சனநாயக நாடென்னும் போதினிலே….

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

வானரன்


கண்டக்டர் சார்…பத்து ரூபா கொடுத்தேன்…இன்னும் சில்லரை தரல நீங்க…நான் எறங்குற ஸ்டாப்பிங் வந்திடுச்சி…

நீ கீய எறங்கி மின்னாடி போ சார்…தரச்சொல்றேன்….

சரி…

யோவ் மாணிக்கம்…

ஓவ்…

அந்தாளுக்கு சில்லறைய குடுத்துடு….

ஆங்…

ஹலோ…யாருங்க மாணிக்கம் இங்க…கண்டக்டர் சில்லரை வாங்….

விய்ங்க்..விய்ங்க்…

அடப்பாவி…விசில ஊதிட்டானே…ஸ்டாப்…ஹோல்டான்…அடச்சே…செருப்பு வேற அறுந்து போச்சே இந்த நேரத்துல…

ஹா..ஹா..ஹா…இன்னா சார்…மிச்ச காசு குடுக்காம பூட்டானா ?…இப்பல்லாம் அப்டித்தான் பண்றானுங்கோ…பேமானிங்கோ…நீ செரூப்ப குடு

சார்…தெச்சி தர்றேன்…

அநியாயமா இருக்கே…

ஆமா சார்…மின்னாடி இருந்தவனும் கண்ரக்ரோட கூட்டாளியாத்தான் இருப்பான்…கூட்டு களவானிப்பசங்கோ…அதான் எங்கம்மா பஸ்செல்லாத்தியும்

தனியாருகிட்ட வுடப்போறாங்கோ…அப்புறம் பாரு…

யோவ் வாய முடிகிட்டு வேலய பாருய்யா…நானெ மாச கடசியில இருந்த பத்து ரூபாவயும் வுட்டுட்டு எப்படி பட்டினப்பாக்கம் வரை போறதுன்னு

தவிச்சிக்கிட்டிருக்கேன்…நீ வேற அம்மா…ஆத்தான்னு வயத்தெரிச்சல கெளப்பிகிட்டிருக்கே…

நல்லது சொன்னா உனக்கி ஏன் சார் இம்மாங் கோவம் வருது…இந்தா உன் செருப்பு…மாச கடசின்ற…ரெண்ட் ரூபா குடு…போதும்…

எலக்ஷன் வந்தா வோட்டெல்லாம் போடுவியா ? எந்த கட்சிக்கி போடுவ ?

இன்னா சார் அப்டி கேட்டுட்ட…இருவத்தஞ்சு வர்சமா ரெட்ட எலலதான் போட்றேன்…ஒரே ஒரு தபா மட்டும் சூர்யன்ல போட்டேன்…எம்ஜாரு

செத்தப்பறம்…அப்பால எல்லாமே எலயிலதான்….

எத்தன வருசமா செருப்பு தக்கிற ?…

முப்பத்ரெண்டு வர்சமா இதே தொயுலுதான் சார்…அதுவும் இதே எடத்துல….இன்னாத்துக்கு கேக்குற….நீ இன்னா கவுர்மெண்டு ஆபிசரா ?…

ஒண்ணுமில்ல…சும்மாத்தான் கேட்டேன்…இந்தா ரெண்டு ரூபா…

******

யோவ் வானரம்…

சொல்லுங்க சார்…செப்பண்டி சார்…போலோ சாஹிப்….

இந்த கிண்டல் தான வேணாங்கிறது…நான் குடிச்சிருந்தாலும் ஸ்டெடியா இருப்பேன்…

பாத்து…விழுந்திடப் போறீங்க…என்ன விஷயம் ?

ஒண்ணுமில்ல…ஒரு சின்ன சந்தேகம்…

கேளுங்க…கேளுங்க…

எனக்கு தெரிஞ்சு ஆகஸ்டு புரட்சிக்கப்பறம் நாட்டுல புரட்சி எதுவும் நடக்கல…அப்புறம் எப்பிடி ஆளாளுக்கு புரட்சி தலைவர்…புரட்சி தலைவின்லாம்

பட்டம் வச்சிக்கிறாங்க ?…ஒண்ணுமே புரியலியேய்யா..

சிக்கலான கேள்வியால்ல இருக்கு…

சும்மா சொல்லுய்யா…பயப்படாத…

ஒரு வேள லஞ்சம் வாங்குறதுலியும், ஊர் சொத்த கொள்ள அடிக்கிறதிலியும், அநியாயம் அட்டூழியம்னு புரட்சி பண்றதுனால இருக்குமோ என்னவோ ?

நெத்தியடி அடிச்சிப்பிட்டியே…

ஹி…ஹி…ஹி…

எங்கிட்ட சொன்னா மாதிரி வெளியில எங்கியும் சொல்லிடாத….ஏற்கனவே வானரம்னு பேர் வச்சிருக்க…வால ஒட்ட நறுக்கிடப் போறானுங்கோ….

ஹி…ஹி…ஹி….

தெய்வீக இளிப்பையா உமது…சரி…நான் வர்றேன்…இன்னிக்காவது ஊட்ல சோறு கிடக்கிதான்னு பாக்கணும்….

‘மனம் ஒரு குரங்கு…

மனித மனம் ஒரு குரங்கு… ‘

********

வாய்யா வானரம்…என்னா திடார்னு இந்தப் பக்கம்….

சும்மாதான்…உன் கிட்ட ஒரு யோசன கேக்கலாமின்னு…

சொல்லு….என்னா விஷயம் ?

இல்ல…ஒரு கட்சி ஆரம்பிக்கலாமுன்னு இரூக்கேன்….

கட்சியா ? ஹா…ஹா…என்னமோ மிட்டாய் கடை தொறக்குறாப்ல சொல்ற….

இதுதான வேணாங்குறது…முடிஞ்சா யோசன சொல்லு….இல்லாட்டி விடு….

சரி..சரி…கோச்சுக்காத…கட்சிக்கு பேரெல்லாம் முடிவு பண்ணிட்டியா ?

அ.கொ.தீ.கழகம்…

அழிவு கொள்ளை தீமை கழகமா ?

சரியாப் போச்சு…இப்போ இருக்கிற கட்சியல்லாம் அதத்தான செய்யுது…என்னோடது அறிவு கொள்கை தீச்சுடர் கழகம்…

கேக்க நல்லாத்தான் இருக்கு….தலைவர் யாரு ?

நாந்தான்…என் கட்சிக்கு வேற யாரு தலைவராக முடியும் ?….

அதுவும் சரிதான்…ஆனா கட்சிக்கின்னு ஒரு ட்ரேட் மார்க் வேணுமே…இருக்கா உங்கிட்ட….

ட்ரேட் மார்க்கா ? அப்பிடின்னா ?…

இப்போ தமிழ் நாட்டிலிருக்குற ரெண்டு பெரிய கட்சிகளுக்கும் அண்ணாதான் ட்ரேட் மார்க்….ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ‘என்னோடதுதான்

அசல் அண்ணா மார்க் ‘ மத்தவனுது ‘டூப்ளிகேட் அண்ணா மார்க் ‘குனு சொல்லிக்கிறாங்களே….அது மாதிரி….

ஆனா கழகம்னு பேர் வக்கிறது பத்திதான் யோசனையா இருக்கு….

அதுக்கு என்னா இப்போ ?

இல்ல..திருவள்ளுவரே ‘கழகம் ‘னு சொன்னா ‘சூதாடும் இடம் ‘னு சொல்லியிருக்காரே…

‘பழகிய பணமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின் ‘

அப்டின்னு திருக்குறள் ஒன்னு இருக்கே….

அப்பிடி போடு கத்திய….இப்போதான் போக்குவரத்து கழகம்லாம் ஏன் நஷ்டத்துல ஓடுதுன்னு புரியுது…சூதாடுற எடத்துல எப்படி லாபம் கெடைக்கும்…

தி.மு.கழகம், அ.தி.மு.கழகம்லாம் நஷ்டத்துல ஓட்றாமாதிரி தெரியலியே…

அட மடையா…சூதாடுறவனுக்குதான் நஷ்டம்…சூதாட்ட கிளப் நடத்துறவனுக்கில்ல…புரியுதா ?

ம்ம்..ரொம்ப நல்ல பாயிண்ட்….

அது கெடக்கட்டும்…நீயே வேல வெட்டி இல்லாதவன்…கட்சி ஆரம்பிக்கப் போறன்னு ஏன் கப்ஸா விட்டுகிட்டு இருக்கெ….போயி நாலு எடத்துல

அப்ளிகேஷன போடு….வேலயாவது கெடக்கும்….எடத்த காலி பண்ணு மொதல்ல…

ஹி..ஹி..ஹி..

****

psnarendran@hotmail.com

Series Navigation

வானரன்

வானரன்