கேள்விகள்

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

நிஷாந்தன்


அவர் நல்லவரா இவர் நல்லவரா
போனவர்கள் தோணியிலா அல்லது கரையிலா
பிள்ளைக்கு முகாமில் கிட்டுமோ நல்ல பால்
நெருங்கிய புல்டோசர் கிழித்திருக்குமா
பொ¢யவனின் பொம்மையை
திரும்பி வருதல் சாத்தியமா
வந்தாலும் இருக்குமோ வீடு
கேள்விகளாலும் நடுங்கிய தேகங்களாலும்
நிரம்பிய குழியை மீண்டும் நிரப்பியது
குண்டு.

Series Navigation

நிஷாந்தன்

நிஷாந்தன்