செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா? -10

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அமெரிக்க அணு மின்னிலையம்
மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி,
திரிமைல் தீவில்
எரிக்கோல்கள் உருகின!
ரஷ்யாவின் அணு மின்னிலையம்
மர்மச் சோதனை மூலம் வெடித்து,
செர்நோபில் அருகிலே
நிர்மூல மானது!
பாரத அணுமின் னுலைகளில்
பாதுகாப்புகள் மிகுதி! யந்திரச் சாதனம்
முறிந்து போவதும், பணியாளர்
நெறிதவறி யியக்குவதும்,
கட்டுப்பாடுகள்
தட்டுத் தடுமாறுவதும்
அபாய வேளையில் ஆற்றல் குறையாமல்
விருவிருவென ஏறுவதும்
ஒருபோதும் நேராத
அபூர்வ நிகழ்ச்சி!

பாரத நாட்டின் அணு மின்னுலைகளைப் பற்றி

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு திட்டம் இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy (1840-1928)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: 1986 ஏப்ரல் 25 தேதி ஷி·ப்டு இயக்குநரும், அதிபரும் பொறுப்பற்ற முறையில் அணுவியல் இயக்கப் பாதுகாப்பு நெறிகளை அறிந்தோ, அறியாமலோ பன்முறை முறித்தனர் [Breaches of Nuclear Safety Regulations] என்பது மன்னிக்க முடியாத இமாலயத் தவறுகள்! 1000 MWe பேராற்றல் கொண்ட செர்நோபில் விபத்துக்கு மூல காரணம் பல்வேறு டிசைன் தவறுகளாயினும், ஒழுங்காக இயங்கி வந்த அணுமின் நிலையம் 1986 ஏப்ரலில் திட்டமிட்ட சோதனையை தொடங்கா திருந்தால் அந்தக் கோர விபத்து நேர்ந்திருக்காது! அனுமதிக்கப்பட்ட முதலில் திட்டப்படிப் பின்பற்றி மாறுதல் எதுமின்றி வெற்றியாகாத சோதனையைப் பாதியிலே நிறுத்தி யிருந்தால், அந்தப் பயங்கர விபத்து நேர்ந்திருக்காது! விபத்து நிகழ்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: 1. சோதனையின் முழு விளக்கங்களை சோதனைத் தலைவர் அணு உலை இயக்கப் பணியாளருடனும், பாதுகாப்பு நெறியாளருடனும் பங்கிட்டுக் கொள்ள வில்லை! 2. திட்டமிட்டபடி சோதனை செய்ய முடியாத போது, திடீர் மாற்றங்களை அனுமதியின்றிச் செய்து, டெலி·போன் மூலமாகப் பணியாளருக்கு ஆணையிட்டது! 3. பாதுகாப்பு அதிபர் அனுமதியின்றி, அணு உலைப் பாதுகாப்புச் சாதனங்களையும், அபாயத் தடுப்பு ஏற்பாடுகளையும் பணியாளர் முடமாக்கியது. அதாவது மாபெரும் மனிதத் தவறால்தான், செர்நோபில் கோர விபத்து நேர்ந்தது! குறைபாடுகள் மிக்க செர்நோபில் அணுமின் உலை கூட, மனிதத் தவறுகளுக்கு உட்படாதிருந்தால், கடந்த 20 ஆண்டுகளும் ஓடி பல்லாயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் பரிமாறி யிருக்கும்! அத்துடன் உயிரிழந்த மாந்தரும், வீடிழந்த மக்களும், நோயுற்ற சேய்களும் பூரிப்போடு நடமாடி யின்றும் வாழ்ந்து வந்திருப்பார்!

பாரதத்தின் பாதுகாப்பான அணுமின்சக்தி நிலையங்கள்

இந்தியாவில் மூன்று தரப்பட்ட அணுமின் உலைகள் உள்ளன. 1960 ஆண்டுகளில் நிறுவப்பட்ட முதல் மாடல், கொதிநீர் அணுமின் நிலையம் [Boiling Water Reactor (BWR)] எனப்படுவது. அடுத்து நிறுவப்பட்ட இரண்டாவது மாடல் அழுத்தக் கனநீர் அணுசக்தி நிலையம் [Pressuized Heavy Water Reactor (PHWR)] எனப்படுவது! மூன்றாவது கட்டப்படும் மாடல் அழுத்தநீர் அணுமிசக்தி நிலையம் [Pressurized Light Water Reactor (PWR)] எனப்படுவது. தாராப்பூரில் (மகாராஷ்டிரா) உள்ள இரட்டைக் கொதிநீர் அணுமின்சக்தி நிலையத்தை அமெரிக்காவின் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி முதன்முதலில் நிறுவியது. அடுத்த மாடலான அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களின் முதலிரண்டு யூனிட்டுகள் கனடாவின் உதவியால் ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் கட்டப்பட்டன. பிறகு அவற்றைப் போல பல இரட்டை அணுமின் நிலையங்கள் தமிழ்நாட்டில் கல்பாக்கம், டெல்லிக் கருகில் நரோரா, கர்நாடகாவில் கைகா, குஜராத்தில் கக்ரபார், ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் மேலும் இரட்டை யூனிட்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் 220 MWe மின்சார ஆற்றல் கொண்டவை. பிறகு அதே கனநீர் அணுமின்னுலைத் தத்துவத்தி லியங்கும் ஆற்றல் மிக்க 540 MWe இரட்டை யூனிட்டுகள் தாராபூரில் புதிதாகச் சமீபத்தில் நிறுவப்பட்டுச் சிறப்பாக இயங்கி வருகின்றன. புதிதாக ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் அடுத்து இரட்டை யூனிட்டுகளும், கர்நாடகா கைகாவில் மேலும் இரட்டை யூனிட்டுகளும் கட்டப்பட்டு வருகின்றன. பாரத நாட்டின் அணுவியற் துறையகம் 220 MWe, 540 MWe இரட்டைக் கனநீர் அணுசக்தி நிலையங்களை நிறுவி வெற்றிகரமாக இயக்கிவரும் சமயத்தில் தற்போது ரஷ்ய டிசைன் PWR மாடலான இரட்டை அணுமின் நிலையம்: VVER-1000 தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் உள்ள கூடங்குளத்தில் நிறுவகமாகி வருகிறது. கூடங்குளத்தில் நிறுவகமாகி வரும் முற்போக்கான ரஷ்ய அணுமின்னுலை: VVER-1000, உலக மனைத்தும் இகழும் பிற்போக்கான செர்நோபில் அணுமின்னுலையைப் போன்றதில்லை!

தாராப்பூர் கொதிநீர் அணுமின்னுலை, செர்நோபில் அணுமின்னுலை வேறுபாடுகள்

தாராப்பூர் கொதிநீர் அணுமின்னுலை 1960 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி டிசைன் செய்த முதற்பிறப்பு மாடல் வகுப்பைச் [First Generation BWR Model] சேர்ந்தது. அதன் அணு உலை அழுத்தக்கலம் [Reactor Pressure Vessel] உருக்கு உலோகத்தாலானது. எரிக்கோல்கள் சிறிது செறிவான யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகளைப் [2%-3% Enriched Uranium Dioxide Pellets] பெற்றவை. உலைக்கலம் மற்றும் அதைச் சார்ந்த முக்கிய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் யாவும், ஓர் மூடிய கோள அரணுக்குள் [Dry Well Containment] அமைக்கப் பட்டுள்ளன. நியூட்ரான் மிதவாக்கியாக சாதா நீரும், வெப்பக் கடத்தியாக அதே சாதா நீரும் பயன்படுகின்றன. நீராவி அணு உலைக் கொதிகலத்திலே நேரடியாக உற்பத்தியாகிப் பிறகு டர்பைன் ஜெனனியை ஓட்ட அனுப்பப் படுகிறது. நியூட்ரான் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைக்கவும், அணு உலையை நிறுத்தவும் போரான் கார்பைடு விழுங்கிகள் பயன்படுகின்றன. தாராப்பூர் கொதிநீர் அணு உலை செர்நோபில் போன்று நேரடியாகக் கொதிகலத்தில் நீராவி உண்டாக்கும் மாடல். மேலும் செர்நோபில் அணு உலையில் எரிக்கோலாகப் பயன்படுவதும் 2%-3% செறிவு யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகளைக் கொண்டவை

செர்நோபில் அணு உலைக்கும் தாராப்பூர் அணு உலைக்கும் இருபெரும் முக்கிய டிசைன் வேறுபாடுகள் உள்ளன: 1. அணு உலைக்கலம் தாராப்பூரில் ஒரு பிரதமக் கோட்டைக் குமிழிக்குள் [Dry Well-Primary Containment] பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. வெடித்துப் போன செர்நோபில் அணு உலைக்குப் பாதுகாப்பாகப் பிரதமக் கோட்டை அரண் எதுவும் அமைக்கப் படாததால், யுரேனிய எரிக்கோல்களின் கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறி உலகெங்கும் பரவின! 2. தாராப்பூர் கொதிநீர் அணு உலையில், வெப்பக்கடத்தி நீர் வற்றிப் போனால், நியூட்ரான் பெருக்கம் தானாகக் குறைந்து வெப்பசக்தி ஆற்றல் விரைவாகத் தணிகிறது [Negative Void Coefficient]. தாராப்பூர் அணு உலை நியூட்ரான்களை மிதமாக்கி யுரேனியத்தைப் பிளக்கும் மிதிவாக்கித் திரவமும் [Moderator] சாதா நீரே. அதாவது மிதவாக்கி நீரும், வெப்பக் கடத்தி நீரும் ஒரே சாதா நீராக இருப்பதால், அணு உலைக்குள் நீர் மட்டம் குறையும் போது, நியூட்ரான் எண்ணிக்கைத் தானாகக் குன்றி வெப்பசக்தியும் குறைகிறது. ஆனால் செர்நோபில் அணு உலையில் மிதவாக்கியாகப் பயன்படுவது 1700 டன் கரித்திரட்டு எனப்படும் கிரா·பைட் [Graphite] கட்டிகள். செர்நோபில் உலைக்கலத்தில் நீர் மட்டம் தணியும் போது கிரா·பைட்டால் மிதமாக்கப்படும் நியூட்ரான் எண்ணிக்கை மிகையாகி, வெப்பசக்தி ஆற்றல் விரைவில் மீறிப் பன்மடங்கு [Positive Void Coefficient] ஏறுகிறது! ஆனால் தாராப்பூர் கொதிநீர் உலை மாடலில் அவ்விதப் பயங்கர வெப்ப எழுச்சி எப்போதும் நேர்வதில்லை!

அழுத்தக் கனநீர் அணுமின்னுலை, செர்நோபில் அணுமின்னுலை வேறுபாடுகள்

கனடாவின் டிசைனான காண்டு மாடல் [CANDU (Canada Deuterium, Uranium)] எனப்படும் கனநீர் அணுமின் நிலையங்கள் மொத்தம் 18 [2006 வரை] பாரத நாட்டில் நிறுவப்பட்டு, அவற்றில் 14 நிலையங்கள் தற்போது அணுசக்தியைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. டியூடிரியம் (Deuterium) எனப்படும் கன ஹைடிரஜன் சாதா ஹைடிரஜனை விடச் சற்று கனமானது. டியூடிரிய [D2 Molecule] அணுக்கருவில் ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் உள்ளன. சாதா ஹைடிரஜன் [H2 Molecule] அணுக்கருவில் ஒரு புரோட்டான் மட்டுமே உள்ளது. அதாவது ஒரு நீர் மூலக்கூறின் அணுநிறை [Atomic Mass of H2O (2+16)] 18 என்று கணிக்கும் போது கனநீர் மூலக்கூறின் அணுநிறை [Atomic Mass of D2O (4+16)] 20. இயற்கை நீரிலும், கடல் நீரிலும் கனநீர் 6400 இல் 1 பாகமாகக் கலந்துள்ளது. பேரளவு திரண்டுள்ள கனநீர்த் திரவம் மனித உடலுக்கு நச்சுத் திரவமாகக் [Toxic Liquid in Higher Concentration] கருதப்படுகிறது!

