தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பாதங்கள் வைக்கும் ஒவ்வொருக் காலடிப்
பாதையை நீ மாற்றி வைத்தாய்
திசை திருப்பி !
எனக்குத் தெரியாது
இன்றுநான் விதிப்படி
இயங்கி வருவேனா யென்று ?
களைப்புற்றேன்
வழிப்பாதை தவற விட்டு !
பழக்கப் படாத
பாதைகளிலே என்
பாதம் பதித்து விட்டேன் !
சில தருணங்களில்
எதிர்ப் பட்டது
பரந்த மலைச் சிகரம் !
சில வேளையில் எதிரே குகைகள்
பாதாள
வேதனையில் !
பைத்தியமாய் அலைந்தேன்
பரிதவித்து
முன்னறியாப் பாதையைத்
தேர்தெடுத்து !

+++++++++++++++++++++++++++

தாகூரின் கீதங்கள் – 33
யாரென்னைக் கட்டுப்படுத்துவது ?

யாரது என்னைத் தள்ளிச் செல்வது
பேரளவுக் கவனத்தோடு
ஆழ்ந்த அனுதா பத்துடன்
நோக்க வேண்டு மென்று ?
யாரென்னைக் கட்டாயப் படுத்துவது
உலகின் தொடுவானுக்கு அப்பால்
கூர்ந்து கானத்தைச்
செவிமடுக்க வேண்டு மென்று ?
யாரது என்னைக்
கட்டிப் போட்டி ருப்பது
எனக்கும் உலகுக்கும் உள்ள
இடைத் தொலைவை
சிக்கலான
முக்கிய நூலிழைகளால்
பிணைத்த வாறு ?
யாரென்னை அனுதினமும்
புத்துயிரில்
வைத்திருப்பது அழுத்தமுடன்
விழிப்போடு ?

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 26, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா