ரா.கிரிதரன்
நீ இல்லாமல் இந்த கதையில் எதுவுமே ஒடாது. கண்டிப்பாக உன் இருப்பு தேவை.
ஆனால் நீயோ என்னுடன் வீட்டில் சிறிது நேரம் மட்டுமே இருக்கிறாய். நான் இப்போதிருக்கும் மொட்டை மாடிக்கு வருவதற்கு உனக்கு பல மணிநேரங்கள் ஆகிவிடும்.
இந்த கதையை கண்டிப்பாக எழுத வேண்டும்; அரித்துக்கொண்டேயிருக்கிறது – எறும்பு கடித்து தடித்த இடம்போல. சரி, மொட்டை மாடியில் குளிர் அதிகமாக சமயமறைக்குள் ஒளிந்துகொள்கிறேன். கொஞ்சம் சமைத்தாலாவது நேரம் போவது தெரியாது. அதற்கு முன் ஜிக்ஸா டப்பாவைத் தேடவேண்டும். ஜில்லென இருந்த பாத்திரத்தை தொடும்போது உன் நினைப்பு வருகிறது. இந்நேரம் அலுவலகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருப்பாய். ஆப்பிள் வித் மிக்ஸட் நட்ஸ். நட்ஸ் நீ தான் எனச் சொன்ன முதல் முறை களுக்கென சிரித்து வைத்தாய். நாம் போன பஸ்ஸில் எல்லோரும் நம்மைத் திரும்பிப்பார்த்தார்கள்.
சரி, கதையைச் சொல்லி விடுகிறேன்.
ஓஸ்லோவிற்கு வர நவம்பம் மாதத்தைத் தேர்ந்தெடுத்த முட்டாள்தனத்தால் பலமுறை அறைந்துகொண்டேன். ரித்தேஷ் வந்ததும் அப்போதுதான். அதனால் அவனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். நாம் தங்கியிருந்த ஹோட்டல் அருகே இருந்த பஸ் நிலையம். மாலை நேரம்.
ஹும்..உங்களுடையது ஓஸ்லோவிலேயே காஸ்ட்லியான ஹோட்டல் அய்யா – ரித்தேஷ் பேசிய முதல் வாக்கியம்.
ஒரு தெர்மல், அதன் மேல் டி ஷர்ட், அதைத் தாண்டி இரு கம்பிளி ஆடைகளையும் மீறி உன் கைகளை பேண்ட் பாக்கெட்டுள் புதைத்து வைத்திருந்தாய். சென்னையில் அரிசி மாவை அறைத்து கிரைண்டரிலிருந்து பாத்திரத்திற்கு மாற்றி, மீந்த மாவை விளிம்பில் வழிக்கும் கைகளா அது. சின்ன வயதில் பார்த்தது. கல்யாணத்திற்கு பின் சமைப்பதையே இல்லை.
ஜெட் லாக் இன்னும் போயிருக்காதே. காரை அங்க பார்க் பண்ணியிருக்கேன்..முதல்ல உள்ள போய் உட்கார்ந்துகொண்டு பேசுவோம் – உன் உதடு அசைந்து வார்த்தை அதிலிருந்து வருமா என சந்தேகத்தோடே ரித்தேஷ் உன்னிடம் சொன்னதுபோல் இருந்தது. ரித்தேஷுடன் தான் எனக்கு வேலை.
ஓஸ்லோ செண்டருக்கு சென்றோம். உயரமான கட்டிடங்களின் ஜன்னல் வழியே தெரிந்த விளக்குகளை கண்கொட்டாமல் பார்த்தாய். சிட்டி எல்லைத் தாண்டி பனி மலைவழியே வளைந்த காரால் , இறங்கும் வரை என் மேல் சாய்ந்து கொண்டு வந்தாய். நார்வே – பனி, இயற்கை, நதி சரியான கலவையில் சேர்ந்த சொர்க்கம். இத்தனை ஜனக்கூட்டம் நிறந்த ஓஸ்லோவில் சிட்டி செண்டரின் தூய்மை இயற்கையை விட விந்தையான ஒன்று என ரித்தேஷ் கூறியபோது உடனே ஆமோதித்தேன்.
காரை ஓட்டும்போது, சில மலைகளில் குடுகுடுன்னு கற்கள் சரியும், வினய். காரை ஓரமா நிறுத்தி பார்த்துக்கொண்டேயிருக்கலாம்
கொஞ்சம் ஓரமா நிறுத்துங்களேன். ஒரு ஃபோட்டோ எடுக்கலாம்.
