குழப்பங்கள்

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

ஸ்ரீனி.


விடியாத இரவுகள்
வெளிச்சப்புள்ளிக்கப்பால் வெறுமைகள்
மலைகளை வேலியாய் கொண்ட
நீண்ட வயல் வெளிகளின்
நடுவே சிக்கிய ஒற்றை மரத்தின் தனிமை.
நீரின்மேல்
காற்று ஏற்படுத்தும்
நிசப்தமான வளையங்கள்
மனித கூட்டத்தின் மத்தியில்
இருந்தும்
மறக்காத நினைவுகளாய் இவை மட்டும்.
சக்கரத்தின் ஒரு கம்பியாய் நானும்
இவர்களோடு சேர்ந்து சுற்றுகிறேன்.
இனம் புரியாத ஏதோ ஒன்று
என்னை பார்த்து கைகொட்டி சிரிக்கின்றது
காரணம் தெரியவில்லை.
செய்யும் செயல்களும்,
நடக்கும் நிகழ்வுகளும்,
சுற்றும் பூமியைப்போல்
தொடர்கின்றன.
ஏனோ மனதில் மட்டும் குழப்பங்கள்
உள்செல்வது உணரவே நமக்கு
வெகுநேரம் பிடிக்க
புதைந்து கொண்டு தான் இருக்கிறோம்
பயன் தெரியவில்லை
கண்ணை மூடினால் பிரகாசமாய் தெரியும்
இந்த கருப்பு புதைகுழிகள்.

Series Navigation