கனநீர் அணுமின் உலைகளின் எரிக்கோல்களில் செறிவாக்கப் படாத இயற்கையான யுரேனிய டையாக்ஸைடு வில்லைகள் [Natural Uranium Dioxide Pellets] பயன்படுகின்றன. நியூட்ரான் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியகவும் இரண்டு தனித்தனிச் சுற்றுகளில் கனநீர் பயன்படுகிறது. நீராவி அணு உலைக்கலத்தில் உண்டாகாது, நீராவி ஜெனனியில் [Steam Generator] உற்பத்தியாகி டர்பைன் ஜெனனியை ஓட்டுகிறது. நியூட்ரான் விழுங்கியாகவும், அணு உலையை நிறுத்தவும் போரான் கலவைகள் அல்லது காட்மியம் கோல்கள் [Boron Carbide or Cadmium Rods] பயன்படுகின்றன. கனநீர் அணுமின்னுலைகளில் வெப்பக் கடத்தி நீரிழப்பால், வெப்பசக்தி மீறும் குறை யிருப்பதால் [Positive Void Coefficient] கடோலினியக் கலவைத் திரவம் [Gadolinium Compound] நியூட்ரான் விரைவு விழுங்கிகளாக மிதவாக்கிக் கனநீரில் செலுத்தப் படுகின்றது.

செர்நோபில் அணுமின் நிலையம் போலின்றிப் பாரதத்தின் கனநீர் அணுமின் உலைகள் அனைத்தும் ஒரு பெரும் காங்கிரீட் கோட்டை அரணுக்குள்ளே அமைக்கப் பட்டுள்ளன. அவற்றிலும் பெரும்பான்மையான கனநீர் அணு உலைகள் இரட்டைக் கோட்டை அரணில் அடக்கப் பட்டுள்ளன. அணுமின் நிலையங்களை நெறிகளைப் பின்பற்றிச் செம்மையாக இயக்கவும், கண்காணிக்கவும் பொறியாளரும், பணியாளரும் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறார். அவருக்கு மெய்யான பயிற்சிகள் தருவதற்குப் போலி அணுமின் நிலைய ஆட்சி அரங்கம் [Reactor Operation Similator Panels] பயிற்சிப் பள்ளித் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செர்நோபில் அணுமின் உலை இயக்குநர் போன்று, அரைகுறை அறிவுடன் நெறிகள் பலவற்றை முறித்த, போதுமான பயிற்சி யில்லாத பணியாளரைப் பாரத அணுமின் நிலையங்களில் காண்பது வெகு அபூர்வம்.

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy
[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

25. Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Accident Sequence, The RBMK Reactor, Events Leading to the Accident, The Graphite Fire [2002 Update]

26 RBMK Reactors – Nuclear Issues Briefing Paper # 64A [Feb 2002]

27. Development of Improved Safety with the Russian VVER-1000 Reactor Plant [Kudungalam Model] Following Three Mile Island & Chernobyl Reactor Accidents By: Valery P. Novak, Alexander K. Podshibyakin & Mikhail P. Rogov.

******************

jayabarat@tnt21.com [June 29, 2006]

Series Navigation

செர்நோபில் அணுமின்னுலை விபத்துக்குக் காரணமான இயக்கநெறி முறிவுகள்!-9

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நெறி மாறிப் போனால், யந்திரம்
குறி மாறிப் போகும்!
விசை மாறி ஓடித்
திசை மாறிச் செல்லும்!
கட்டுப்பாடு முறிந்தால், யந்திரம்
தட்டுத் தடுமாறி
முற்றும் சிதைந்து,
விட்டு விடுதலை யாகும்!

****************

“தோழர்களே! செர்நோபில் அணுமின் நிலையத்தில் மாபெரும் சீர்கேடான விபத்து நேர்ந்துள்ள தென்று நீங்கள் யாவரும் அறிவீர்! சோவியத் மக்கள் பேரின்னல் உற்றதுடன், அவ்விபத்து அகில உலக நாட்டினரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி விட்டது! முதன்முதலாகக் கட்டுக்கடங்காது மீறிய அணுசக்தியின் பேராற்றலால் பாதிக்கப்பட்டு நாம் பேரளவு சிரமத்துடன் முரண்படுகிறோம்!”

மிக்கேல் கார்பச்சாவ், சோவியத் அதிபர் [1986 ஏப்ரல் உரை]

செர்நோபில் சிதைந்து போனாலும், அதன்
துர்நாச மின்னும் தொடர்கிறது!
கதிர்வீச்சு தேய்ந்து சிறுத்தாலும், அது
உதிர்த்த கழிவுகள் ஆறவில்லை!
வெடிப்பின் மாபெரும் தீங்குகளை,
துடித்திடும் மாந்தர் எப்படி மறந்திடுவார்?

செர்நோபில் நினைவுகள்

மரணமானவன் நீயாக இருந்திருக்கலாம்!
ஆனால் நீயில்லை!
யாரோ ஒருவன் அவன்! வேறு
ஒருவன் மடிந்து விட்டான்,
உனக்குப் பதிலாக! அதை
உனது தவறெனக் கருதாதே! ஆயினும்
நினைப்பாய் அவனை எப்போதும்!
நின்னைப் போல அவன் ஒருவன்!

ஹெலன் வாக்கர், செர்நோபில் பாடல்கள் [ஜூலை 2, 1995]

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு திட்டம் இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy (1840-1928)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: யுரேனிய உலோகத் தனிப்பு, எருக்கோல் படைப்பு, அணுசக்தி மின்சார நிலைய இயக்கம், அணுப்பிளவுக் கழிவுகள் சுத்தீகரிப்பு, பிறகு குறுங்கால அல்லது நீள்காலப் புதைப்பு போன்ற அணுசக்தி சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்களிலும் மனிதருக்குத் தீங்குகள் நேர்ந்திட வாய்ப்புக்கள் உள்ளன. அணுவியல் மூலகங்களான யுரேனியம், தோரியம், புளுடோ னியம் மூன்றும் பேரளவு ஆல்ஃபா கதிர்வீசும் [Alpha Rays] உலோகங்கள். அந்தக் காலத்தில் போதிய பாதுகாப்பு முறைகளைப் பேணாது, செக்கோஸ்லோவாக்கியா யுரேனியச் சுரங்களில் தாதுக்கனி [Mineral Ore] தோண்டிய 50 சதவீதத் தொழிலாளிகள் ரோடான் வாயுவை [Radon Gas, Alpha Emitter] நுகர்ந்து, புப்புச நோயுற்று மாண்டனர்! வட அமெரிக்க யுரேனியச் சுரங்கங்களில் கூட இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1960 ஆண்டுகளில்தான் ரேடான் வாயு அளவுகள் பாதுகாப்பு அளவுக்குக் குறைக்கப் பட்டன! ரேடான் வாயு தூண்டும் புற்று நோய்கள் தென்பட 10 அல்லது 20 ஆண்டுகள் எடுக்குமாதலால், சமீப காலத்தில்தான் அக்காரண வாயுவின் சீற்றம் பேரளவு குறைக்கப் பட்டுள்ளது! மேலும் யுரேனியச் சுரங்கப் பணியாளிகளின் புப்புசங்களைப் பாதிக்கும் சிலிகோஸிஸ் நோய் [Silicosis, A Lung Disease] மேம்பாடானப் பாதுகாப்பு முறைகளால் ஏறக்குறைய முற்றிலும் நீக்கப் பட்டது!

செர்நோபில் மாடல் RBMK-1000 போன்ற 1000 MWe பேராற்றல் பெற்ற அணுமின் நிலையங்களுக்கு, மாடலுக்குத் தகுந்தவாறு ஓராண்டு தேவைப்படும் யுரேனிய எருக்கோல் 50 முதல் 300 டன் ஆகலாம். யுரேனியம் தோண்டும் இடத்துக்கும், அளவுக்கும் ஏற்ப தாதுக்கனி 50,000 முதல் 300,000 டன் தோண்ட வேண்டி நேரலாம். யுரேனியச் சுரங்கங்களால் சூழ்வெளியில் ரேடான் வாயு பெருகி அண்டி வாழ்வோர் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. அமெரிக்காவின் சமீபத்திய கருத்துப்படி, ஸல்ஃபர் டையாக்ஸைடின் குறைந்த வாயுக் கொள்ளளவும், நிலக்கரி, எரி ஆயில், எரிவாயுக் கழிவுப் புகைகளின் மிகையான கொள்ளளவும் சேர்ந்து ஆண்டுக்கு மரண எண்ணிக்கையை 100 பேராகக் கூட்டி விடலாம்! 1000 MWe பேராற்றல் கொண்ட அணுமின் நிலையம் ஒன்றால் ஆண்டுக்கு 1 நபர் மரணமாகலாம் என்று டன்ஸ்டர் [Dunstar (1981)] அறிக்கை கூறுகிறது! அத்தகையதோர் உளவறிக்கை மூலம் யுரேனிய தாதுக்கனி தனிப்பு முதல் நிலைய இயக்கம் வரை, அணுசக்தி மின்சாரப் பரிமாற்றம் பாதுகாப்பானதோர் சாதனமாக நிலைத்து வர வாய்ப்பும், வழிமுறையும், பயிற்சிகளும் உலகில் நிலவி வருகின்றன.

விபத்துக்குக் காரணமான விதிமுறைப் பிறழ்ச்சிகள்
1000 MWe பேராற்றல் கொண்ட செர்நோபில் விபத்துக்கு மூல காரணம் பல்வேறு டிசைன் தவறுகளாயினும், ஒழுங்காக இயங்கி வந்த அணுமின் நிலையம் 1986 ஏப்ரலில் திட்டமிட்ட சோதனையை தொடங்கா திருந்தால் அந்தக் கோர விபத்து நேர்ந்திருக்காது! அனுமதிக்கப்பட்ட முதலில் திட்டப்படிப் பின்பற்றி மாறுதல் எதுமின்றி வெற்றியாகாத சோதனையைப் பாதியிலே நிறுத்தி யிருந்தால், அந்தப் பயங்கர விபத்து நேர்ந்திருக்காது! விபத்து நிகழ்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: 1. சோதனையின் முழு விளக்கங்களை சோதனைத் தலைவர் அணு உலை இயக்கப் பணியாளருடனும், பாதுகாப்பு நெறியாளருடனும் பங்கிட்டுக் கொள்ள வில்லை! 2. திட்டமிட்டபடி சோதனை செய்ய முடியாத போது, திடீர் மாற்றங்களை அனுமதியின்றிச் செய்து, டெலிஃபோன் மூலமாகப் பணியாளருக்கு ஆணையிட்டது! 3. பாதுகாப்பு அதிபர் அனுமதியின்றி, அணு உலைப் பாதுகாப்புச் சாதனங்களையும், அபாயத் தடுப்பு ஏற்பாடுகளையும் பணியாளர் முடமாக்கியது. அதாவது மாபெரும் மனிதத் தவறால்தான், செர்நோபில் கோர விபத்து நேர்ந்தது! குறைபாடுகள் மிக்க செர்நோபில் அணுமின் உலை கூட, மனிதத் தவறுகளுக்கு உட்படாதிருந்தால், கடந்த 20 ஆண்டுகளும் ஓடி பல்லாயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் பரிமாறி யிருக்கும்! அத்துடன் உயிரிழந்த மாந்தரும், வீடிழந்த மக்களும், நோயுற்ற சேய்களும் பூரிப்போடு நடமாடி யின்றும் வாழ்ந்து வந்திருப்பார்!

1986 ஏப்ரல் 25 தேதி ஷிஃப்டு இயக்குநரும், அதிபரும் பொறுப்பற்ற முறையில் அணுவியல் இயக்கப் பாதுகாப்பு நெறிகளை அறிந்தோ, அறியாமலோ பன்முறை முறித்தனர் [Breaches of Nuclear Safety Regulations] என்பது மன்னிக்க முடியாத இமாலயத் தவறுகள்! அவர் அனைவரும் அணு உலைப் பாதுகாப்புப் பயிற்சிகள் எதுவும் முன்பாக, முறையாக அளிக்கப்படாதவர் என்பது தெளிவாகத் தெரிகிறது! அபாய விபத்துகள் நேரப் போவது கூடத் தெரியாமல் தவறுகளை, மென்மேலும் தொடர்ந்தது மிகவும் வியப்பை உண்டாக்கிறது! கூலிக்குப் பணிபுரியும் வேலைக்காரராக இருந்தாரே தவிர, மெய்ப்பணியில் அர்ப்பணிக்கும் ஆர்வப் பணியாராளாய் உழைக்க வில்லை! அன்றைய சோதனையை எப்படியாது சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் மூழ்கி யிருந்ததால், திட்டம் மாறுபாடும் போது ஒவ்வொரு கட்டத்திலும் நின்று சிந்திக்கத் தவறி, நெறிதவறியப் பணியாளராய் வேலை செய்தார்! ஆர்வம், அக்கரை யில்லாத அத்தகைய பணியாளரால் எவ்வித தொழிற்சாலைகளையும் சீராக இயக்க முடியாது! அணு உலை யியக்க நெறி முறிவுகள், கவனமற்ற முறையில் செய்த அணு உலைக் கட்டுப்பாடு போன்ற தவறுகள் எதனை நிலைநாட்டுகின்றன? பணியாளருக்குக் கிடைத்த அரைகுறைப் பயிற்சிகள், ஆழமற்ற அணு உலைச் சாதன அறிவுகள் ஆகிய குறைபாடுகளைக் காட்டுகின்றன!

வெடிப்பு நேர்வதற்கு 25 நிமிடங்களுக்கு முன்பாகச் சோதனையில் நிகழ்ந்த தீவிர நெறி முறிவுகள், மாபெரும் மனிதத் தவறுகள் பின்வருமாறு:

1. அணு உலை தணிந்த ஆற்றலில் இயங்கிய போது ஐயோடின்-135 பெருகி ஸீனான்-135 நியூட்ரான் நஞ்சு விளையா வண்ணமிருக்க, இயக்கச் செறிவு [Operational Reactivity] அனுமதி அளவுக்கும் கீழ் சிறிதாக்கப் பட்டு, அபாயக் குறைப்பு பாதுகாப்பு ஏற்பாட்டை முடமாக்கியது!

2. உள்ளகச் சுயக் கட்டுப்பாடு [Local Automatic Regulation (LAR)] கருவி ஏற்பாடு தவறுதலாக நிறுத்தப் பட்டு, உற்பத்தி ஆற்றலை அனுமதி அளவுக்கு மிகவும் குன்றச் செய்து, அணு உலைக் கட்டுப்பாட்டைச் சிரம மாக்கியது!

3. அணு உலை வெப்பத்தைக் கடத்தும் எட்டுச் சுற்றுவழிப் பம்ப்புகள் பிணைக்கப் பட்டிருந்தாலும், சிலவற்றின் வெளியேறும் நீரோட்டங்கள் அபாயம் நேரும் வகையில் மிகவும் கூட்டப் பட்டிருந்தன! அந்தத் தவறால், வெப்பக் கடத்தி நீர் “வரைநிலை விளிம்பு உஷ்ணத்தில்” [Saturation Temperature] தடுமாறி நீர்க் குழல்களில் கொதிநிலை [Boiling in Channel Flow Water] அபாயம் நேர்ந்தது! நீரோட்டத்தில் வெற்றிடங்கள் [Flow Water Voids] நியூட்ரான் பெருக்கத்துக்கு உதவி, வெப்பசக்தி 100 மடங்கு மிகையானது! அதன் பின் தொடர்ந்தது முதல் வெடிப்பு! வெப்பசக்தி வெடிப்பு!

4. செர்நோபில் அணுமின் நிலையம் 500 MWe ஆற்றல் பெற்ற இரட்டை டர்பைன் ஜெனனிகளை [Twin Turbo Generators] உடையது. மின்சார உற்பத்தியின்றி டர்பைன்-ஜெனனி மட்டும் ஓடிக்கொண்டிருக்க மீண்டும் சோதனையை புரிந்திட, மறுபடியும் ஒரு மனிதத் தவறு அனுமதியின்றி செய்யப் பட்டது! இம்முறை டர்பைன் நின்றால், அணு உலை நிறுத்தம் அடையும் பாதுகாப்பு சமிக்கை துண்டிக்கப் பட்டது! அதனால் உலையில் உற்பத்தியாகும் நீராவி விரைவில் அழுத்தம் குன்றி, எரிக்கோல் குழல்களின் நீரில் வெற்றிடங்கள் உண்டாக ஆரம்பித்தன! வெப்பநீர்க் குழல்களில் வெற்றிடம் நியூட்ரான்களைப் பெருக்கி [Positive Void Coefficient] வெப்பசக்தி 100 மடங்கு விரைவில் ஏற உதவியது!

5. அணு உலைக் கொதிகலத்தில் நீர் மட்டமோ அல்லது நீர் அழுத்தமோ குன்றும் போது, பாதுகாப்பாய் உலை நிறுத்தம் செய்யும் கருவிச் சுற்று ஏற்பாடு அனுமதியின்றித் துண்டிக்கப் பட்டது! மேலும் கொதிகலத்தில் நீராவியின் அழுத்தம் மிகவும் கூடி அல்லது மிகவும் குறைந்தால், உலை நிறுத்தம் செய்யும் பாதுகாப்புச் சுற்றும் அனுமதியின்றித் துண்டிக்கப் பட்டது! அதனால் 100 மடங்கு வெப்பசக்தி மீறி ஏறுவதற்கு முன்பே அணு உலைச் சுயமாக நிறுத்தம் அடைய வில்லை!

6. கொதிக்கலத்தில் நீரோட்டம் குன்றும் போது, நிரப்பும் அபாயத் தணிப்புநீர் ஏற்பாடும் [Emergency Core Cooling Water System (ECCS)] அனுமதியின்றித் துண்டிக்கப் பட்டது! ஆகவே எரிக்கோல்களில் வெப்பம் தொடர்ந்து உற்பத்தியாகும் போது தணிப்பு நீரில்லாததால், யுரேனிய உலோகம் சூடேறி உருக ஆரம்பித்தது!

7. செர்நோபில் நிலையத்தில் மின்சார உற்பத்தி யில்லாத சமயங்களில் மின் விளக்குகள், தணிப்பு நீர்ப் பம்ப்புகள், பாதுகாப்புக் கருவிகள் ஆகியவற்றுக்கு மின்சாரம் பரிமாறும் அபாய கால ஜெனனிகள் இரண்டும் ஓடாமல் அனுமதியின்றி தடுப்பப் பட்டிருந்தன! ஆகவே வெடிப்புகள் நேர்ந்த பின் நிலையம் இருட்டடிப்பாகி அனைத்து மீட்சிப் பணிகளும் விளக்குகளின்றி மிகச் சிரமமான நிலையில் நடந்தன!

செர்நோபில் அணு உலையில் ஏறக்குறைய அனைத்து முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனைக்காக பணியாளரால் நிறுத்தம் செய்யப் பட்டதால், அணு உலை வெடித்துப் பிரளயம் உண்டான போது மேலதிகாரிகள் எவரும் முன்பாகக் குறுக்கிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை!

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy
[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

25. Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Accident Sequence, The RBMK Reactor, Events Leading to the Accident, The Graphite Fire [2002 Update]

26 RBMK Reactors – Nuclear Issues Briefing Paper # 64A [Feb 2002]

******************

jayabarat@tnt21.com [June 22, 2006]

Series Navigation