கூல்ஃபலூடா

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue


தயிர் –2கப்

பால் –4கப்

ஜவ்வரிசி –1/4கப்

பார்லி அரிசி –2டேபிள் ஸ்பூன்

சன் ஃபிளவர் ஆயில் –4டேபிள் ஸ்பூன்

வெள்ளரிக்காய் –1

கேரட் –1

ஆப்பிள் –1 (அ)1/2

மாதுளை முத்துக்கள் –1/4கப்

திராட்சைப் பழம் பச்சை(அ)கறுப்பு–10

முந்திரி பருப்பு –6

மிளகுப் பொடி –1/4ஸ்பூன்

பொடித்த உப்பு –தேவைக்கேற்ப

தயிரைக் கடைந்து கொள்ளவும், பின்னர் வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும் ஜவ்வரிசியைப் பொறித்தாற்போல் வறுத்து ஆற விட்டுத் தயிரில் சேர்க்கவும். இதே போல் பார்லி அரிசியையும் பொறித்தார் போல் வறுத்து ஆற விட்டுத் தயிரில் சேர்க்கவும். 3மணி நேரம் ஊற விடவும்.

பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெள்ளரிக்காய், காரட், ஆப்பிள், மூன்றையும் சன்னமாகத் துருவி பாலில் சேர்க்கவும். பாலில் இவைகளையெல்லாம் நன்கு கலக்கி பாலை குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும். தயிரில் ஜவ்வரிசி, பார்லி ஊறியதும், குளிர்பதனப் பெட்டியிலிருக்கும் மசாலாப் பாலை எடுத்து, இரண்டையும் ஒன்றாய்க் கொட்டி நன்கு கிளறவும். சிறியதாக ஒடித்த வறுத்த முந்திரி துண்டங்களை சேர்க்கவும்.

தேவையானால் கடைந்த தயிரோ, பாலோ வேண்டியது சேர்த்துக் கொள்ளலாம். அழகிய நீண்ட டம்ளர்களில் மூன்றாவதாய் தயார் செய்துள்ள கலவைகளை ஊற்றவும்.

இந்தக் குளிர்ந்த ‘கூல் ஃபலூடா ‘வில் திராட்சை 1,2, சில மாதுளை முத்துக்கள் ஒவ்வொரு டம்ளரிலும் கலந்து பரிமாறவும்.

Series Navigation