சுவைகள் பதினாறு
Published August 15, 2003 • By
புகாரி
புகாரி, கனடா

காதல்விழி ஓரச்சுவை
கையணைவில் சேரச்சுவை
கவிதைகளில் ஊறச்சுவை
கனிந்தசொல் வாரச்சுவை
கனவுகளில் ஏறச்சுவை
நினைவுகளைக் கீறச்சுவை
நெஞ்சுக்குள் பாரச்சுவை
நிம்மதிக்குள் மாறச்சுவை
வஞ்சகத்தைச் சீறச்சுவை
வெறுப்புமனம் தீரச்சுவை
உறவுகளில் தூரச்சுவை
உடைந்தமனம் தேறச்சுவை
மதவட்டம் மீறச்சுவை
மனிதநேயம் வீரச்சுவை
இனியசொல் கூறச்சுவை
இதயந்தான் ஈரச்சுவை !
*
புகாரி, கனடா
buhari@rogers.com