This entry is in the series 20021207_Issue

பிரியா ஆர்.சி.


இமைகூட சுமைதான்
விழிக்கும் நோக்கம் இல்லாவிட்டால்
சேமிப்பு சுமைதான்
அளிக்கும் இதயம் இல்லாவிட்டால்
அறிவு சுமைதான்
ஆக்கத்திற்கு பயன்படாவிட்டால்
அழகும் சுமைதான்
அன்பும் பண்பும் உடனிராவிடால்

சுமைகளும் சுகங்கள் ஆகும்
உழைக்கும் எண்ணமும்
உதவும் நோக்கமும்
உயரும் ஆசையும்
உண்மை ஆர்வமும்
உள்ளத்தில் உதயமாகிவிட்டால்!

rcpriya@yahoo.com

Series Navigation