தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


போர்வாள் ஒரு கரத்தில் !
பூமாலை மறு கரத்தில் ! அவன்
பூட்டை உடைத்துத்
திறந்து விட்டான்
உன் கதவை !

பிச்சை எடுக்க வந்திலன் அவன் !
போரிடுவான் அவன்
உன் இதயத்தை
வெல்லும் வரை ! அவன்
பூட்டை உடைத்துத்
திறந்து விட்டான்
உன் கதவை !

அழிவுப் பாதையின்
வழியே நடந்து
வாழ்வுக்கு மையமாய் நிற்கிறான் !
போருடை அணிந்து வண்ணம்
புகுந்து விட்டான் !
அரை குறையாக
எதையும் ஏற்றுக் கொள்ளான் !
அனைத்தும்
தனக்குரியது என்பான் ! அவன்
உடைத்து விட்டான்
உன் கதவை !

மரணத் தருவாயில் அந்த
மரணமே
முறிந்து போகட்டும்
இறுதி
வேதனை யோடு !
அந்த இடத்தை நிரப்ப
அப்போதுதான்
உதய மாகும் ஒரு
புதிய வாழ்வு !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Ocotber 20, 2008)]

Series Navigation