் படுத்திய எவ்ரி வுமன் மிரட்டி விரட்டப்பட்டதையும் காணலாம்! சில இஸ்லாமிய சமுதாயங்களில் இன்றைக்கும் அனுமதிக்கப்படும் குடும்ப கௌரவக் கொலைகளையும் அதை சமயத் தலைவர்கள் நியாயப் படுத்துவதையும் எவ்ரி வுமனில் காணலாம். கோட்டும் சூட்டும் அணிந்த ஒரு படிப்பாளி, இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் சார்பில், எமது சமுதாயத்தில் பெண் களுக்கு ஆண்களே பொறுப்பாளிகள் ஆவார்கள். எனவே தம் குடும்பப் பெண்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துப் பராமரிக்கும் கடமை எமது ஆண்களுக்கு உள்ளது என்று இளம் வயதுப் பெண்கள் கொல்லப் படுவதற்கு சமாதானம் சொல்லும் காட்சியையும் அதில் காண லாம்! உரிமை, பொறுப்பு ஆகியவற்றுக்கு மனைவியை உதாரணம் காட்டி இங்கே வார்த்தை யாடும் வஹ்ஹாபி நினைவுக்கு வருகிறார் அல்லவா?

இவை தூய இஸ்லாம் தன் மக்கள் மீது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பதி நான்காம் நூற்றாண்டைத் தாண்டி வராமல் தொடரும் வன்முறைப் பிரயோகம். இதை இருபத்தொன்றாம் நூற்றாண்டு வசதிகளைப் பயன்படுத்தி மார்க்க அறிஞர்கள் நியாயப் படுத்துவதையும் எவ்ரி வுமனில் காணலாம். தன் சமூக மக்களுக்கே இதுதான் கதியென்றால் பிற சமூக மக்கள் மீதான அதன் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவை யில்லை.

உலக வரலாற்றுப் புத்தகத்தின் பல பக்கங்களில் ரத்தக் கறை படியச் செய்துவிட்டு எல்லாம் சாத்வீகமாய் நடந்தேறியதுதான் என்றால் சாத்வீகமே இப்படியிருக்குமெனில் வன்முறை எப்படியிருக்குமோ என யூகிக்கவும் மனம் பதறுகிறது.

தூய இஸ்லாம் பதிநான்காம் நூற்றாண்டின் நபிக்குப் பிறகு எதுவுமே கிடையாது என்று சாதிப்பது தெரிந்த விஷயம்தான். அதைப் பொருத்தவரை உலகம் அதன் பிறகு சுழல்வதை நிறுத்திக் கொண்டு விட்டது என்பதும் தெரிந்த விஷயம்தானே. விளக்கம் பெற என்ன இருக்கிறது?

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் பரவவில்லை; பெருகி வருகிறது. இது குறித்து அந்த நாடுகளில் கவலையும் அதே வேகத்தில் அதிகரித்து வருகிறது. காரணம் இஸ்லாம் தன்னை அமைதி மார்க்கமாக அடையாளப் படுத்திக் கொள்ளாததால்தான். மேற்கத்திய நாடுகளில் சாகசச் செயல், அதிர்ச்சியூட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுகிற விளையாட்டு புத்தியும், சுபாவமுமே சிலரைத் தன் மீது கவனம் திரும்பச் செய்ய வேண்டும் என்கிற ஆவலில் இஸ்லாமுக்கு மாறச் செய்கிறது என்கிறார்கள். இஸ்லாமியரானதும் சுபாவம் மூர்க்கத்தனமாக மாறிவிடுகிற மாதிரி அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்கிற ஆவலும் சிலரை இஸ்லாமுக்கு மாறத் தூண்டுவதாக உளவியலாளர் கருதுகின்றனர். கிறிஸ்தவர்களான சிலருக்கு உப்புச் சப்பில்லாத தமது மதத்தில் சலிப்புத் தட்டிப் போய் இஸ்லாம் வீரியமிக்கதாகத் தோன்றி விருப்பத்துடன் அதனை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் உருவாவதும் இயற்கையே. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் யார் யார் எந்தச் சூழலில் இஸ்லாமைத் தழுவுகிறார்கள் என்கிற ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் நிலைமை விளங்கும். ஆப்ரிக்க அமெரிக்கர்கள் தங்கள் பூர்வ மதம் இஸ்லாமால் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் தங்கள் இருப்பை வெளிக் காட்ட இஸ்லாமே தமது மதம் என அதனைத் தழுவும் நிலைமை உள்ளது. யூடியூபிலேயே கூடத் தேடித் தேடிப் போனால் இது தொடர்பாக நேரடியான விவாதங்களைக் காணலாம். பொறுமைதான் வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு வெளி நாடுகளைச் சேர்ந்த முகமதியர்களின் குடியேற்றம் அதிகரித்து, அவர்களிடையே அளவான குடும்பம் என்கிற கருதுகோள் இல்லாமையால் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பலவாறான சமூகப் பிரச்சினை களைத் தோற்றுவிக்கிறது. கனடாவில் பிறக்கும் குழந்தைக்கு மானியம் என்கிற நடைமுறை இருப்பதால் முகமதியரிடையே மனைவியின் உடல் நிலை பற்றிய கவலையின்றி பிள்ளைகள் பெறும் ஆர்வம் மிகுந்திருப்பதாக ஒரு தகவல் உள்ளது.

தூய இஸ்லாம் என்ற பெயரில் இன்று இஸ்லாமிய சமூகத்தில் அடச்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பல நகரங்களில் பெண்டிர் குழந்தைகள் நலன் தொடர்பான தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இயங்கி வருவதால் எம்மிடம் வரும் இஸ்லாமியப் பெண்டிர், ஆண்களுடன் உரையாடி உண்மை கண்டறியும் வாய்ப்பு மிகுதியாகவே உள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட சர்வ தேச அமைப்புகளின் செய்திச் சுற்றறிக்கைகளைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பும் எமக்கு உள்ளது. ஆனால் இஸ்லாம் வன்முறையின் மூலம் பரவவில்லை என்று கூசாமல் சாத்திக்கிற வர்களிடம் கருத்துப் பறிமாற்றத்துக்குத்தான் சாத்தியமே இல்லையே!

+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்