சொர்க்கமாயும் சில கணங்கள்.

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

எஸ். வைதேஹி.


இடைப்பட்ட
காலங்களில்
நழுவி விழுந்தது
காலத்தின் திசைகளும்
காற்றின் வீச்சமும்

மனதின் மலை
இறங்கிய
அண்ட வெளியின்
கனவில்
சொர்க்கமாய்
நிழல்களில்
கிடந்த பிம்பங்களும்
நகர்ந்த நாட்களும்.
***
svaidehi@hotmail.com

Series Navigation