சுநாமி ஊழியம்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

மண்ணாந்தை


என் சகோதரனே

என் சகோதரியே

இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறிவார்கள்

இவர்கள் அளிக்கும் அரிசிக்கு

நம் ஆத்மாவை அறுவடையாகக் கேட்பார்கள்

நம் முன்னோர்களை சபிக்கச் சொல்வார்கள்

நித்திய நரகத்தின் நெருப்பினைக் காட்டி

நம்மை நம் மேல் வெறுப்பு

கொள்ள செய்வார்கள்

இரத்தத்தின் ஜெயத்தின்

அன்பினைப் பகிர்கிறார்களாம்

நம்பிக்கையின் இருளதிகாரத்தால்

உலகப்பேரரசு கேட்கும் வானகத்தந்தையின் முன்

நாம் ஏற்றும் நாலணா சூடத்தையும்

நம் உள்ளன்பையும் தவிர

வேறேதும் கேட்காத

நம் கல் தெய்வங்கள்

வலிமையற்றவை என எக்காளம் கொட்டுவார்கள்

இது நாம் நோகும் தினம்

அவர்களின் அறுவடை நேரம்

நாம் இழந்த நம் குடும்பத்தினரின்

உடல்களை தேடி அழுகிறோம்

அவர்கள்

அறுவடை செய்யக் கிடைக்கும் ஆத்மாக்களின்

கணக்கால் தமக்கு கிடைக்கப்போகும்

எத்தனையோ கோடி முப்பது வெள்ளிகாசுகளில்

மனப் பேருவகை கொள்கிறார்கள்

என் சகோதரியே

என் சகோதரனே

அவர்கள் கூறுவதும் உண்மைதானே

அவர்கள் வானகத்தந்தை வலு உடையவர்தான்

அவர் நிலநடுக்கங்களின் கடவுள்

தலைப்பிள்ளைகளை கொன்று தம் வலிமையை காட்டும் கடவுள்

அவர் தண்டனைகளின் கடவுள்

பழிக்குப்பழி அவருடையதே (Revenge is mine)

ரத்தத்தால் உன் பாவம் போக்குவார்

அந்த ஒப்பந்தத்தை நீ ஏற்காவிட்டால்

நித்திய நரகத்தில் தள்ளுவார்

எத்தனை அன்பு அதுவே அவர்

நீ என்ன பாவம் செய்தாலும் செய்வதானாலும் அவரை ஏற்றால் போதும்

அவரை ஏற்றால்

அவரது பெயரால்

நாடு நாடாக நீ கொள்ளை அடிக்கலாம்

கண்டம் கண்டமாக நீ வேற்றின மக்களை கருவறுக்கலாம்

அடிமைகளாக சிறை பிடிக்கலாம்

வீடு வீடாக ஏறி குடும்பங்களைப் பிளக்கலாம்

பொய் இன வேறுபாடுகளால்

சமுதாயங்களைச் சிதைக்கலாம்.

சேனைகளின் கர்த்தரின்

சேனைகள் நடக்கும் பாதையெங்கும்

அகதிகள் முகாம்களை உருவாக்கலாம்

அழிவில் அழுவோரின் ஆத்மாக்களை அறுத்தெடுத்து

உன் பெயரில்

மறுமை சுவர்க்கத்தில்

இப்போதே அதி உல்லாச அறையை

முன்பதிவு செய்யலாம்.

நீ என்ன பாவம் செய்தாலும் செய்வதானாலும் அவரை ஏற்றால் போதும்

இதெல்லாம் அதோ அங்கே நிற்கும்

அந்த கல்லாலான

பெண் பிம்பத்திற்கு முடியாது

‘தாழக்கிடப்போரை தரிப்பதே தர்மமென ‘க்

கொண்ட தாய் அவளுக்கு

பூசாரியேயானாலும் தர்மம் பிறழ்ந்தால்

தண்டிக்கும் தாய் அவள்

தர்மத்தை தாண்டும் வலிமை அவளுக்கும் இல்லை.

செந்தமிழால் வைதாலும் வாழ வைப்பாள்

நல்லவரை.

நம்பிக்கை பார்க்க முடியாது அவளால்

நல்ல உள்ளத்தையே பார்க்க முடியும்

‘வெறும் தாய் தெய்வம் ‘

இவ்விதத்தில் வானகத் தந்தைக்கும்

ஏக இறைவனுக்குமான ஆற்றல்

அவளுக்கு இல்லைதான்.

ஆனால்

உன் அழுகைக்கு இரங்கி

இக்கல்லில் அவள் இறங்கி வருவாள்

ஏன் பிடித்து வைத்த மாட்டுச்சாணியில் கூட

பிரபஞ்சப் பரம்பொருள்

இந்த மண்ணில்

இறங்கி வர முடியும்

ஆனால் அது மட்டும் முடியாது

அப்படி ஓர் அருள் ஊனம்

வானக தந்தைக்கு.

எனவே

அவர்

நிலநடுக்கத்தையும் பேரலை அழிவுகளையும்

அனுப்பி

பின்னர்

கிடைக்கும் ஆத்மாக்களை பணத்தால் அறுவடை செய்ய

‘ஊழி ‘யர்களையும் அனுப்புவார்

அவர்களையும் அவர்கள்

வானகத்தந்தையையும்

மன்னித்துவிடு

என் சகோதரி

மன்னித்துவிடு

என் சகோதரா.

இந்த மண் மிதித்த புண்ணியம்

மறு பிறவியிலாவது அவர்கள்

மாரியம்மன் கோவிலில்

கூழ் ஊத்தும்

பாக்கியம் அடையட்டுமென

வேண்டுவோம் நம் கடல் அம்மனிடம்.

**
மண்ணாந்தை

Series Navigation