பசிக்கும் நேரத்தில் உனக்கு விவஸ்தையே கிடையாதே. நேரா வீட்டுக்கே போயிடலாமே, ரித்தேஷ்.
உன் முகம் போன போக்கை கண்ணாடியில் பார்த்த பின் நிறுத்தினான். அன்று இரவு இதைச் சொன்ன போது நீ நம்பவில்லை.இப்போது நம்புகிறாயா?
சரிவான புல்வெளிகள். அவை சேர்ந்து முடியும் இடத்தில் பங்களா போன்ற வீடு. ரித்தேஷ், எங்கள் கம்பெனியின் க்ளையண்ட் எம்.டி. சொந்த வீடு கட்டி பத்து வருடங்களாக இருக்கின்றான். விவாகரத்தானவன். ஆறு மாதம் அம்மா வந்து போவார்கள். இவ்வளவு விவரத்தையும் வீட்டை அடையுமுன் சொல்லிவிட்டான்.
வாவ்.மெலிதான உன் விரல்களால் பளிங்கில் செய்த ஏஞ்சல் பொம்மைகளை தடவினாய்.முணுமுணுவென பல பொருட்களைப் பார்த்து நீ சொன்ன விவரங்கள் எனக்கு எரிச்சலாய்பட்டது.
வீட்டிலிருந்த அம்மா கேட்டேவிட்டாள். இப்போதுதான் முதல் முறை வெளிநாட்டுக்கு வருகிறாயாமா?
அசிங்கம் பாயை விரித்து படுத்துவிடும்.கொஞ்சம் வாயை மூடிவிடு என்பதைப் போல் நான் முறைக்க – என் தப்பா அது – மீதி நேரம் முழுவதும் சும்மா இருந்தாய்.
சாப்பாடு சுமார். அதற்குபிற்கு பல முறை போன பிறகும் டேஸ்ட் மாறவில்லை.
ஓ மை காட் நான் சமைத்து நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டுமென ரித்தேஷ் சொல்ல –
இதற்காக பல முறை. பார்ட்டிக்களுக்காக ஆயிரமுறையாவது போயிருப்போம்.
சளைக்காமல் கூப்பிடறானே. இந்த தடவை ஏதாவது சாக்கு சொல்லலாம்.
ஹூம்..அந்த முறையும் அவனுடை வீட்டுக்கோ, அல்லது பிக்னிக் பாஸ்கட் எல்லாம் எடுத்துக்கொண்டு ஏதாவது ஏரிக்கு பக்கத்திலோ சிரித்துக்கொண்டிருப்போம்.
அப்போதெல்லாம் என் வாயில் இருக்கும் புல்லை மட்டும் எடுக்க மாட்டேன். இறுகிய முகத்துடன் சிரித்து , புல்லை கடித்துத் துப்ப வேணுமே.
நான் வேலையில் முக்கிக்கொண்டிருக்க, ரித்தேஷுடன் கோ.ஆப், ஷாப்பிங் எனச் சுத்தினாய். என் கத்தல்கள் அர்த்தமில்லாதவை. அழுக்கு மனம் கொண்டவன் என என்னையே சொல்வாய்.
என் மேல் தான் தவறோ. இப்படித்தான் இருக்கவேண்டும் எனத் திட்டம் போட்டு வாழ்பவன் என என்மேலே பிரேமைக் கொண்டிருந்தவன் நான். இப்பொது சிதறியபடி பல கற்பனைகளை என் மேலேயே தருவிக்க முடியுமா?
நான் யூனோ, ஜிக்ஸா என விளையாட்டுகளில் மூழ்கத் தொடங்கினாலும், ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என சமாதானம் செய்துகொண்டோம்.
ஜிக்ஸா விளையாடிருக்கிறாயா?
சிதறிப்போட்ட பல வடிவ அட்டைகள். பல படங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை அமைத்துக் காட்ட வேண்டும்.
மஹா, இதோ லிஸ்டு பாரு. எவ்வளவோ விதத்தில ஒட்ட முடியுமே?
சாய்த்து வைக்கப்பட்டிருந்த தகர ஷீட்டுகளின் மேல் புழுக்கை அளவு ஐஸ் மழை சத்தமிட்டுக்கொண்டிருந்த மதியங்கள்.
மதியத்தை விழுங்கும் ஃபியாட்ஸ் மலைத் தொடர் ஏதோ சில நாட்களில் பளபளக்கும்பொது.
