தக்காளி கறி

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

ஆர் சந்திரா


தேவையான பொருட்கள் :

தக்காளி 10

வெங்காயம் பெரியது இரண்டு

தேங்காய் கால் கோப்பை

மிளகாய்ப் பொடி அரை தேக்கரண்டி

சோம்பு அரை டாஸ்பூன் (விருப்பப்பட்டால்)

பூண்டு நான்கு பல் (விருப்பப்பட்டால்)

க்டுகு உளுந்தம் பருப்பு – தாளிக்க

கறிவேப்பிலை- ஒரு கொத்து

எண்ணெய் – மூன்று தேக்கரண்டி

உப்பு – சுவைக்குத் தக்க

கொத்துமல்லித் தழை சிறிது.

செய்முறை

1. எண்ணெய் காயவைத்து கடுகைத் தாளிக்கவும்.

2. கடுகு பொரிந்த பிறகு வெள்ளை உளுந்தை தாளிப்பில் இடவும்

3. பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும்.

4. இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

5. வெங்காயம் வதங்கிய ப்றகு , பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்

6. உப்பை ருசிக்குச் சேர்த்து நன்றாக வதக்கவும்

7. தேங்காயுடன் சோம்பு பூண்டைச் சேர்த்து அறைக்கவும். (விருப்பமானால் வெங்காயம் சிறிதளவு சேர்த்து அரைக்கலாம்.

8. அரைத்த தேங்காய் விழுதை தக்காளியுடன் சேர்க்கவும்.

9. நன்கு வதக்கி கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்

இதைச் சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். சாதத்துடனும் சாப்பிடலாம்.

Series Navigation

author

ஆர் சந்திரா

ஆர் சந்திரா

Similar Posts