கோலம்

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

எஸ்ஸார்சி


அப்போது சென்னை பூக்கடையில்தான் மஃப்சல் பேருந்து நிலையம் இருந்தது. சென்னைக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவன் கடலூரிலிருந்து வந்து போவான். ஏதோ ஒரு சாக்கு. எப்படியோ கிடைத்துவிடும்..சொந்தக்காரர்கள் வீட்டு லெளகீக

விடயமோ.நண்பர்கள் கிரஹப்ரவேசமோ வந்து குதிக்கும். அப்படித்தான் இந்த முறையும் சென்னை வந்து திரும்பிக்கோண்டிருந்தான். மாம்பலம்

ரயில் நிலையத்தில் ரயில் பிடிப்பது அவனுக்கு

ஆகிிவந்திருக்கிறது. ரெங்கனாதன்தெருவில் புகுந்து வெளி வந்து விட்டால் குபேரபுரியை

தரிசித்ததாய் நினைத்துக்கொன்டு கோடிக்கடையில் கோன் அய்ஸ் வாங்கி சப்பிடுவான் .கடைத்தெருவுக்கு நடுவில் பிடாரிக்கணக்காய்

சிவப்புக்கூடாரம் ஒன்று நெரிசலை கட்டுப்படுத்தக்கட்டளை

பிறப்பிப்பித்துக்கொண்டுநிற்பதைக்கண்டு மனதிற்குள் எரிச்சல் கொள்வான்.

இந்தியாவில் எந்த முக்கில் சுற்றினாலும் இப்படி ஒரு ரம்மியமான வணிக வளாகம் இருக்குமா என்ன மனம் களிப்பான் . அமாவாசை தர்ப்பண கூர்ச்சத்திலிருந்து வைர ஒட்டியாணம் வரை இங்கு வாங்கிக்கொள்ளமுடிகிறதுதான். .இரவு இட்டலி கடை. நான்கு

இட்டலிகள்கிடாமாடு கணக்காய் சாம்பாரில் நீந்திக்கொண்டு ஒரு பத்து ரூபாயுக்கு கிடைக்கும். இது எத்தனை

பேருக்கு த்தெரியுமோ.

ரயில்வே பார்டர் நெடுக்கு காய்கறி க்கடை த்தெரு. பச்சைக்காய்கள்

கொட்டி கொட்டி கும்பல் கும்பலாய் போட்டா போட்டியில்.

ரயில்வே ஸ்டேசனும் பஸ் ஸ்டாண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாய். கருப்பு ஈ வெ ரா சிலையொடு அந்த பிரம்மா விஷ்ணுவுக்கும் கோயில்கள்.சவுண்டிதொடங்கி திவச இத்தியாதிகளுக்கும் ஆட்கள் கிடைப்பதொடு ஞான வாபியில் முடிந்து போவதற்கும் அசெளகரிய சவுரியங்கள். மெய்யாய் காதலித்து கை பிடிப்பதுவோ கரி பூசுவதோ நிஷ்காம்யமாய் பார்க் அனுசரணை.

.

அஞ்சி பாத் அஞ்சி பாத் பழ வியாபாரக்கூவல்களுக்கு இடையே வெளிநாட்டு சரக்குகளை தலையில் கட்டிக்கொள்ள குறுக்குத்தெருக்களும் உண்டு ? ஒன்றுக்கும் இரண்டுக்கும்போக காவடி தூக்காமல் சாதித்து விடவும் கூடும்.இடுக்குகள் அதிகம்.

மாமிகள் ஆவக்காய் ஊறுகாய் போட இங்கு தான் வெட்டிய மாங்காய்கள் வாங்கியாகவேண்டும். அதனை வெட்டும்அந்த அழகே அழகு. மணக்கும் பூக்களில் எத்தனை சாதிகள் உண்டோ அவை அத்தனையும் பெண்களின் கூந்தலில் அமர்ந்துவிட போர்க்களம் காண்பதுவும் இங்கே தான். உள்புகுந்து வெளி வரமுடியாத கூட்டத்தில் கண்கள் தெரியாது நான்கைந்து பேர்பாட்டுட்பாடி கோஷ்டி வசூல் செய்கிறார்களே என்பதையும் ஆச்சரியத்தோடு பார்ப்பான்.

