This entry is in the series 20081120_Issue

சக்தி சக்திதாசன்



சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் கோடி

சொல்லில் முடிக்கும் நிமிடங்கள் தேடி

அள்ளத் தவிக்கும் உணர்வுகள் கோடி

அள்ள முடியா நிமிடங்கள் தேடி

மெல்ல முடியா உணர்வுகள் கோடி

மெல்லத் தெரியா நிமிடங்கள் தேடி

தள்ள முடியா சோகங்கள் கோடி

தள்ளத் தெரியா நிமிடங்கள் தேடி

உள்ள ஊஞ்சலில் ஆடிடும் நினைவுகள் கோடி

உள்ளே புதைத்திடும் நிமிடங்கள் தேடி

வெல்ல முடியா யுத்தங்கள் கோடி

வெறுமையான நிமிடங்கள் தேடி

கிள்ளிப் பார்த்து நகைத்திடும் உறவுகள் கோடி

கிள்ள முடியாமல் தொலைந்திடும் நிமிடங்கள் தேடி

புள்ளி போடாக் கோலங்கள் வரைந்தது கோடி

புள்ளி போட்டே இணைந்திடும் நிமிடங்கள் தேடி

தெள்ளத் தெளிவாய் விளக்கிட முயன்ற வேளைகள் கோடி

தெளிந்த மன ஓடையில் நிமிடங்கள் தேடி

என்னைப் புரியாத உள்ளங்கள் உலகில் கோடி

என்னைப் புரிந்திட்ட உள்ளத்தின் நிமிடங்கள் தேடி

http://www.thamilpoonga.com

Series Navigation