சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

எஸ்ஸார்சிஆழ்வார்கள் அமுத நிலையம் சோமேசுரன் பேட்டை சென்னை-2, விலை ரூ. 21 முதற்பதிப்பு ஜூலை 1984 பக்கம் 207


இன்று உலகெங்குமுள்ள பல்வேறு சமயங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிஞர் பெருமக்களாலும் தீர்க்க தரிசிகளாலும் தோற்றுவிக்கப்பட்டன. ஆயினும் ச் ரீவைஷ்ணவம் அவ்வாறின்றி அகடி தகட நா சாமார்த்தியங்கொண்ட ச் ரீமன் நாராயணன் பேரருளால் பல யுகங்களுக்கு முன், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து நிலவும் தெய்வீக சமயமாகும்
பதிப்புரையில்


இறைவனது படைப்பான இவ்வுலகில் காணப்படும் பல்வகை பிறவிகளுள் மானிடப்பிறவி மிகச்சிறந்ததும் கிடைத்தற்கரியதுமாகும். மனிதப்பிறவி கிடைத்தாலும் பாரதபூமியில் பிறப்பது மிக அரிது. பாரத பூமியில் பிறக்கப்பெற்றாலும் வைஷ்ணவ ஜன்மம் கிடைப்பது
அரிதினும் அரிது.
முன்னுரையில்


பாஷாந்தர வித்யையை யதிகரித்தால்தான் உதர நிமித்தமாக உத்தியோகம் வகித்து சம்சார பரிபாலனம் செய்யமுடியுமென்ற கட்டாயம் ஏற்பட்ட நாளிலிருந்து ச் ரீ வைஷ்னவ ருசியை விட்டு ஆன்மீக பலத்தைப்புறக்கணித்துப்பலர் ச்ரீவைஷ்ணவர்களாயிருந்தும் அற்பப்பலன் கோரி தேவதாந்தரங்கள் பால் ஈடுபட்டு வருவது அத்யந்த சோசநீயமானதாகும்.
-வரத யதிராஜ ஜீயர்


வைஷ்ணவன் என்றால் பிறர் துன்பங்கண்டால் பொறுக்கமாட்டத இரக்ககுணமுடைவன் என்று பொருள் கூறப்படுகிறது. பக்-27
பொறாமை ஏற்பட்டால் வைஷ்னத்துவம் இல்லை என்று அறியலாம். பக்-28


சரித்திர ஆசிரியர்கள் கூறும் மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய சித்தார்த்த புத்தரல்ல இந்த புத்தர். இவர் பகவத் அவதாரமாய் தோன்றிய ஆதி புத்தர். இவர் அசுர மோஹனார்த்தமாகப் பரப்பிய கொள்கைகளைத்தான் சித்தார்த்த புத்தர் திருடித் தான் கண்டதாக வெளியிட்டார். –பக்கம்37


சரணாகதியும் உபாயமன்று. அவன் இரக்கமே உபாயம். அவன் இரக்கத்தை யார் வருவிக்க முடியும்? பரதன் பூரண சரணாகதி
பண்ணியும் விரும்பிய பலன் கிடைக்கவில்லை. பக்கம்-70


நாராயணப் பதம்- நார+ அயந எனப்பிரிக்கப்படும்.
ர- அழியும் பொருள்
நர- அதன்அழிவின்மை
நரா- அந்த அழிவில் பொருளின் பன்மை
நாரா- அவற்றின் திரள்
அயந- அதனின் ஆதாரம். பக்கம்-84


ம- தனக்கின்பமெனச்செய்கை
ந- அதனை மறுப்பது.
அதாவது நான் செய்யும் கைங்கர்யத்தின் பிரயோஜனம் எனக்கன்றி உனக்கே. பக்கம்-92


மடியாக இருக்கும் போது துருஷ்கர், கிறித்துவர்,முதலிய புறச்சமயிகள் பிரப்பு இறப்பு த்தீட்டு உடையோர், சண்டாளர்,நாசுதிகர், அகங்கார மமகாரமுடைய சம்சாரிகள், முதலியவர்கள் தீண்டினாலும் நாய், பூனை கழுதை பன்றி காக்கை, கோழி முதலிய பிராணிகள் மேற்பட்டாலும் எச்சில் எலும்பு முதலியவற்றை மிதித்தாலும் புகை வண்டி பச் பிரயாணம் செய்த காலத்தும் மறுபடியும் ச்னானம் பன்ண வேண்டும்.
திருஆராதனத்திற்கு முன் வீட்டில் நீராடதவர்களைத்தொட நேர்ந்தாலும் படுக்கை பழந்துணி முதலியவற்றைத்தொட நேர்ந்தாலும் மீண்டும் நீராட வேண்டும். பக்கம்-110


உடற்கற்பைப் பேணுவது போல் உயிர்கற்பையும் பேணிக்காக்க வேண்டும். அதாவது பிற தெய்வங்கட்கு ஆட்படலாகாது.
மறந்தும் புறந்தொழல் ஆகாது. பக்கம்-144


சிரார்த்த தர்ப்பணங்களை வைஷ்ணவரல்லாதாரைக்கொண்டு செய்விக்கலாகாது. வைஷ்ணவ பிராம்ணர்களை க்கொண்டே செய்ய வேண்டும். அ-வைஷ்ணவர்களை க்கொண்டு செய்பவன் பிதுரர்கட்கு மல மூத்திரங்களைக்கொடுத்தவனாவான்.
பக்கம்-150


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி