சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

திலகபாமா


(சி.கனகசபாபதியின் மூன்றாவது கட்டுரை தொகுப்பான ‘ புனைகதைகள் ‘ கட்டுரை தொகுப்பில் எழுத்தப் பட்டிருக்கும் முன்னுரை .)

உங்களோடு ? ?

இது. சி. கனகசபாபதியின் கட்டுரைகளின் மூன்றாவது தொகுப்பு. இக்கட்டுரைகளை வாசிக்கையில் ஒரு மிகப் பெரிய நிறைவும் , தொடர் ஏக்கமும் இருக்கவே செய்கின்றது. இலக்கியம் மட்டுமல்ல நான்கு பேர் உரத்து ஒரு விசயத்தை முன் வைத்தால் அது உண்மையென்று நம்பி பின்னால் செல்லும் கூட்டம் உண்மைகளை மறைத்து போலிகளை தூக்கிப் பிடிக்கின்றது. எப்பவும் பேசப் பட வேண்டும் என்பதற்காக வெளியிலிருந்து இறக்குமதி செய்த விடயங்களை இம்மண்ணுக்கு சொந்த மில்லாத , தேவையுமில்லாத ஒன்றை தொடர்ந்து நிறுவ முயலுபவர்கள் எதற்கும் எப்பவும், எதையும் இழந்தும் அதைச் செய்யத் தயாராக இருப்பதால், நல்ல இலக்கியங்களை எழுதுபவர்களும் , கோட்பாடுகளை வலியுறுத்துபவர்களும் அவர்களோடு போட்டி போட முடியா நிலையும் , போட்டி போடத் தயாராயில்லாத அவர்களது மனமும் இருக்கின்ற சூழலில் விமரிசனங்கள் எப்படியானதாய் இருக்கின்றன ? எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை சி. க 70 களிலேயே எழுதியது இன்றைக்கும் மீள வாசிக்கையில், இன்றைய படைப்புகளுக்கும் இப்படியானதான விமரிசனங்கள் இருந்திருந்தால், நச்சு இலக்கியங்கள் கோலோச்சுகின்ற பாவனை அடையாளம் காணப் பட்டு அழிக்கப் பட்டிருக்குமே எனும் ஏக்கம் தொடர்கின்றது. மனிதம் பற்றி பேச வேண்டிய படைப்பாளிகள் தனி மனிதத்துவம் சார்ந்த பாராது கலைஞனின் கருத்து சுதந்திரம் என்ற பேரில் யார் யாருக்கோ ஆதரவு தெரிவிப்பதாய் சொல்லி ‘பக்கத்து இலைக்கு பாயாசம் ‘ கேட்டு தங்கள் தவறுகளை இலக்கிய தடுமாற்றங்களை நிறுவப் பார்க்கின்ற இவ்வேலையில், சி, க போல் முகம் படைப்பின் தரம் பிரித்து கட்டுடைத்து விமரிசனம் செய்யும் விமரிசகர்கள் இல்லையே எனும் ஏக்கம் தொடரவே செய்கின்றது. சி. க வின் கட்டுரைகள், நான் வாசிக்கின்ற எழுத்துக்கள் தருகின்ற உணர்வுகளுக்கு சரியான வார்த்தையை தந்து போயிருக்கின்றது. இந்த கட்டுரைகளை நாம் வாசிப்பது ஒவ்வொருவரும் விமரிசனம் எப்படி இருத்தல் வேண்டும் எனும் புரிதலுக்கும், அதை தொடர்ந்து நல்ல இலக்கியங்கள் எவை என்று அடையாளமிட்டு தூக்கி நிறுத்தலுக்கும் உதவும்.

அவ்வகையில், ஏறக்குறைய கையெழுத்து பிரதிகளாக இருந்த எல்லாவற்றையும் , என் கவனத்திற்கு வந்த எல்லாவற்றையும் தந்திருக்கின்றோம்.ஆம் புதுக் கோட்டை கிருஷ்ணமூர்த்தி, ஒரு நாளெல்லாம் எனக்காக வெரு கட்டுரைகள் இருக்கின்றதI 6; என்று அவரது நூலகத்தில் தேடி இரு கட்டுரைகளை எடுத்து தந்தார். வாசிக்க முடியா உடையும் தாள்கலில் இருந்த உடையவரும் இருந்து அடையாளம் சொல்ல முடியாமல் போன இடத்திலும் மிகுந்த சிரமத்துக் கிடையில் காவ்யா எழுத்துப் பிழைகள் என்Ru எத்தனை குறை சொன்ன போதும் , அதை தவிர்த்து வெளியிட தொடர்ந்து முயன்றபடி இருந்தார். குறை சொன்ன யாரும், சி, க வின் மாணவர்களாய் சொல்லிக் கொண்டவர்களும் கூட , புத்தக வடிவாக்க னேரத்தில் ப்ரூப் பார்க்கவோ, சரி செய்வதற்கு துணை நிற்கவோ முன் வரவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த நேரத்தில் உடல் நலம் குன்றி இருக்கும் லஷ்மி அம்மாளுக்கு இந்த கட்டுரைகளை பத்திரப் படுத்தி காலத்தின் கையில் கொடுத்ததிற்கும் காவ்யாவிற்கும், பின்னிருந்து பல்வேறு இடமிருந்தும் இந்த புத்தக வடிவாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எனது எங்களது நன்றிகள்

திலகபாமா

mathibama@yahoo.com

Series Navigation