தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉலகத்தின் கொடூர எடைக்கோல்
கணிப்பிலும் கிடைக்கும்
உதைக்கு மத்தியிலும் தவிக்கிறேன்
இப்போது !
என் தோற்றத்தை எழிலாக
ஒப்பனை செய்யும்
கழுத்தணி, காதணி, வளையல்,
பொன்னா பரணம்
அனைத்தும் அகற்றினேன் !
உன்னாசைக் கரத்தில் உள்ள
வீரக்குறி அம்புகள்
தீரா என் நடுக்கத்தை
வேரறுக்க நெருங்கட்டும்.
யுத்தத் தளபதியே !
போரா யுதங்களைக் கையாளத்
தாராய் எனக்குப் பயிற்சி !

கடும்பணி புரியத் தந்தை போல்
கட்டளையிடு
கருணை என்மேல் பூண்டு.
கோர வலிக்கு அனுதாப மின்றி
பளுவான பொறுப் பளித்து
பாராட்டு என்னை புதிய
போருடை அணிவித்து !
எனது காயத் தடங்களோடு
ஒப்பனை செய்
என் தோற்றத்தை !
வெற்றிப் பணியிலும்
வீணான பணியிலும்,
ஆசீர்வதி உன் அடிமையை !
புதைய வேண்டா மென்
இதயத்தில் வேதனைகள் !
வையகத்தின் யுத்தக் களத்
துயர்களைத் தாங்கும்
வலுவைத் தந்து
விடுதலை செய் என்னை !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 28, 2008)]

தாகூரின் கீதங்கள் – 27
விடுதலை கொடு எனக்கு !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உலகத்தின் கொடூர எடைக்கோல்
கணிப்பிலும் கிடைக்கும்
உதைக்கு மத்தியிலும் தவிக்கிறேன்
இப்போது !
என் தோற்றத்தை எழிலாக
ஒப்பனை செய்யும்
கழுத்தணி, காதணி, வளையல்,
பொன்னா பரணம்
அனைத்தும் அகற்றினேன் !
உன்னாசைக் கரத்தில் உள்ள
வீரக்குறி அம்புகள்
தீரா என் நடுக்கத்தை
வேரறுக்க நெருங்கட்டும்.
யுத்தத் தளபதியே !
போரா யுதங்களைக் கையாளத்
தாராய் எனக்குப் பயிற்சி !

கடும்பணி புரியத் தந்தை போல்
கட்டளையிடு
கருணை என்மேல் பூண்டு.
கோர வலிக்கு அனுதாப மின்றி
பளுவான பொறுப் பளித்து
பாராட்டு என்னை புதிய
போருடை அணிவித்து !
எனது காயத் தடங்களோடு
ஒப்பனை செய்
என் தோற்றத்தை !
வெற்றிப் பணியிலும்
வீணான பணியிலும்,
ஆசீர்வதி உன் அடிமையை !
புதைய வேண்டா மென்
இதயத்தில் வேதனைகள் !
வையகத்தின் யுத்தக் களத்
துயர்களைத் தாங்கும்
வலுவைத் தந்து
விடுதலை செய் என்னை !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 28, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா