சமூக சேவையும் அரசியல் அதிகாரமும்:(அ) வை.கோ தமிழக முதல்வராகும் கட்டாயம்.

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

கோவிந்தராஜன். கே


அரசியல் என்பது என்ன… ?

ஆள்வதற்கான உரிமையைப் பெறுவதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு.

சரி, ஆளும் உரிமை எதற்காக.. ?

மக்களுக்கு நல்ல திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்த.

சரி சமூக சேவை அமைப்புகள் என்ன… ?

மக்களுக்கு நல்ல திட்டங்கள் செயல்படுத்த, தனவந்தர்கள் ஈடுபாட்டுடன்.

அப்படியானால், எல்லா அரசியல் அமைப்புகளும் சமூக சேவை அமைப்புகளே என்று நாம் நினைத்தால் பதில் ஏமாற்றமாக இருக்கிறது.

தினமும் காலை முதல் இரவு வரை, அரசியல் அதிகாரம் உள்ளவர்கள், மக்களுக்கான சேவைப் பணிகளில் ஈடுபடுகிறார்களா… ?

இல்லை…

பின்,

தாங்கள் சார்ந்த தொழில் அபிவிருத்தி பண்ணுவதற்கான விஷயங்களுக்காக மட்டுமே செலவிடுகிறார்கள்.

முன்பெல்லாம், தொழில்புரிபவர்கள் மந்திரிகளுக்கு தங்குமிடம் கார் அனுப்புதல் என்ற காரியங்கள் செய்து அதன் மூலம் தங்கள் தொழில் சம்பந்தமான விஷயங்களுக்கான அனுகூலங்களைப் பெறுவார்கள்.

இப்படி இவர்கள் இருவரின் தொடர்பால், அரசியல்வாதி அதிகாரம் தொழில்புரிபவர்களுக்கும், தொழில்புரிபவர்கள் வளமை அரசியல்வாதிகளுக்கும் புரிய, இவர்கள் அவர்களாகவும் , அவர்கள் இவர்களாகவும் இரண்டற கலந்தார்கள்.

அதன் விடை, இன்று அநேக அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் ஆகிப்போனார்கள்.

தொழில் அதிபர்களும் அரசியல்வாதிகள் ஆகிப் போனர்கள்.

இவர்கள் இருவரையும் வந்து பார்த்துப் போன சமூக சேவகர்கள் லூசுகள் போல் தோன்றியதால் எந்த அரசியல்வாதிகளும் சமூக சேவகர்கள் ஆகத் துடிக்கவில்லை.

மேலும், சமூக சேவகர்களும் மக்களும் பொறுப்பற்றத்தனத்தின் உச்சத்தில் உள்ளார்கள்.

தமது பகுதிகளில், பிரச்சனைகளை பார்க்கும் போது, அரசியல்வாதிகளின் கதவைத் தட்டி தட்டி அலுத்துப் போன் மக்கள் சமூக சேவகர்கள் மூலமாக , நல்ல மனம் படைத்தவரின் வியர்வை சிந்தி உழைத்த காசுகளை திரட்டி, அந்த திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.

ஆனால், சமூக சேவகர்கள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற உறுதி மக்களிடமும், மக்களுக்கு நல்லது பண்ண அதிகாரம் தங்களிடம் இருக்க வேண்டும் என்ற ஆசை சமூக சேவகர்களிடமும் இருந்தால் தான் மாற்றம் வரும்.

சரி எடுத்தவுடன், அனாதை பள்ளி , குருடர் பள்ளி, திக்கற்றோர் நல்வாழ்வு மையம் நடத்துபவர் etc etc MLA, MP ஆகி விட முடியாது.

அதற்கும் மேலாக, வரும் தேர்தலில், முதல் மந்திரி ஆகி விட முடியாது.

ஆனால், தலைமைப் பகுதிக்கு வர விரும்பும் அரசியல்வாதிகள் சிலரில் ஒருவருக்காவது இந்த தகுதி இருக்கிறதா என்று பார்க்கலாம்.

ஜெயலலிதா: இவரைப் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே… இருந்தும் இவரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் கருணாநிதி எந்த அளவுக்கு மக்களைப் பயுமுறுத்தியிருக்க வேண்டும்.

இவர்கள் இருவருமே, தாங்களின் அரசியல் அதிகாரத்தை சுயநலத்திற்கு, குடும்பம் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது நாம் அறிந்ததே.

இவர்கள் இருவர் தாண்டி, சேவை மனமும், மன உறுதியும், தமிழ் மொழி பற்று & தமிழர் நலம் உள்ள வை.கோ ஒரு சரியான இடைக்கால தீர்வு – நாளை 100% சேவை மனம் கொண்டவர் முதல்வராய் வரும் வரை.

சரி, வை.கோ முதல்வராக வர முடியுமா.. ?

முடியும்.

எப்படி.. ?

ஒரு முறையல்ல , பல முறை மூப்பனார், அதிமுக – திமுக தனியாக போட்டியிட்டு ஆட்சி அதிகாரம் காண முடியாது என.

அந்த விஞ்ஞான கணித உண்மையைப் புரிந்து கொண்டு, காங்கிரஸ் – மதிமுக – பா.ம.க – தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரு அரசியல் அமைப்புகள் – ரஜினி – இணைந்தால் வை.கோ முதல்வராகலாம்.

அந்த ஐந்து வருடம் ஒரு அற்புத ஆட்சி கிடைக்கும் தமிழகத்திற்கு.

அது தான் சமுக சேவை மனம் கொண்டவர்கள் ஆட்சிக்கு வர வழி.

இல்லாவிட்டால், எந்த ஆண்டவன் வந்தாலும் , ஆளப் போபவன் வந்தாலும் தமிழக மக்களைக் காப்பாற்ற முடியாது.

kgovindarajan@gmail.com

Series Navigation

கோவிந்த ராஜன். கே

கோவிந்த ராஜன். கே