கோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue


தேவையான பொருட்கள்

இரண்டு பெரிய துண்டு கோழிக்கறி நெஞ்சுக்கறி. இதனை சிறிய சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்

ஊறவைக்க:

3 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

30 கிராம் இஞ்சி உரித்து வெட்டிக்கொண்டது

2 பெரிய பூண்டு, வெட்டி துண்டாக்கிக்கொண்டது

உப்பும், கருமிளகுத் தூளும் ருசிக்கேற்ப

***

2 மேஜைக்கரண்டி சோளமாவு

2 மேஜைக்கரண்டி சாதாரண மாவு

எண்ணெய் வறுக்க

2 எலுமிச்சைத் துண்டங்கள் அலங்கரிக்க

செய்முறை

1. கோழிக்கறி துண்டங்களை, சோய் சாஸ், இஞ்சி, பூண்டு உப்பு, கருமிளகுத் தூள் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்

2. சோளமாவை சாதாரண மாவுடன் சேர்த்துக் கலந்து கொண்டு, ஊறவைத்த கோழிக்கறி துண்டை எடுத்து , மாவில் பிரட்டி வைக்கவும்

3. எண்ணெயை 180 டிகிரி சூடாக்கி, அதில் கறித்துண்டங்களை 4-5 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை ஆழ வறுத்து , எலுமிச்சைத் துண்டங்களுடன் அலங்கரித்து பரிமாறவும்

Series Navigation