முடிக்க முடியாத சீட்டு விளையாட்டு போல் நீண்டுகொண்டே போன இரவுகள், என் நினைப்பையும் விளையாட்டில் இழுத்துவிட்டது.
மெதுவாக. கொஞ்சம் கொஞ்சமாக பலவிதமான ஜிக்ஸாக்களை சேகரிக்கத் தொடங்கினேன்.
அவற்றை ஒழுங்குமுறையில் சேர்ப்பதை விட , கலைப்பதற்கு சிரமப்பட்டேன். சேர்ப்பது ஒரு வழிதானே இருக்க முடியும், கலைப்பதற்குத்தான் எண்ணிலடங்கா யுத்திகள்.
நீ சுடோகு என்ற ஜப்பான் நாட்டு விளையாட்டு ஆடியிருக்கிறாயா?
ஒன்பதே எண்கள், எண்பத்தி ஒன்று கட்டடங்களை நிரப்ப வேண்டும். எளிய விதிகள் தான். ஒரே வரிசையில் – இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் – ஒரு எண் ஒரு முறைதான் வரவேண்டும்.
எவ்வளவு எளிய விதி. இதில் காலம் முழுக்க கழிக்க முடியும் என யாராவது சொல்லியிருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன்.
சரி, அதையும் கற்றுக்கொண்டேன். அளவில்லா விளையாட்டுகளை கற்றுத் தந்தாய். அலுவலகம் தவிர இதையே முழு நேரமாகச் செய்தேன்.
கண்ணாம்பூச்சி, பாண்டி என விளையாடிய நீயா இது. ரித்தேஷிடம் கற்றுக்கொண்டிருப்பாய். புத்திசாலிதான் , இங்கேயே ஒரு வேலையையும் தேடிக்கொண்டுவிட்டாயே.
சகுனிக்கு ஒவ்வொரு முறை தாயத்தை உருட்டும்போதும் அதன் முடிவுகளின் தலைவிதி உடனடியாகத் தெரிந்துவிடுமாம். சூதாடி. தன் குடும்பத்தையே தாயக்கட்டைகளில் நிரப்பியவனாயிற்றே. தவறாய் ஒரு முறைக் கூடப் போக வாய்ப்பில்லை.
ஒவ்வொரு தாய உருட்டல்களுக்கும் பல சாத்தியக்கூறுகள் நொறுங்கி விழுகின்றன. அவற்றை அவன் நினைத்தால் கூடத் திரும்ப அமைக்க முடியாது.
அப்படி நொறுங்கியவற்றின் சாத்தியக்கூறுகள் – தனித் தனி மகாபாரதங்கள் ஆயிருக்கும்.
எப்படி கலைத்தாலும், சரியாக ஃபிக்ஸ் பண்ணிடறீங்களே. என் வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்த படி மஹா சொல்வாள். தினமும் சொல்லும் வார்த்தைதான். ஓஸ்லோவின் மற்றொரு பனிக்காலமும் வந்துவிட்டது. இந்த ஊர் எந்த காலத்தில் வந்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
இன்று ஒரு முடிவுடன் வந்துவிடுவாள். ரித்தேஷிடம் பேசப் போவதாய் சொன்னாள். திரும்ப இந்தியா செல்லலாம்.அவள் அலுவகத்திலிருந்து திரும்புவதற்குள் என் ஜிக்ஸாக்களைத் தேட வேண்டும். தினமும் ஒழித்து வைத்துவிடுகிறாள். அடுத்த நாள் வேலைக்குச் செல்லும் வரை விளையாடினால் தப்பா?
இதோ கண்டுபிடித்துவிட்டேன்.
வழக்கம்போல சரியாக சேர்த்து வைத்த ஜிக்ஸா.
கலைக்க மட்டும் யாராவது கற்றுக்கொடுத்தாள் எளிதாக இருக்கும்.
0-
girigopalan@gmail.com
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- “புறநானூற்றில் அவலம்”
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- A STREETCAR NAMED DESIRE = screening
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- துளிகள் நிரந்தரமில்லை
- கடைசி ஆலமரம்
- நடை வாசி
- பகைத்துக் கொள்!
- பயணம்….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேதவனம் -விருட்சம் 46
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- அச்சம் தவிர்
- தட்டையாகும் வளையங்கள்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- காங்கிரஸ் கவனிக்க !
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஜிக்ஸா விளையாட்டு
- தன்மை
- ஈழ சகோதரர்கள்
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- பூரண சுதந்திரம் ?
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- ஒரு நிலாக்கிண்ணம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- ஏதும்…
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr