தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நேராக என்னிதய அரங்கி லிருந்து
சூரிய ஒளிநோக்கி
ஓர் பார்வை யாளனாய்
உட்கார்ந் துள்ளாய் நீ
என் கண்ணுக்குப் பின்னே !
உன்னுடைய அந்தப் பார்வையே
பகல் இரவுகளின்
ஒளிக்காட்சியை சேமித்துள்ளது !
மறுபடி மறுபடி
மௌனத்தின் மகத்தான சைகையில்
நீல வானுக்கு அப்பால்,
என்னுடை இதயத்துக்குக்
கொண்டுவரும்
எண்ணிலா கீதங்களை !

பல யுகங்களாய்
பல மாந்தரிடையே
பல கண்ணோட்டத்திலே
பலரது கூட்டத்தின் மத்தியிலே
ஏகாந்த நிலையிலே
எல்லாத் திசைகளிலே
புல்லிலைத் தகடுகளிலே
ஒவ்வொரு நிமித்த மதிலே
தக தகவென மின்னிக்
கொந்தளிக்கும்
தணிந்த மரக் கொத்துகளிலே
நினைவுக் கடற்கரைக்கு அப்பால்
கடந்து உன் கண்கள்
கண்டிருப்பவை அநேக மென்று
மண்டையில் அடிக்கிறது
இன்று !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 5, 2007]

Series Navigation