டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

கோச்சா


மனிதன் என்பவன் இறைவன் ஆகலாம் – தானம் தர்மம் செய்து.

தான தர்மங்களில் தலையாயது, எழுத்தறிவித்தல்.

உள்ளூர் தாண்டி , வெளியூரிலும் வசிக்கும் தமிழர்கள் தங்களால் முடிந்ததை தான் சேர்ந்த ஊரில் உள்ள பள்ளிகளுக்கு நேரிடையாகவும், குழு , சங்கம் அமைத்து செய்கிறார்கள்.

இவற்றுள் ஒன்று கலிபோர்னியாவைப் பிரதானமாக கொண்டு அமெரிக்காவின் பல பகுதிகளில் கிளை பரப்பியுள்ள ‘டாம் இண்டியா ‘ சேவை மையம்.

இதன் விவரங்கள் www.indiateam.org-ல் பார்க்கலாம்.

இவர்கள், வரும் ஆகஸ்ட் 28ம் தேதி, கலிபோர்னியா, சான் ஓசே அருகிலுள்ள ‘மவுண்டன் வியூ ‘ என்னுமிடத்தில் நிதி வசூல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் வரும் நிதி கொண்டு, தமிழ்நாடு, சேலம் மாவட்டம், பெரியபுத்தூர் ஊரில் உள்ள அரசாங்க ஆரம்பப் பள்ளியை , டாம் இந்தியாவின் ‘கனவுப் பள்ளிக்கூடம் ‘ ஆக நனவாக்குகிறார்கள்.

நனவாகும் போது, அப்பள்ளிக்கு, மின்சார வசதி, சுற்றுச் சுவர், மேசை நாற்காலிகள் மற்றும் தண்ணீர் வசதி கிடைத்திடும்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்கு மவுண்டன் வியூ மேயர் தலைமையேற்று பேசுகிறார்.

டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘

நாள்: 28 ஆகஸ்ட் 2004

நேரம்: 8 மணி காலை.

இடம்: Shoreline Park,

3070 North Shoreline Blvd,

Mountain view, CA -94043.

(Walk starts from KITE FLYING ZONE )

மேலும் விவரங்களுக்கு: www.indiateam.org

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

கோச்சா ( எ ) கோவிந்த்

gocha2004@tyahoo.com

Series Navigation

கோச்சா

கோச்சா