சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

பெ மணியரசன்


காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி கவர்ச்சிமிக்க யிந்துத்வா அரசியல்வாதியாக வலம் வந்துகொண்டுள்ளார்.ஜெயலலிதா கூடக் குழந்தைகளுக்கு ஜெயேந்திரன் என்று பெயர் சூட்டி சங்கரச்சாரியாருக்கு நாமசேவை செய்கிறார்,

சொந்தமாக ஒரு கோயில் கூட இல்லாத காஞ்சி சங்கரமட அதிபர் தமிழகக் கோயில்களுக்கெல்லாம் குடமுழுக்குச் செய்யும் ஆன்மீக சர்வாதிகாரி ஆகிவிட்டார்.(காமாட்சி அம்மன் கோயில் கதை பின்னால் வருகிறது) தர்மபுரம்,திருவாவடுதுறை போன்ற தமிழ்மடங்களுக்குச் சொந்தமாக ஏராளமான கோயில்கள் லிருந்தும் இப்பீடங்களின் தலைவர்களுக்குத் தமிழகக் கோயில்கள் மீது எவ்வித அதிகாரமும் இல்லை.தமிழகக் கோயில்களின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக ஜெயேந்திரசரசுவதியை ஜெயலலிதா நியமித்துள்ளார்.

ஆதிசங்கரரால் வடக்கே நிறுவப்பட்ட பத்ரிநாத்பீடத்திற்கோ, கிழக்கே நிறுவப்பட்ட பூரிமடத்திற்கோ, மேற்கே நிறுவப்பட்ட துவாரகாபீடத்திற்கோ, தெற்கே நிறுவப்பட்ட சிருங்கேரி மடத்திற்கோ கிடைக்காத புகழ்,அதிகாரம் போன்றவை கும்பகோணம் குட்டி சங்கராச்சாரி ஒருவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள காஞ்சிமடத்திற்குக் கிடைத்த மர்மம் என்ன ?

அரண்மனைச் சூழ்ச்சி போன்றது தான் இதுவும்.

ஜெயேந்திரசரசுவதி ஒரு ஸ்மார்த்தர்;சிவஙோயில் கொடிமரத்தைத் தாண்டி அவ்ர் உள்ளே போனால் கோயிலுக்குத் தீட்டு என்று சொல்லப்படுகிறது.அதே ஜெயேந்திரசரசுவதி தமிழில் குடமுழுக்குச் செய்தால் கோயில் தீட்டாகிவிடும் என்று கூறுவது வரலாற்றுமுரண்! ஸ்மார்த்தர் என்பவர் சிவதீட்சை பெறாதவர்.அவ்ர் சிவ,வைணவக் கோயில்களில் நுழையக் கூடாது.

ஸ்மார்த்தர்க்கு ஆகமம் எதுவும் கிடையாது.ஆகமம் என்பது கோயில் கட்டுமான விதிகள். ‘சேரிப்பிரவேசம் ‘ செய்யும்போது காலில் பட்டுத்துணி கட்டிக்கொள்வார் ஜெயேந்திரர்.தாழ்த்தப்பட்டவர்கள் தமது காலைத்தொட்டு வணங்கிவிட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற எச்சரிக்கை அவ்ருக்கு. தலித் என்றால் கோயிலுக்குள் வராதே; ஆதிதிராவிடர் என்றால்குளித்துவிட்டு வா என்று ஜெயேந்திரர் கூறுவது, பிச்சைகேட்டு வந்தவன் வீட்டுக்குரியவனை வெளியேபோ என்று சொன்னது போல் இஉள்ளது.

ராமர்,சிவன் என்பதெல்லாம் வெறும் மாயை;பிரம்மம் மட்டுமே அசலானது என்று பேசவேண்டிய அத்வைதத் துறவியான ஜெயேந்திரர் அயோத்தியில் ராமர்கோயில் கட்டக் காட்டும் வெறி, செய்யும் சூழ்ச்சி அவரது தத்துவார்த்த ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.தேர்தல்கட்சித் தலைவர்களின் தில்லுமுல்லுக்குச் சற்றும் குறையாத தத்துவார்த்தத் தில்லுமுல்லுக்குச் சொந்தக்காரர் சங்கராச்சாரியார். காஞ்சி சங்கரமடம் அமைந்ததே ஒரு தில்லுமுல்லு தான்.

ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரிமடத்தின் ஒரு கிளையாக கும்பகோணத்தில் இருந்த சங்கரமடத்தைத் தான் பிற்காலத்தில் காஞ்சிபீடமாக மாற்றியிருக்கிறார்கள்.வெள்ளையர் ஆட்சியில் அதிகாரிகளிடம் பேசி,காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலை குத்தகை போல் எழுதி வாங்கியிருக்கிறார்கள்.அதிகாரிகள் ஆதரவோடு காஞ்சிபீடத்தை நிறுவியிருக்கிறார்கள்.

தொன்று தொட்டு காஞ்சிபீடம் இருப்பதுபோல் பின்னர் சான்றுகளை உருவாக்கிக் கொண்டார்கள். ‘தக்ஷிணாம்னாய பீடம் சிருங்கேரியா ? காஞ்சியா ? ‘ என்ற நூலை அனைத்திந்திய

பகவத்பாத சிஷ்யர்கள் சபை- மதுரை,வெளியிட்டுள்ளது.காஞ்சிபீடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது என்று நிரூபிக்க,காஞ்சிமடத்தார் கையாண்ட சூழ்ச்சிகளை இந்நூல் அம்பலப்படுத்தியுள்ளது.(பக்கம் 31,32) காஞ்சிப்பெரியவாள்களின் விளம்பர உத்தியையும் அந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

‘1. பிரச்சாரத்துக்கு வித்வாஙளைத் தேர்ந்தெடுத்துச் சால்வைகள்,சம்பாவனை கொடுத்து, அவர்கள் செய்யும் இராமயண,மகாபாரதப் பிரசங்கங்களில்,காஞ்சி பெரியவாளை ‘நெல்பொரி சாப்பிட்டுக் கொண்டு விரதமாக இருக்கிறார். நடமாடும் தெய்வம் ‘ என்றவிதமாகப் புகழ்ச்சியாகக் கூறச்செய்வது.

2. பத்திரிகை ஆசிரியர்களின் கட்டுரைகளால்காஞ்சி காமகோடி இபீடம் ஜெகத்குரு என்ற பட்டத்தை நிலைபெறச் செய்தும்,இன்னும் அவருக்கு இல்லாத உரிமைகள் பல இருப்பதுபோல வெளியிடச் செய்வதன் மூலம் தனக்கும் தனது மடத்துக்கும் பெருமையைச் சம்பாதிப்பது.

3. பாரததேசத்தில் ஆங்காங்கு சர்க்கார் உத்தியோகம், அதிகாரம், செல்வாக்கு உள்ள மடத்து சிஷ்யர்கள் மூலம் மடத்துக்குச் சலுகைகள்,ஆதரவுகள்,பிரச்சாரங்கள்,பணவசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டிருப்பது (மதராஸ் சர்க்கார் மூலம் வியாசா, சலிய சங்கர விஜயம்,ஆனந்தானந்தகிரி சங்கர விஜயம் வெளியிடச் செய்தது இந்தவகையில் அடங்கும்.)

யிது போன்ற பிரச்சார பலத்தால் மடத்துக்கு ஒரு பிரகாசத்தை உண்டுபண்ணிவிட்டனர். ‘ (மேற்படி நூல்)

காஞ்சிமடம் நிறுவப்பட்ட முறையும்,அது தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் உத்தியும் நேர்மையற்ற வழி சார்ந்தவை என்பது மட்டுமல்ல. அது தனது தத்துவார்த்தத்திலும் நேர்மைக்குறைவாக நடந்துகொள்கிறது.

பேரண்டத்தில் உள்ள ஒரே ஒரு பொருள் பிரம்மம் மட்டுமே.பிரம்மத்தின் கூறுகளாக- பிரதி பிம்பங்களாக ஏனைய எல்லாப் பொருட்களும் இருக்கின்றன. ‘நானே பிரம்மம் ‘ என்று அறிவதே ஞானம் என்று அத்வைதம் கூறுகிறது. சமஸ்கிருத மொழியில் அத்வைதம் என்பது யிரண்டு அல்லாதது(ஒன்றே) என்ற பொருளைக் குறிக்கிறது. துவைதம் என்றால் யிரண்டு

அ-துவைதம் என்றால் இரண்டு அல்லாதது. (யோக்கியன், அயோக்கியன்) என்பதைப் போன்றது).

அத்வைதத் தத்துவப்படி தாழ்த்தப் பட்டவனும்,சூத்திரனும் பிரம்மத்தின் கூறு தான்.

‘பிரபஞ்சம் பிரம்ம மயம் ‘ என்ற கொள்கையை நேர்மையாகக் கடைப்பிடித்தால்,பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகராகக் கூடாது என்றோ, தமிழ்மொழியில் அர்ச்சனை செய்யக் கூடாது என்றோ சங்கராச்சாரியார் சொல்லமாட்டார். கரூரில் தமிழ்வழியில் நடந்த குடமுழுக்கால் சாமி தீட்டுப்பட்டுப் போனார் என்று அறிவித்த ஜெயேந்திரசரசுவதி ஒரு தத்துவார்த்த ஒழுக்கக்கேடர்!

கடலில் தண்ணீர் இருக்கிறது. அதுவே அலையாக,நுரையாக, மாறினாலும் அடிப்படையில் தண்ணீரே என்று அத்வைதம் கூறுகிறது. தண்ணிரிலும் அலையிலும் உயர்வு தாழ்வு பாராட்டாதபோது, பிரம்மத்தின் கூறுகளாகியமனிதர்களில் உயர்வு தாழ்வு பாராட்டுவதேன் ? அதுவும் ஆண்டவன் சந்நதியிலும் கருவறையிலும் மனிதர்களில் பெரும்பான்மையினரைத் தீ ீண்டத்தகாதவராக்கியது அத்வைதத் தத்துவத்துக்கு உரிய செயலா ?

‘காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் ‘

‘தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா ‘ என்று பாரதி பாடியது அத்வைதக் கோட்பாட்டின் ஒருவகை விளக்கமாக உள்ளது.

வேதமே சுய அத்தாட்சி உடையது, வேதாந்த சித்தாந்தங்களின் உண்மை தர்க்கத்தையோ, அறிவையோ சார்ந்திருக்கவில்லை என்று கூறுகிறார் ஆதிசங்கரர். இதன்படி பார்த்தால் வேதாந்தம்,சித்தாந்தம் என்பவை ஆகமம் என்று சொல்லப்படும் நடைமுறையைச் சார்ந்திருக்கவில்லை. எனவே, சங்கராச்சாரியார் ஆகமம் பற்றிப் பேசுவது தத்துவார்த்த ஒழுக்கக் கேடாகும்! ஆகமத்திற்கும் அத்வைதத்திற்குமெந்தத் தொடர்பும் கிடையாது.

தமிழ்முனிவரான பேருர் சாந்தலிங அடிகளார், ‘ஆகமம் என்பது தமிழர் வழிபாட்டுமுறை தான்; இது ஆரியர்க்குரிய கோட்பாடு அன்று, இன்ன சாதியார் தான் அர்ச்சகராக வேண்டும் என்றோ,இன்ன மொழிதான் அர்ச்சனை மொழியாக இருக்கவேண்டுமென்றோ ஆகமத்தில் நிபந்தனை எதுவும் இல்லை என்று அடித்துக் கூறுகிறார்.ஜெயேந்திர சரசுவதி மட்டுமல்ல, இவருக்கு முன்பிருந்த சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியும் இவர்கள் அனைவருக்கும் மூலவரான ஆதிசங்கரரும் கூட தத்துவார்த்த ஒழுக்கக் கேடர்களே!

அத்வைதம் படைத்த ஆதிசங்கரரிடம் மண்டிக்கிடந்த மனஅழுக்கை இர்ரகுல சாங்கிருத்தியாயன்,தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா போன்ற மார்க்சிய அறிஞர்கள் கண்ணாடியில் ஒட்டிய கருப்புமை போல் தெளிவாக எடுத்துக் காட்டினர்.மாண்டூக்ய உபநிடதத்திற்கு விளக்கவுரை எழுதிய கவுடபாதர் தமது ‘மாண்டூக்ய சாரிகா ‘வில் பவுத்த தத்துவமான விஞ்ஞான வாதத்தை எடுத்துக்கையாண்டிருப்பதை இராகுலசாங்கிருத்தியாயன் தமது இஇந்துத்தத்துவ நூலில் விளக்குகிறார்.

ந்தக் கவுடபாதரையும், பெளத்த அறிஞரான நாகார்ச்சுனரையும் அடியொற்றி ஆதிசங்கரர் தமது ‘பிரம்ம ‘ கோட்பாட்டை வகுக்கிறார்.ஆதிசங்கரர் கி.பி.எட்டு-ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்தவர்.(கி.பி. 788-820).கவுடபாதர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பவுத்த தத்துவ மேதையான நாகார்ச்சுனர் சூனியவாதம் பேசுகிறார்.இந்த சூனியவாதம்- சங்கரஇரின் மாயாவாதம் ஆகிறது.ஆனால் சூனியவாதத்துக்கும் மாயாவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. ‘எல்லாப் பொருள்களும் வானத்தைப் போல் சூனியமானவை;பிறப்பும் இறப்பும் செய்வினையை அனுபவிப்பதும் எதற்குமேயிஇல்லை. ‘ என்பது சூனியவாதமாம்.சங்கரரின் மாயாவாதம் பின்வருமாறு கூறுகிறது. ‘எல்லாம் ஒன்றுதான்; ஆனால் மாயையின் காரணமாக வெவ்வேறாகத் தோன்றுகின்றன.வெவ்எறாகத் தோன்றுபவைகளுக்கு வெவ்வேறு வடிவமும் செயல்பாடும் இருப்பதால் அவையே நடைமுறை அனுபவங்கள் ஆகின்றன. களிமண்ணும் தங்கமும் ஒன்றுதான். ஆனால் மாயையின் காரணமாக இரண்டிற்கும் வெவ்வேறு பெயரும் வடிவமும் இருப்பதால்,அவற்றிற்கு வெவ்வேறு செயல்பாடும் இருக்கின்றது. மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான்.ஆனால் மாயையின் காரணமாக நான் கு வர்ணங்களாக சாதிகளாகப் பெயரிடப்பெற்று,வெவ்வேறு உருவம் பெற்று இருப்பதால் அவர்கள் தத்தமக்கு என்று தனிச் செயல்பாடுகளும் கொண்டுள்ளனர். ‘ ‘அவரவர் செயல்பாட்டைச் செய்வதன் மூலமே அஞ்ஞானம் நீங்கி மாயை விலகி, ஞானம் பெற்றுபிரம்மத்தோடு ஒன்று சேர்வார்கள், ‘ சங்கரரின் மாயாவாதம் குறித்து இராகுலசாங்கிருத்தியாயன் கூறும் குற்றச்சாட்டு இதோ: சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், அக்கிரமங்களையும், அனியாயங்களையும் தொடாமல் அப்படியே பாதுகாக்கும் வலுவான ஆயுதமாக விளங்கும் சங்கரரின் மாயாவாதம் இதுதான்! ‘. ‘மனிதர்களிடையே உள்ள அஞ்ஞானத்தால் தான் வெவ்வேறு சாதிகளும் வெவ்வேறு பெயர்களும் அவற்றின் வெவ்வேறு செயல்பாடுகளும் தோன்றின என் கிறார் சங்கரர். ‘ ‘கண்ணாடியில் தோன்றும் நமது முகம் எப்படி உண்மையில்லையோ அப்படித்தான் சாதிகளும் பிரமை. அந்த பிரமையானது அஞ்ஞானம் நீங்கும்போது நீங்கும். அதுவரை செயலில் இருக்கும் ‘ எஙிறார் சங்கரர்.

பிரம்மம் மட்டுமே உள்ள ஒருமை உலகத்தில் அஞ்ஞானம் எங்கிருந்து வந்தது ? ‘ பிரம்மத்தை மறைத்துக்கொண்டு ஓர் அஞ்ஞானத்திரை இருக்கிறது என்கிறார் சங்கரர். அது துவைதம் அல்லவா ?பிரம்மம் ஒன்று- அஞ்ஞானம் இரண்டாவது அம்சம், ஆக ஒருமைவாதம் பேசும் சங்கரர் யிஇருமைவாதத்தில் போய்விழுகிறார். காரணம் நால்வருண வேற்றுமையை நிலைநாட்டவேண்டும் என்ற அவரது பார்ப்பனீயப் பார்வையேயாகும்! அறியாமை(அவித்யா) என்பது அஞ்ஞானம். பிரம்மம் என்பதே ஞானம்.முன்னது இருள்; பின்னது ஓளி ஒளியின் மேல் எப்படி இருள் விழமுடியும் ? இதுதான் பார்ப்பனீய மாயாவாதம்!

ஒருமை(அத்வைத)வாதியான சங்கரர் கடைசியில் யிஇருமை(துவைத)வாதியைப்போல், அடிமைகள்கடைத்தேற நான்கு வழிகள் சொல்கிறார்.

1.நிலையான, நிலையற்ற பொருட்களின் வேறுபாட்டை அறிவது. 2,இவ்வுலகத்தினதும் மறு உலகத்தினதும் பலன்களை அனுபவிக்காமல் தனித்து நிற்பது. 3. மனதையும் புலன் களையும் கட்டுப்படுத்துதல்;தியாகமனப்பான்மை; துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதல். 4. முக்திபெறக் கோருதல். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதல் என்பதாகும்.

ஆதிசங்கரர் குறித்து விவேகானந்தர் செய்த விமரிசனம் பலரின் விரிவான கவனத்திற்குப் போகவில்லை.அவர் கூறுகிறார்.: ‘ஆதிசங்கரரின் மூளை கூர்மையானது; யிதயமோ குறுகலானது. ‘ பேரண்டம் முழுவதும் பிரம்மம் மட்டுமே என்று ஒருமைவாதம் பேசிய சங்கரர் உயர்வு தாழ்வு கூறும் நால்வருணத்தை ஏற்றுக்கொண்டு, தனது தத்துவத்திற்கே துரோகமிழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களின் தத்துவ ஒழுக்கக்கேடுகள் பட்டியலிட்டு மாளாது.

1929 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் காந்தியடிகள், அப்போது அங்கு முகாமிட்டிருந்த பெரியவர் சந்திரசேகரரைப் பார்க்க விரும்பினார்.காந்தி வைசியர். அவரை மாட்டுத் தொழுவத்தில் வைத்து சந்தித்தார் பெரியவர்.அங்கு வாலாட்டிக் கொண்டு நின்ற பசு காந்தியைச் சந்தித்ததால் உண்டான தீட்டை அவ்வப்போது கழித்துக் கொண்டிருந்ததாம். யிஇதே பெரியவர், 1947-48 ல் காஞ்சிமடத்திற்கு 6 அவுன்ஸ் அரிசி ரேசன் பெற, மிகைப்படுத்தப்பட்ட கணக்குகளைச் சொன்னார்.அப்போது காஞ்சியில்பங்கீட்டுச் சிறப்பு அலுவராக கீ.ஈராமலிங்கனார் (பின்னர் ஆட்சி மொழிக் காவலர்) பணியாற்றினார். யானைகள்,குதிரைகள்,ஒட்டைகள், வேலைக்காரர்கள் என்று நிறையகணக்குச் சொல்லி ரெசன் கூடுதலாகக் கேட்டார் பெரிய சங்கராச்சாரியார்.இந்தக் கணக்கைச் சரிபார்க்காமல் ரேசன் அனுமதிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார். பெரியவர் ராமலிங்கனாரை மடத்துக்கு வரவழைத்து மண்டபத்தில் தம் கோரிக்கைகளையும் கணக்குகளையும் சொன்னார். ஈராமலிங்கனார் வடக்கு நே¢ாக்கி நிற்க,சந்திரசேகரேந்திரர் கிழக்கு நோக்கி நின்று கொண்டு சம்ஸ்கிருதத்தில் கோரிக்கைகளைச் சொன்னார். தமிழில் இன்னொருவர் மொழிபெயர்த்தார். திரும்பி வரும்போது வருவாய் அலுவலரிடம், இராமலிங்கனார் சங்கராச்சாரி ஏன் தமிழில் பேசவில்லை என்று கேட்க அதற்கு அவர், முற்பகலில் நீச பாஷையில் பேசமாட்டார். பிற்பகலில் தான்தமிழில் பேசுவார் என்று விடையளித்துள்ளார்.

வைசியரான காந்தியடிகளை மாட்டுத் தொழுவத்தில் வைத்துப் பேசினார். அரிசி வாங்குவதற்காக சூத்திரரான கி.ஈராமலிங்கனாரை மண்டபத்தில் வைத்துப் பேசினார்.வளர்பொழுது வேளையில் தமிழ் போன்ற நீசபாஷையில் பேசினால் அம்மொழி வளர்ந்து விடுமோ என்ற கவலையில் சம்ஸ்கிருதத்தில் பேசினார்.இ வர்தாம் சங்கராச்சாரியார்! அத்வைதம் இவர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி! பச்சைப் பார்ப்பன வெறியர் தாம் சங்கரர் தொடங்கி இன்றுவரை உள்ள சங்கராச்சாரிகள் ஏற்கெனவே பூரிசங்கரச்சாரி தீண்டாமை எனது பிறப்புரிமை என்றார்.

பிரதமராக இருந்தாலும் விதவை என்பதற்காக இந்திரா காந்தியைக் கிணற்றடியில் வைத்துத்திரை மறைவில் உரையாடினார் சந்திரசேகரேந்திரர்.ஜெயேந்திரசரசுவதியோ,வேலைக்குப்போகும் பெண்கள் விபச்சாரிகளைப் போன்றவர்கள் என்றும்,(குமுதம் நேர்காணலில்)விதவைப் பெண்களை மறுமணம் செய்வதால் எய்ட்ஸ் நோய் வரும் என்றும், விதவைப்பெண்கள் தரிசுநிலம் என்றும் கூறிவருகிறார்.

காஞ்சி சங்கரர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனிவிடுதி வைத்துள்ளார் ஜெயேந்திரர். அயோத்தி பாபர்மசூதி இடிப்புச் சிக்கலில் நடுநிலையாளர் போல் நடித்துச் சமரசமும் பேசிவந்த ஜெயேந்திரரின் நரிமுகம் அவர் 1.7.2003 நாளிட்டு அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்திற்கு எழுதிய கடிதம் மூலம் அம்பலமானது. பாபர்மசூதியிஇருந்த இடத்தில் இராமர்கோயில் கட்டவேண்டும்.இ எசுலாமியர்கள் அஇதற்குச் சம்மதிக்க வேண்டும்; மட்டுமின்றி காசி,மதுரா,மசூதிகளையு ந்துக்கள் யிஇடித்து விட்டுக் கோயில் கட்டச் சம்மதிக்க வேண்டும் என்பதே ஜெயேந்திரர் சமரசம். அதாவது விசுவ இந்து பரிசத் தலைவர் தொக்காடியாவின் கோரிக்கைகள் இவை!

திருவாருர் மாவட்டம் கோட்டூர்க்கருகில் உள்ள இருள்நீக்கி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தாம் ஜெயேந்திரசரசுவதி. பார்ப்பனியத்தின் ஆன்மீக-அரசியல் தளபதி! மனிதநேயர்களும், தமிழர்களாய்ப் பிறந்தோரும் சங்கராச்சாரியார் மாயையிலிருந்து எந்த அளவு மீள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் பொதுத்தொண்டு செய்தவர்கள் ஆவார்கள்! இறைப்பற்றாளர்கள். குடமுழுக்குச் செய்வோர் சங்கராச்சாரியையும் சமஸ்கிருதத்தையும் புறக்கணிப்பது சிறந்த பொதுத் தொண்டாகும்.

துணை நூல்கள்: 1.இந்து தத்துவ இயல்- ராகுலசாங்கிருத்தியாயன்- என்.சி/பி.எச்.வெளியீடு 2, Advaita-A Conceptual Analysis – pRof.A.R.Ramamurthy, D.K.Print World(P) Ltd.,NewDelhi-110015 3. (காஞ்சி)சங்கராச்சாரி யார் ?-ஓர் ஆய்வு-கி.வீரமணி- திராவிடர் கழக வெளியீடு,சென்னை-600007. 4. அச்சுறுத்துகிறது ஆதிக்கமொழி-வி.நா.சோமசுந்தரம். 5. புலவர்.இறைக்குருவனார் அவர்களுடன் உரையாடல்.

***

தமிழர் கண்ணோட்டம் பத்திரிக்கையில் வெளியானதை அதன் ஆசிரியர் குழுவில் இருக்கும்

balajee40@yahoo.com (ராமச்சந்திரன் பாலசுப்பிரமணியன் அனுப்பியது)

Series Navigation