சுதந்திரமான தேர்வு என்பது…

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

சுரேஷ் குமரன்அண்டை வீட்டாரிடம் பேசாமலிருப்பது
அதை எண்ணி வருத்தம் கொள்வது அல்லது
வருத்தப்படாமலிருப்பது…
மனைவி,பிள்ளையுடன் பாசமற்று இருப்பது..
பாசத்திற்காக ஏங்குவது அல்லது
ஏக்கமற்று இருப்பது..
அறிந்தவர்கள் கடந்து செல்லும் போது
கவனிக்காமல் செல்வது பின்பு
அதை எண்ணி வருத்தப்படுவது அல்லது
மறந்து விடுவது…
மனதிற்கு விளக்கமளிக்கும்
காரணம் ஏதுமின்றி
தற்கொலை செய்து கொள்வதும் கூட…
விளங்காதவர்களுக்கிடையில்

Series Navigation

சுரேஷ் குமரன்

சுரேஷ் குமரன்