கோழிகளுக்கும் தேவை குடும்பம். அம்மா அப்பா சண்டையிட்டால் குஞ்சுகள் அசிங்கமாய் இருக்கும்

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

ஜான் விட்ஃபீல்ட்


குடும்பத்தில் நடக்கும் குழப்பம் குழந்தைகளைப் பாதிப்பது மனிதர்களிடையே மட்டுமல்ல. வரிக்குதிரை வடிவம் கொண்ட குருவிகள் மத்தியிலும் கூட இப்படித் தானாம். அப்பா இல்லாத குடும்பத்தில் அம்மாக் குருவிகள் வேலைகள் செய்ய சுணக்கம் காட்டும் . அதனால் அப்படிப் பட்ட குடும்பத்தில் உள்ள குட்டிக் குருவிகள் மற்ற பெண் குருவிகளைக் கவர்வதில்லை. வேலைகளில் சுணக்கம் காட்டினால், அவற்றின் குஞ்சுகள் சுணங்கிப் போகின்றனவாம். ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

குடும்பத்தில் வேலை செய்யாமல் தப்பிக்கவே ஒவ்வொரு குருவியும் முயற்சி செய்கிறது. ‘மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சோம்பேறித் தனம் காட்டுகிறார்கள் ‘ என்கிறார் லங்காஸ்டர் பல்கலைக் கழகத்தின் ஐயான் ஹார்ட்லி. இதனால் குழந்தைகள் பாதிக்கப் படுவது இப்போது தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த இனத்தின் பெண்குருவிக்கு இரண்டு குஞ்சுகள் இடுந்தால் அம்மாக் குருவி நிறைய வேலைகள் செய்கிறது. இதுவே நான்கு குஞ்சுகள் கொண்ட அம்மாக் குருவி அப்பாவுடன் இருந்தால் குறைந்த வேலை செய்கிறது. ஆனால் பெண் குருவிகள் ஒற்றைப் பெற்றோர் உள்ள குருவிகளையே விரும்பிக் கூடுகின்றன.

பறவைகள் சேர்ந்தே தான் வேலை செய்து , குஞ்சுகளைப் பராமரிக்கின்றன. ஆனால் எதிர்காலத்தில் எவ்வளவு வேலை செய்ய வேண்டியிருக்கும், எதிர்காலத்தில் பிறக்கப் போகும் குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்று எண்ணும் இவை, தற்போது குறைந்த சிரமம் மேற்கொள்கின்றன.

பெண்குருவிகளே குடும்பச் சுமையை பெரிதும் சுமக்கின்றன. ஆண் மட்டுமே பராமரிக்க வேண்டி வந்தால் பல சமயம், ஆண் குருவிகள் குஞ்சை விட்டுவிட்டுப் போய் விடுகின்றன.இதனால் பெண் குருவிகளின் வேலைச் சுமை குறைய வாய்ப்பு இல்லாமல் போகிறது.

ஒரு பெண் குருவி, என்னதான் முயன்றாலும் இரண்டு பெற்றோரின் பராமரிப்பை அளிக்க முடிவதில்லை. இதனால் பராமரிப்பின் தம் குறையக் கூடும் என்கிறார் ஹார்ட்லி. இதனால் எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் குறைந்த குஞ்சுகள் பிறக்க நேருகின்றன என்கிறார் ஹார்ட்லி.

Series Navigation