கோட்டையில் இறங்க டிக்கட் வாங்குவதற்கு முன்பாக மாம்பல ரயிலடி விளையாட்டு விநாயகரை கும்பிட்டு அவன் பயணம் தொடங்கினான்.படிக்கட்டுக்கள் பல தாண்டி பிளாட்பாரத்தில் நின்று பீச்சுக்கு செல்லும் வண்டி பிடித்தான். அடிக்கொரு தரம் டிக்கட் இருக்கிறதா என்று சட்டையைத்தடவி ப் பார்த்துக்கொண்டான். அதனில் கோட்டை என்று எழுதி இருப்பதை ஊர்ஜிதம் செய்து மகிழ்ச்சி பாவித்தான்.

எக்மோர் வந்ததும் பெரிய பிளாட்பார்ம் பக்கமாய் கொஞ்சம் எட்டிப்பார்த்து முடித்தான். தந்தையொடும் தாயொடும் சிறுவனாய் இருந்தபோது மிளகாய்ப்பொடி பூசிக்கொண்ட இட்டலி சாப்பிட்டதையும் பித்தளை கூசாவில் தண்ணீர் கொன்டு வந்ததையும் எண்ணி மனக்குகையில் வழக்கமாய் அசைபோடுவான்.

வண்டி கோட்டை ஸ்டேஷனில் நிிற்க இறங்கி வேகு வேகு என நடந்தான்.வீம்புக்கு என்று சாலையில் நெட்டையாய் நிிற்கும் இரும்புப் பாலத்தைக்கடந்தான்.மணி எட்டுதான் ஆகிறது இரவு பதினொரு மணிக்குத்தான் இவன் தீர்மானம் செய்திட்ட அந்த கடலூர் வண்டி ஆக இன்னும் மூன்று மணி நேரத்திற்கு ஏதும் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தான்.

அண்ணாமலை அரசர் சிலை முக்கில் திரும்பி முத்தையா மன்றத்தை நோக்கிக்கொண்டு நிின்றான்.உள்ளே ஏதோ நிகழ்ச்சி நடப்பதாகத்தெரிந்தது.மன்ற வாயிலில் பத்மா சுப்ரமணியம் நடன நிகழ்ச்சி அங்கே நடைபெறுவதாய் எழுதி வைத்திருந்தார்கள்.இதுவும் தேவலாம்தான் என எண்ணினான். வாழ்க்கையில் பலதுகளை தவறவே விடக்கூடது என்று அவனின்நண்பன் மாத்ரு ஒரு பட்டியலே தந்திருக்கிறான்.அந்தப்பட்டியலில் பத்மா நடனமும் உண்டு.ஆகச்சென்று பார்த்து விடுவதாய் முடிவு செய்தான்.

அவன் மன்றத்தின் வாயிலில் அப்படியும் இப்படியும் உலாத்திக்கொண்டு

நின்றான்.கையில் ஒரு பத்து ஐந்து ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொண்டு கனத்தயோசனையில் இருந்தான்.உள்ளே நிகழ்ச்சி தொடங்கி நடந்து கொண்டிருந்தது.எங்கும் அமைதி நிலவ உள்ளிருந்து மட்டும் இன்னிசை பிரவாகித்துக் கொண்டிருந்தது.

யாரு என்ன அரங்க வாட்ச்மென் கேட்டான்

ப்ரொகிராம் பாக்குணும் சார்

கவுன்டர் மூடிட்டாங்க தம்பி

அதான் பாக்குறேன்

சரி ஒரு பத்து ரூவா குடு உன்

பையி. இங்கிட்டு இருக்கட்டும் நீீ போவயில எடுத்துகிலாம்

மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது இன்று நரி முகம்தான் என்று எண்ணிக்கொண்டான் கையில் டார்ச் விளக்கோடு வந்த வாட்ச்மென் அவனுக்கு ஒரு இருக்கை பார்த்துக்கொடுத்தான்.குளு குளு அறை. சாய்ந்துகால்களை நீட்டி அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கத் தொடங்கினான் அவன்.

வள்ளிக்குறத்தியாய் பத்மா. காணக்கண் கோடி வேண்டும்

என்பதாய்மனம் சொல்லி ஒளய்ந்தது. மேடையில் தில்லை கூத்தனின் சிலை அழகாய் சாட்சி க் கொலுவிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு பத்மா நடனம் என்றால் உயிர்தான்.

ஆனால் அரங்கினுள் எல்லோருமே அவனுக்கு தொட்ர்பில்லாதவர்களாய்

இருக்கட்டுமே என்று அவன் மனம் பீற்றிக்கொண்டது. பார்த்து விடவேண்டி முடிவு செய்த ஒன்று தானே யாரும்

இருக்கட்டும் நமக்கென்ன

ஆக நிறைவு. நிறைவேதான் என்று சொல்லிக்கொண்டான்

சார் கொஞ்சம். வெளியில வாங்க

தன்னை இருக்காது என்று நினைத்துக்கொண்டான்

அட உங்களைத்தான் சார்

அவன் சுதாரித்துக்கொண்டான். மெதுவாய் எழுந்து வந்து

என்ன சார் என்றான்

கொஞ்சம் வெளியில வாங்க சார் முதல்ல

ஏன்

நான்தான் இந்த நிகழ்ச்சிக்கு மானெஜர் தெரியுமா என்கிட்ட டிக்கட் வாங்காத யாரும் உள்ள வரமுடியாது

சரி

பின்ன எப்படி நீங்க வந்தீங்க

என்ன சார் இந்த மன்றத்து வாட்ச்மென் எங்க அம்மாவுக்கு தம்பி கடலூருக்கு பதினொரு மணிக்கு தான் எனக்கு பஸ் .மாமாதான் போயி உக்காரு நான் பஸ் ஏத்தீ உடறேன்னாரு. என் பையி கூட அவருகிட்டதான இருக்கு

சரிசரி போய் உக்காருங்க அவர் விருட்டென்று நகர்ந்து கொண்டார்

அதே நாற்காலியில் பொருத்திக்கொண்டு சொச்ச நிகழ்ச்சியையும் விடாமல் பார்த்து முடித்தான்.

நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாகவே அந்த வாட்ச்மென் அவன் இருக்கை நோக்கி வந்தான். நிகழ்ச்சி மானெஜர் தன்னை க்கேட்டதையும்.அதன்படி அவர் மாமா ஆனகதையும் சொல்லிக்கொண்டான்.

.ரூவா.கொடுத்ததை சொல்லுலயெ என் சாமி

அவன் கையை பிடித்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

பொயப்ப காப்பாத்துன நீ . இீ.ப்பதான் இந்த பத்து ரூவா மொத போணி

இன்னிக்கிவரைக்கும் துட்டு வாங்குனது இல்லே. யாரும் வந்து கேட்டதும் இல்லே.

அதையும் சொல்லுனும் மொத மொத நீ வந்தெ நானு பீயை துன்னுட்டென் என் நேரம்

அவன் இரு கைகளையும் மீண்டும் பிடித்துக்கொண்டான்.

மானெஜர் வாட்ச்மெனைத்தேடிக்கொண்டு அருகே வந்தார்.

ஏம்பா உன் அக்கா பைய்யனாமெ அது. குரல் உயர்த்திக்கொண்டார்

ஆமாம் சார் வண்டி பதினொரு மணிக்குன்னு சொன்னான் கேசுல கீசுல புடிச்சும் பூடுவானுவ உள்ளார பொயி குந்திகன்னேன்

அவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்

கலுதைக்கு என்னா தெரியிம். சும்மா நாற்காலில குந்தி கெடந்திருக்கும். அதான்.

என்கிட்ட மொதல்லயே சொல்லி இருக்குலாம்ல நீ

ஏன் சாரு அவன் எப்ப வந்தா நானு எப்ப சொல்லுறது

இல்ல நானூ கொஞ்சம் விரட்டி வுட்டன்பா

உடுவியா சாரு நம்ப பய இதுக்குபோயி

அவன் வாட்ச்மெனுக்கு கொடுத்த அதே பத்து ரூபாயை எடுத்து நீட்டி

மாமா கொடுக்கிறன் வாங்கிகு. எதானா ஒரு செலவுக்கு ஆவுது

நிகழ்ச்சி மானெஜர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நானு வற்றேன் மாமா போனா சரியா இருக்கும்

அந்த முத்தையா மன்ற வாயிலில் போடப்பட்டிருந்த தரை பெயிண்ட் கோலத்தை மட்டுமே மனத்திரையில் எண்ணியபடி மஃப்சல் பஸ் நிலயம் நோக்கி நடந்து கொண்டிருந்தான்அவன்.

—-

essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி