சாத்தானுடன் போகும் இரவு
Published January 20, 2006 • By
த.அகிலன்
த.அகிலன்

சாத்தான்கள்
ஊருக்குள்திரும்பின
சாத்தான்கள்
புன்னகைகளை
வெறுப்பவைஸ..
பகலின் நிறம் மரணம்
இரவின் நிறம் பயம்
என்றாகியது,
ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்;த சாவிற்கு
காத்திருக்கலாயிற்று
பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்
இரவுக்குக் கைகள்
முளைத்தது..,
கேள்விகளற்ற
வெறுங்கணத்தில்
இரவின் கரங்களில்
கோடாிகள் முளைத்தன..,
மனிதா;களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு
விடியலில்
உருவங்களின் கரங்களில்
இருந்தது
இரவின் கோடாி
சூாியனைப்போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்
—-
agiilan@yahoo.co.uk