சினிமா – BABEL

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

டி.ஜி.கே


திறந்த பொருளாதார முறை, பொருளாதாரம் தாண்டி கலை கலாச்சாரத்திலும் மிகப் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கலாச்சாரப் பற்று என்ற பெயரில் போதை மருந்தடிகைகள் போலிருக்கும் பெருவாரியான நமக்கு, சினிமா ஊடகத்தின் வியத்தகு பரிமாண சில பிற மொழி படங்கள் மூலம் தெரிகிறது.

குளோஷப் காட்சிகளில், பக்கம் பக்கமாக போதனைகளையும், தத்துவ முத்துக்களையும் உதிர்க்கும் கதாபாத்திரங்களிடையே, இம்மாதிரி படங்கள் நமது ரசனை மற்றும் படைப்புத் தெளிவுகள் பற்றிய நிதர்சனம் புரிகிறது.

நான் பார்க்கும் சில படங்கள் பற்றி பகிர ஆசை.
இதில் என்னை நல்விதமாக பாதித்த படங்கள் பற்றி மற்றுமே இடம் பெறும்.
இவை விமர்சன கோணமன்றி, நான் நினைத்து நினைத்து நெஞ்சம் விம்மிய எண்ணப்பகிர்தல் கோணத்தில் மட்டுமே இருக்கும்.
பார்த்து அனுபவிக்க வேண்டியது சினிமா என்பதால், கதையின் நீண்ட நெடிய விவரங்களும், என் நினைப்புகளும் இன்றி சுருக்கமாக இருக்கும்.

——————————————-
1. BABEL
– வட ஆப்பிரிக்க மொராக்காவின் வறண்ட சூழலும் அதில் ஆடு மேய்ப்பு பொழைப்பு….. ஓநாய் விரட்ட ஒரு துப்பாக்கி வாங்குகிறார். பண்டமாற்றமாக உயிருள்ள ஆடு தந்த உயிரெடுக்கும் துப்பாக்கி வருகிறது.
தந்தைக்கு இரு மகன்கள் – சிறுவர்கள்… 10, 12 வயது அண்ணன் தம்பி….
துப்பாக்கி விற்றவன் மூன்று கி.மீ. சுடும் என்கின்றான்.
மலையின் உயரத்தில் இருந்து சுட்டுப்பார்க்க… சூட்டிகையான சிறியவன்…. கீழே தூரத்தில் வளைந்து நெளிந்து வரும் பஸ் நோக்கி சுடுகிறான்…
பஸ் ஒன்றும் ஆகாமல் செல்வது பார்த்து துப்பாக்கி சொன்ன தூரம் பதம் பார்க்கவில்லை எனத் திரும்புகிறார்கள் சிறார்கள்.
தந்தையோ சந்தைக்கு போயிருக்கிறார்…
– மொராக்கோ -இஸ்லாமிய – நாட்டில் சுற்றுலாவிற்காக பேருந்தில் இருக்கும் பல அமெரிக்கர்களிடையே ஒரு கிறிஸ்துவ அமெரிக்கத்தம்பதி. ஜன்னல் ஓரம் வேடிக்கைப் பார்த்து வந்த மனைவியின் தோள்பட்டையை எங்கிருந்தோ மலைப் பகுதியில் இருந்து வந்த குண்டு துளைக்கிறது….

அடாடா அதற்கு பின் வரும் காட்சிகள்……

> அதே சமயம்.. அமெரிக்க தம்பதிகளின் இரு குழந்தைகள் , மெக்ஸிகோ நானியின் சொந்தக்காரனால், சான்டியாகோ தாண்டி சென்று திரும்பி சிக்கலாகும் தருணங்கள்….

> அதே சமயம் துப்பாக்கி மூலகர்த்தாவான ஒரு ஜப்பானிய டூரிஸ்ட் அவனது ஊரில் அவனது பேசமுடியா பெண் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்…….

இந்த மூன்று கதை செல்லும் இணைப்பாதைகள், முடிவில் உறவுகள் மீதான நம் பார்வையை மாற்றுகிறது….
மதம் அரசியல் தாண்டி , சாமான்ய மனிதர்களின் வாழ்வின் நிதர்சனைத்தையும்….
“மனிதம்” வாழ்கிறது என்பதையும் , நாம் வாழ வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்துகிறது……


Series Navigation