தாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே !

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எந்தன் பாதையைத் தொடரும்
நண்பரே !
வந்தனம் செய்வேன் உமக்கு
ஏற்றுக் கொள்வீர்
வழிப்போக்கன் புரியும்
வணக்கத்தை !

காயத்தைப் பகிர்ந்து கொள்
அதிபனே நீ !
நாட் பொழுது சாயும் வேளை
வந்தனம்
வருகுது உனக்கு
இடிந்து போன ஓர்
இல்லத்தி லிருந்து !

அதிகாலை வெளி வீசும்
முதல் ஒளிக்கதிரே !
முடிவில்லாப் புகலிடமே !
வந்தனம்
வருகுது உனக்கு
உன்னை உறுதியாய்
நம்பும்
ஒருவனிட மிருந்து !

வாழ்வுத் தேர் செலுத்தும்
சாரதியே !
நித்தமும் பாதையில் நடக்கும்
நிரந்தரப்
பயணியே நான் !
வந்தனம்
உனக்குச் செய்கிறேன் !
ஏற்றுக் கொள்
வழிப்போக்கன் புரியும்
வணக்கத்தை !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 12, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா