This entry is in the series 20090507_Issue

ஹெச்.ஜி.ரசூல்



ஒருவருஷமா மய்யித்துப் போல
பக்கவாதம் வந்து கிடக்கும்
சுல்தான்பிள்ளைக்கும் தெரிய வாய்ப்பில்லை.
சென்ற ரமலான் காலையில்
பெருநாள்தொழுகை முடிந்து வந்தபோதுதான்
திரும்பவும் அந்த சந்திப்பு
முகத்துக்கு முகம் திரைகளைக் கிழித்தவாறு.
பிறைபதிநான்கில் புத்தரிசிச் சோறாக்கி
தைக்காவுக்கு கொடுத்ததில் கிடைத்த பலனென்று
பீமா பெத்துமா பேசிக் கொண்டாள்
அப்படி ஒன்றும் எளிதல்ல
சவுதி பாக்கியம் கிடைப்ப தென்பது
இப்போதெல்லாம்
என்வீட்டு ஜன்னல் கதவுகள்
மூடியே கிடக்கின்றன.

Series Navigation