தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் ?

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

அக்னிப்புத்திரன்.


தற்போது அதிமுவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் அதன் விளைவாக அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் அம்மாவே ஆட்சியைப் பிடிப்பார் என்றும் பட்டித் தொட்டி எங்கும் ஒரு விதக் கருத்தை அம்மா ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். உண்மைதான் என்று அப்பாவிகள் பலரும் நம்பவும் தொடங்கியுள்ளனர். இவ்வி ?யத்தில் உள்ள உண்ைமையை அறிந்துகொள்ள துக்ளக் அரசியல் இதழ் நமக்குத் துணைபுரிகின்றது. அரசியலில் பழந் தின்று கொட்டை போட்டுள்ள மன்னிக்கவும் மொட்டை போட்டுள்ள துக்ளக் சோ இராமசாமி நடவடிக்கைகளைக் கொண்டு இது உண்மைதானா என்பதை ஓரளவு ஊகிக்கலாம்.

அண்மைய காலங்களில் துக்ளக் சோ இராமசாமியின் எழுத்தில் பேச்சில் ஒருவித இனந்தெரியாத பதட்டம் காணப்படுகின்றது. வழக்கமாக, திமுகவோ அல்லது அதன் தலைவரோ அரசியல் அரங்கத்தில் சற்று ஏற்றம் பெற்றால், அப்போது எல்லாம் குடல் காய்ந்து வயிறு எரிந்து வக்கணையாக வியாக்யானம் பேசும் சோ இப்போது அப்படி ஓன்றும் இல்லாத சூழ்நிலையிலும் தற்போதும் பதட்டமாகக் காணப்படுகிறார்.

?னவரி 4ஆம் தேதி வெளிவந்துள்ள துக்ளக் இதழில் பக்கத்துக்குப் பக்கம் திமுகவின் பெயரும் அதன் தலைவர் திரு. கருணாநிதியின் பெயரும்தான் காணப்படுகிறது. ஏறக்குறைய எல்லாப் பகுதிகளிலும் திமுக எதிர்ப்புணர்வு பிரதிபலிக்கின்றது. எங்கு நோக்கினும் திமுகவைப் பற்றிக் கேலியும் கிண்டலும்தான். சில இடங்களில் நியாயம் பேசுவதுபோல குள்ளநரித்தனம். சில இடங்களில் நேரடியாகத் தாக்குதல். சில இடங்களில் பேட்டி என்ற பெயரில் நடிகர்கள் வி ?யகாந்த், டி. ராே ?ந்தர் போன்ற சினிமா பிரபலங்களின் வழியாக திமுக மீது கடுந்தாக்குதல். இதழ் முழுவதும் திமுகவை குறி வைத்துக் குதறி எடுத்திருக்கிறார்.

நடுநிலையாளன் என்று எப்போதும் காட்டிக்கொண்டு நடிக்கும் துக்ளக் இராமசாமி அண்மைய காலமாக அதிமுகவையோ அல்லது அம்மாவையோ கண்டுகொள்வதில்லை. அல்லது கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறார் என்பதே உண்மை. அதிமுகவின் அரசியல்( ? ? ?) நடவடிக்கைகளைப் பெயருக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மென்மையாக விமர்ச்சனம் செய்து வருவதும் மிகத்தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. எடுத்துக்காட்டாக, 4ந்தேதி வந்துள்ள துக்ளக்கில் அதிமுக அல்லது ெ ?யலலிதா என்ற சொற்கள் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே குறிக்கப்பட்டு அது பற்றிய செய்தி வந்துள்ளது. அதே சமயம் எண்ணிக்கையில் அடக்க இயலாத அளவிற்கு திமுக மற்றும் திரு.கருணாநிதி என்ற சொற்கள் ஏறக்குறைய எங்கும் விரவிப் பரவிக் கிடக்கின்றன. ஆங்காங்கே அர்ச்சனை அம்புகள் சீறிப் பாய்கின்றன.

ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக துக்ளக் சோ பதட்டத்துடன் காணப்படுகிறார். தமிழகத் தேர்தல் நெருங்க நெருங்க பதட்டத்தின் அளவு கூடிக்கொண்டே செல்லும் என்பதிலும் ஐயமில்லை. காரணம் ஊகிக்க முடிகின்றதா ?

அரசியலில் இலாப நட்டக் கணக்குப் போட்டு ஓரளவு தேர்தலையும் அதன் போக்கையும் முடிவையும் கணிக்கும் திறன் கொண்ட சோ இராமசாமிக்கு உண்மை கசக்கிறது அல்லது சுடுகிறது. தனக்கு பிடிக்காத உண்மையான ஒரு திராவிடக் கட்சி ஆட்சியைப் பிடித்துவிடப் போகிறதே என்ற ஆதங்கமும் தமிழுணர்வு கொண்ட ஒருவர் முதல்வர் ஆகப் போகிறாரே என்ற ஆதங்கமும் மனதைப் போட்டு ஆட்டிப் படைக்கிறன.

அதனால்தான், விகார மனதின் விபரீத எண்ணங்கள்தான் வில்லங்கக் கருத்துகளாக, வி ? அம்புகளாக அக்னியைச் சுமந்து துக்ளக்கில் பவனி வருகின்றன. மகாபாரதக் கதையின் காந்தாரியை நம் கண்முன் தத்ரூபமாகக் கொண்டு வந்து காட்டுகிறார் துக்ளக் சோ.

அதிமுகவிற்குப் பாராளுமன்றத் தேர்தலின் போது இருந்த எதிர்ப்பு இப்போது இல்லை என்றும் அப்போது எதிர்ப்பாளர்களாக இருந்த பலர் இப்போது அதிமுக ஆதரவாளராக மாறிவிட்டதாகவும் தமிழகம் எங்கும் அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்நிலையில், அதே கருத்தை தனது கேள்வி – பதில் பகுதியிலும் வலியுறுத்தியுள்ள சோவிற்குத் தாம் பரப்பிவிடும் செய்தியில் துளியளவுக்கூட உண்மையில்லை என்பதை நன்கு உணர்ந்த கொண்ட நிலையில், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்று அவரது அடிமனதில் ஏற்பட்டுள்ள பயமே பதட்டமாக அவரது செய்கைகளில் வெளிப்படுகிறது. சோவின் பதட்டமே அடுத்த முதல்வர் யார் என்பதை அப்பட்டமாக அறிவிக்கும் அறிகுறியாகத் தெரிகின்றது.

—-

agniputhiran@yahoo.com

Series Navigation